சைபர்சிம்மன் கையேடு தயாராகிறது-3

சைபர்சிம்மன் கையேடு முயற்சிக்கு இது வரை வந்துள்ள பின்னுட்டங்கள் வியப்பையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. இந்த தொகுப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று உங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளீர்கள் . எனது நம்பிக்கையும் அது தான்.இந்த தொகுப்பை ஆர்வ‌த்தோடு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளீர்கள்.இது மேலும் ஊக்கத்தை அளிக்கிறது.

சைபர்சிம்மன் கையேடு என்பது ஏற்கனவே நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு நூலாக உருவாகிறது என்ற போதிலும் இது வெறும் தொகுப்பு நூல் மட்டும் அல்ல. இணையத்தின் சிறப்புக்களை அதன் பயன்பாட்டுத்தன்மையை அது உண்டாக்கி தந்துள்ள வாய்ப்புகளை உணர்த்திய தளங்களையும் மனிதர்களையும் பற்றி எழுதி இருக்கிறேன்.இப்போது திரும்பி பார்க்கையில் அவர எந்த அள‌வுக்கு பொருத்தமாகவும் காலாவதியாகாமலும் இருக்கின்றன என்பதை உறுதி செய்து மேலதிக தகவன்க‌ளோடு பதிவுகளை புதிப்பித்து சேர்க்க திட்டமிட்டுள்ளேன்.

சொல்லப்போனால் புதிய பதிவு எழுதுவதை விட பழைய பதிவை செப்பனிடுவது அதிக உழைப்பை கோருகிறது. இருப்பினும் புத்தகமாக ஒருசேர படிக்கும் போது இந்த பதிவுகளின் பொதுத்தனமை மற்று வேறுபாடு தரக்கூடிய அனுபவம் சுவார்ஸ்யமானதாகவும் பயந்தரக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன். இது என் மீது உள்ள நம்பிக்கை அல்ல.இணையத்தின் மீதுள்ள நம்பிக்கை.

அதிலும் சமூக நோக்கில் இணையம் உண்டாக்கி தந்துள்ள வாய்ப்புகளை பதிவு செய்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

முழுக்க முழுக்க இந்த வலைப்பதிவின் வாசகர்களாகிய நீங்கள் அளிக்கும் ஊக்கத்தின் ஆதரவால் இந்த தொகுப்பை உருவாக்கும் துணிவு பெற்றிருக்கிறேன்.

தொடர்ந்து தங்கள் ஊக்கம் தேவை

அன்புடன் சிம்மன்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சைபர்சிம்மன் கையேடு தயாராகிறது-3

  1. அன்பின் சைபர் சிம்மன் – கையேடு அனேக வாசகர்களால் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப் படும் ஒன்று. – மேலதிகமான தகவல்கள் தரத் திட்டமிட்டிருப்பது நன்று – அதிக உழைப்புடன் பழைய பதிவுகளைச் செப்பனிட்டு இடுவது பாராட்டுக்குரிய செயல். இணையம் உண்டாக்கித் தந்துள்ள வாய்ப்புகளை பதிவு செய்து பகிர்ந்து கொள்ள விரும்புவது நல்லதொரு செயல் சிம்மன். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      நன்றி நண்ப‌ரே.தொகுப்பு நூலில் எந்த வகையான பதிவுகள் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். மேலும் தொகுப்பிற்காகவே புதிய பதிவுகள் எழுதவும் திட்டமிட்டுள்ளேன்.புதிய பதிவுகள் எப்படி இருந்தால் சிற்ப்பாக இருக்கும்? தெரிவிக்கவும்.

      அன்புடன் சிம்மன்

      Reply
  2. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    Reply
    1. cybersimman

      உங்களை போன்றவர்கள் பின்னூட்டம் வழியே தெரிவிக்கும் கருத்துக்கள் தான் ஊக்கமளிக்கின்றன.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment to cybersimman Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *