திரைப்படம் போல யூடியூப் வீடியோ பார்க்க.

fullscreentotlmilkincதியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது ஒரு அனுபவம். என்ன தான் வீட்டில் வசதியாக அமர்ந்து கொண்டு டிவிடியில் படம் பார்த்தாலும் தியேட்டரில் சென்று படம் பார்த்த திருப்தி கிடைக்காமல் போகலாம். அதற்கு முக்கிய காரணம் தியேட்டர் ஒரு தனி உலகம். முழுவதும் மூடப்பட்ட நிலையில் இருக்கையில் அம்ர்ந்து இருளுக்கு நடுவே படம் பார்க்கும் உணர்வு தான் தியேட்டரில் படம் பார்க்கும் போது அதிலேயே ஒன்றச்செய்து விடுகிறது.
இதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கலாம். விஷயம் அதுவல்ல, தியேட்டரில் படம் பார்ப்பது போன்ற உணர்வை யூடியூப் வீடியோ பார்க்கும் போது விரும்பினால் அதற்கான அருமையான இணையசேவை ஒன்று இருக்கிறது என்பது தான் . டேர்ன் ஆப் தி லைட்ஸ் என்னும் அந்த சேவையை பயன்படுத்தினால், யூயியூப் வீடியோக்களை பார்க்கும் போது பின்னணில் முழுவதுயும் இருள் மயமாக்கி விட்டு வீடியோ காட்சியை மட்டும் பார்த்து ரசிக்கலாம்.
தியேட்டரில் படம் பார்க்கும் போது விளக்குகள் அணைக்கப்பட தாமதாமானால் , முதலில் விளக்கை அணைங்கப்பா என விசில் சத்ததுடன் குரல் கொடுப்பார்கள். அது போலவே பிரவுசர்களில் நீட்டிப்பாக பயன்படுத்தக்கூடிய இந்த சேவை மூலம் வீடியோ காட்சிகளை பார்க்கும் போது சுற்றியுள்ள பகுதிகளில் விளக்கை அணைத்து விட்டும் படத்தை மட்டும் பார்க்கலாம். கம்ப்யூட்டரில் வீடியோ பார்க்கும் போதும் சரி, அல்லது ஐபேட் போன்ற சாதனங்களில் படம் பார்க்கும் போதும் சரி இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பளிச் என்று சூரிய ஒளியிலும் கூட டேப்லெட் திரையில் எழுத்துக்களை துல்லியமாக படிக்க கூடிய ரெட்டினா டிஸ்பிளே தொழில்நுட்பம் அறிமுகமாகி இருக்கும் காலம் தான். ஆனாலும் என்ன திரைப்படங்களையும், வீடியோக்களையும் பார்த்து ரசிக்க கொஞ்சம் இருளான பின்னணி தானே தேவைப்படுகிறது. இல்லையா ? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

இணையதள முகவரி: http://www.stefanvd.net/project/turnoffthelights.htm#.Uq1RwtJDtaZ

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “திரைப்படம் போல யூடியூப் வீடியோ பார்க்க.

  1. மிக உதவியானது

    Reply
    1. cybersimman

      நன்றி .நண்பரே.

      Reply

Leave a Comment to krishnamoorthysk Cancel Reply

Your email address will not be published.