கன‌வுகளை புரிந்து கொள்ள‌ ஒரு இணையதளம்!

எல்லோரும் கனவு காண்கிறோம்.அவற்றை எல்லோரும் பெரும்பாலும் மறந்து போய் விடுகிறோம்.இதற்கு மாறாக கனவுகளை குறித்து வைத்து கொண்டால் எப்படி இருக்கும்?அப்படியே கனவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு கனவுகளுக்கான பொருளை தெரிந்து கொண்டால் எப்படி இருக்கும்?

‘டிரீம் சோன்’ இணையதளம் இந்த இரண்டையும் சாத்தியமாக்குகிறது.இந்த இரண்டும் கலந்திருப்பதே இந்த தளத்தை சுவாரஸ்யமாக்குகிறது.

காரணம் கனவுகளை குறித்து வையுங்கள் என்றால் பலருக்கு அதில் ஆர்வம் இருக்காது.ஆனால் நேற்று கண்ட கனவு உணர்த்துவது என்ன என்பதை அறிந்து கொள்வதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் இருக்கும்.கனவின் பொருளை அறிய அதனை உற்சாகத்தோடு பகிர்ந்து கொள்ள முன் வருவார்கள்.

இந்த நோக்கத்துடன் தான் டிரீம் சோன் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

அடிப்படையில் இந்த தளம் எளிமையானது.

நேற்று இரவு நீங்கள் கண்ட கனவு என்ன? என்பதை இந்த தலத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.இதற்காகவே பேஸ்புக் கட்டம் போல ஒரு கட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.அதில் கனவில் கண்ட காட்சியை விவரித்து விட்டு அந்த கனவின் வகையையும் குறிப்பிட வேண்டும்.இதற்கான பட்டியலும் அருகிலேயே இருக்கிறது.

கனவினை பகிர்ந்து கொண்ட பின் சக உறுப்பினர்கள் அதனை படித்து பார்த்து தாங்கள் அறிந்த வகையில் கனவிற்கான விளக்கத்தை வழங்குவார்கள்.விளக்கம் அளிப்பவர்கள் கனவுகளை அலசி ஆராய்வதில் உளவியல் புலிகளாக இருக்கலாம்,அல்லது ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே விளக்கம் தருபவராக‌வும் இருக்கலாம்.

எது எப்படியோ நேற்று கண்ட கனவின் பொருள் தெரியாமல் குழம்பித்தவிக்காமல்,அதற்கான அர்த்தத்தை யாரிடம் கேட்பது என தடுமாறாமல் கனவின் பொருளை அறிந்து கொள்ளலாம்.

நாம் கண்ட கனவில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டுமா என்ன?,மற்றவர்கள் கண்ட கனவுகளையும் படுத்து பார்க்கலாமே என்று நினைத்தால் தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கனவுகளையும் கூடவே அவற்றுக்கு மற்றவர்கள் அளித்த விளக்கங்களையும் படித்துப்பார்க்கலாம்.

அந்த ஆர்வம் வந்து விட்டால் இந்த தளம் கனவுகளின் பொக்கிஷமாக காட்சி தரும்.

சமீபத்தில் பகிர்ந்து கொண்ட கனவுகள்,பிரபலமான கனவுகள் ஆகிய தலைப்புகளில் கனவுகளை படிக்க முடிவதோடு கனவுகளை வகைகளுக்கு ஏற்ற தலைப்புகளின் கீழும் கனவுகளை படிக்கலாம்.

விசித்தரமானது முதல் வியப்பூட்டக்கூடியது வரை வித‌விதமான கனவுகளை படிக்கும் போது மனித மனதின் ஆழத்தையும் விசாலத்தையும் தெரிந்து கொள்ளலாம்.அப்படியே கனவுகளுக்கான விளக்கங்களை படித்துப்பார்க்கும் போது உளவியல் நோக்கில் அவற்றை எப்படி புரிந்து கொள்வது என்பதற்கான குறிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆர்வமும் அனுபவமும் நாமும் கூட பிறரது கனவுகளை பகுத்தாய முற்பட வைக்கலாம்.அந்த ஆர்வம் ஏற்பட்டால் இன்னும் விளக்கப்படாத கனவுகளின் பட்டியலை பார்க்கலாம்.

அதிக அளவில் கனவுகளுக்கு விளக்கம் அளித்த முன்னிலை பெற்றவர்களி பட்டியலும் இதற்கு ஊக்கம் அளிக்கிறது.

ஆக இந்த தளத்தில் கனவுகளை பகிர்ந்து கொள்ளலாம்,கனவுகளுக்கு விளக்கம் தரலாம்.

விரும்பினால் கனவு டைரியை துவங்கி தினம் காணும் கனவுகளை குறித்து வைக்கவும் செய்யலாம்.

நாம் காணும் கனவுகளில் 90 சதவீதம் மறக்கப்பட்டு விடும் நிலையில் கனவுகளை பகிர்ந்து கொண்டு அவற்றை சேகரித்து வைப்பது மிகவும் அவசியமாகிறது என இந்த தளத்திற்கான முன்னுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த வகையில் கனவுகளை பகிர்ந்து கொண்டு அதனை புரிந்து கொள்வதற்கான இருப்பிடமாக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனவுகளை பகுப்பாய்வதற்கான உளவியல் இயந்திரமாக விளங்க வேண்டும் என்ற நோக்கமும் கொண்டுள்ள இந்த தளம் இதில் பாய்ந்தோடு கனவுகளின் பிரவாகத்தில் மனித குலத்தின் ஆழ் மன செயல்பாட்டை புரிந்து கொள்ளவும் வழி வகுக்கும் என்று நம்புகிறது.

உளவியல் அமைப்பின் இணையதளம் போல உள்ள இந்த இணையதளத்தை இரண்டு நண்பர்கள்(கனவுகளில் ஆர்வம் கொண்ட இரு நண்பர்கள்.) உருவாக்கியுள்ளனர் என்பது கொஞ்சம் வியப்பானது தான்.

கனவுகளை பகிரவும் அவறை மற்றவர்களால் விளக்கம் தரப்படவும் வாருங்கள் என்று அழைப்பும் விடுக்கும் இந்த தளம் கனவுகளை புரிந்து கொளவதற்கும் விளக்கம் தருவதற்குமான உளவியல் பால பாடத்தையும் சுருக்கமாக வழங்குகிறது.

அருமையான தளம்.தூக்கத்தில் நாம் மேற்கொள்ளும் புதிரான பயணங்களை பகிர்ந்து கொள்ளவதற்கான இடமாக விளங்கும் இதில் உள்ள ஒரே குறை கனவுகளுக்கான மந்திர சாவியை தந்து இன்டர்பிரடேஷன் ஆப் டிரீம்ஸ் என்னும் புத்தகத்தின் மூலம் வழங்கிய உளவியல் தந்தை சிமன்ட பிராய்டு பற்றிய எந்த குறிப்பும் இல்லாததே!

இணையதள முகவரி;http://dreamdoze.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கன‌வுகளை புரிந்து கொள்ள‌ ஒரு இணையதளம்!

  1. நல்ல அருமையான தளம் கூறியதற்கு நன்றி…போய் பார்கிறேன்…

    Reply
    1. cybersimman

      அவசியம் சென்று பாருங்கள்.மகிழ்ச்சி அடைவீர் நண்பரே.

      Reply

Leave a Comment to chinnamalai Cancel Reply

Your email address will not be published.