சரியான பரிசுப்பொருளை தேர்வு செய்வது எப்படி?

Wishpickerஎன்ன பொருள் வாங்குவது என்பது? பரிசுப்பொருள் வாங்க முற்ப‌டும் போது எல்லோருக்கும் ஏற்படகூடிய குழப்பம் தான். வாங்கித்தரும் பரிசுப்பொருள் வழக்கமானதாக இல்லாமல் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என் நினைப்போம்.அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்! அது மட்டுமா?

பரிசளிப்பது என்பது வெறும் சம்பரதாயம் மட்டுமா என்ன? அது அன்பின் வெளிப்பட்டும் அல்லவா? அதனால் தான், பரிசுப்பொருள் தேர்வு செய்யும் போது பலரும் அதற்காக மெனக்கெட விரும்புகின்றனர்.பரிசுப்பொருளை  பிரித்து பார்க்கும் போதே அதை பெறுபவரின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கின்றனர்.

இது போன்ற நேரங்களில் நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் விசாரித்து,கடை கடையாக ஏறி இறங்க வேண்டியிருக்கும்.இந்த சுமையை குறைத்து பரிசுப்பொருளுக்கான தேடலுக்கு விடையாகும் வகையில் விஷ்பிக்கர் தளம் உருவாக்கப்ப‌ட்டுள்ளது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல விஷ்பிக்கர் பரிசுப்பொருள் தேடலில் எதிர்படக்கூடிய இரண்டு கேள்விகளுக்கும் விடையாக அமைகிறது.அதாவது என்ன பொருள் வாங்குவது? எங்கே வாங்குவது? ஆகிய இரண்டு கேள்விகளுக்கும் இந்த தளம் தீர்வாகிறது.

பொருத்தமான பரிசுப்பொருளை தேர்வு செய்ய விரும்புகிற‌வர்களுக்கு அழகான அருமையான வாய்ப்புகளை இந்த தளம் முன் வைக்கிறது.இதற்காகவே முகப்பு பக்கத்தில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் பரிசுப்பொருள் யாருக்கு, அவரது வயது வரம்பு என்ன? பரிசளிப்பதற்கான நிகழ்வு என்ன? போன்ற  விவரங்களை இந்த கட்டங்களில் குறிப்பிட வேண்டும். உடனே இந்த தளம் பொருத்தமான பரிசுப்பொருட்களை பட்டியலிடுகிறது.அந்த பட்டியலில் இருந்து விருப்பமானதை தேர்வு செய்யலாம்.

முதல் கட்டத்தில் பரிசு அப்பாவுக்கா,அம்மாவுக்கா, மனைவிக்கா அல்லது நண்பருக்கா என குறிப்பிடலாம்.இரண்டாவது கட்டத்தில் அவர்களின் வயதை குறிப்பிட்டு விட்டு மூன்றாவது இடத்தில் பரிசளிப்பதற்கான காரணம் என்ன என குறிப்பிடலாம்.

பரிசுப்பொருட்கள் அனுபவமாகவோ அல்லது பொருட்களாக இருக்க வேண்டுமா என்றும் தீர்மானித்துகொள்ளலாம். இந்த தேர்வில் பரிசுக்கூப்பன்களும் உள்ளன.

பரிசளிக்கும் சூழலுக்கேற்ப விதமவிதமான பரிசுகளை பட்டியில் இருந்து சுலபமாக தேர்வு செய்தவுடன் இந்த தளத்தி இருந்தே வாங்கி கொள்ளும் வசதியும் இருக்கிறது. எனவே எங்கு வாங்குவது என்ற கவலையும் இல்லை.

இணையம் முழுவதும் கிடைக்கும் பொருட்களில் இருந்து சிற‌ந்தவற்றை தேர்வு செய்து பட்டியலிட்டு பரிந்துரைக்கிறது இந்த தளம்.

ஒவ்வொரு பிரிவிலும் பட்டியலிடப்ப‌ட்டுள்ள பரிசுகளை பார்த்தும் சரியானதை தேர்வு செய்து கொள்ளலாம்.அழகான புகைப்படங்களோடு இந்த பரிசுகளை அலசிப்பார்ப்பதே ஆனந்தமாக இருக்கலாம்.

பரிசுப்பொருள் தேடலுக்கான ஓரிடச்சேவை
என சொல்லக்கூடிய இந்த தளத்தை தில்லியை சேர்ந்த அபூர்வ் பன்சல் என்னும் இளைஞர உருவாக்கியுள்ளார். தனது காதலிக்க பரிசளிக்க விரும்பிய போது பொருத்தமான பரிசை தேர்வு செய்ய வழி இல்லாமல் திண்டாடியிருக்கிறார். இதற்கான தீர்வை தானே உருவாக்க தீர்மானித்து நண்பருடன் சேர்ந்து விஷ்பிக்கர் தளத்தை உருவாக்கினார்.

இது தொடர்பாக தனது அனுபவத்தை யுவர்ஸ்டோரி தளத்தில் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் ஒரு சுவாரஸ்யமான விஷ‌யமும் இருக்கிறது.அதாவது காதலிக்கு பரிசாக நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு அழைத்து சென்றிருக்கிறார்.ஆனால் இதனிடையே வேலையை விட்டுவிட்டு விஷ்பிக்கர் இணையநிறுவனத்தை துவக்கியதால் விருந்துக்கான பில்லை காதலி தான் கொடுக்க வேண்டியிருந்தது.

இணையதள முகவ‌ரி;http://www.wishpicker.com/

யுவர் ஸ்டோரி பேட்டி: http://yourstory.in/2013/07/wishpicker-gifting-simplified/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சரியான பரிசுப்பொருளை தேர்வு செய்வது எப்படி?

  1. அன்பின் சிம்மன் – அரியதொரு தளம் – தேவையானதைத் தேர்ந்தெடுக்க உதவும் தளம் – சென்று பார்த்தேன் – மிக மிகப் பிடித்திருக்கிறது. எத்தனை பிரிவுகள் ….. பொறுமையாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கலாம். பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      ஆம் நண்பரே.,பரிசளிக்க உதவுவதில் இன்னும் சுவாரஸ்யமான தளங்கள் உள்ளன். அவை பற்றியும் எழுதுகிறேன்.

      அன்புடன் சிம்மன்

      Reply
  2. shakkthi

    superb ! thank u sir . keep rocking . post other sites also .

    Reply
    1. cybersimman

      i will do .thanks

      Reply

Leave a Comment

Your email address will not be published.