பிட்காயினுக்கு போட்டியாக லக்‌ஷ்மிகாயின்

indexபிட்காயின் எதிர்காலமே என்னாகும் என்று தெளிவாக தெரியவில்லை. இது எதிர்கால நாணயமாகுமா ? அல்லது இணைய இடைக்கால போக்காக மறைந்து போகுமா ? அப்படியே பிட்காயின் பரவலாக புழக்கத்த்துக்கு வந்தாலும் மத்திய வங்கிகளின் கட்டுப்பாட்டுக்கு தாக்குபிடிக்குமா ?என்பதெல்லாம் கேள்விகள். எல்லாவற்றையும் விட பெரிய கேள்வி பிட்காயினின் சட்ட பூர்வ அந்தஸ்து பற்றியது. எந்த ஒரு கட்டுப்பாட்டு அமைபாலும் வெளியிடப்படாத அனாமதய நாணயம் என்பது பிட்காயினின் பலமாக இருக்கலாம். ஆனால் இது பிட்காயினை சட்டபூர்வமாக்குமா?

இது போன்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும். இணைய நாணயம், எண்ம நாணயம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் பிட்காயின் இணைய உலகில் நாளுக்கு நாளு பிரபலமாகி வருகிறது. அதன் மதிப்பும் கூட தான் உயர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் பிட்காயினுக்கு எதிரான தகவல்களும் வெளியாகி கொண்டிருக்கின்றன . இவற்றை மீறி ஆச்சர்யப்படும் வகையில் பிட்காயினுக்கு போட்டியாக பல இணையநாணயங்களும் உருவாகி கொண்டிருக்கின்றன. சொன்னால் நம்பமாட்டீர்கள் பிட்காயின் போலவே நூற்றுக்கும் அதிகமான இணைய நாணயங்கள் இருக்கின்றன.

இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்திருக்கிறது. நம் நாட்டில் இருந்து லக்‌ஷ்மிகாயின் எனும் பெயரில் இணைய நாணயம்  உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அன்மையில் பெங்களுருவில் பிட்காயின் மாநாடு நடந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த மாநாட்டில் தான் இந்த தகவலும் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கான  இணையநாணயமாக லக்‌ஷ்மிகாயின் உருவாக்கப்பட உள்ளது. ஆனால் இதனிடையே பிட்காயின் போன்ற இணைய நாணய பயன்பாடு பற்றி ரிசர்வு வங்கி எச்சரித்ததை அடுத்து முதலில் ரிசர்வு வங்கியிடம் இருந்து விளக்கம் பெற்றுவிட்டு பின்னர் காரியத்தில் இறங்க தீர்மானித்துள்ளனர்.

இப்போதைக்கு லக்‌ஷ்மிகாயின் தளத்தில் உங்கள் இமெயில் முகவரியை விட்டுச்செல்லுங்கள், அறிமுகமாகும் போது சொல்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

லக்‌ஷ்மிகாயின் இணையதளம் ; http://www.laxmicoin.com/

————–

பி.கு ; எனது தொகுப்பு நூல் வெளியாக இருப்பது பற்றி முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். புத்தக கண்காட்சியின் போது நூல் கையில் கிடைக்கும். படித்து விட்டு அந்த தொகுபில் உள்ளதில் உங்களை கவர்ந்த இணையதளங்கள் பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டீர்கள் என்றால் அடுத்த தொகுப்புக்கு தயாராக உதவியாக இருக்கும்.
இந்த தொகுப்பில் இடபெற்றிருக்க கூடும் என நீங்கள் கருதும் இணையதளம் பற்றிய பதிவுகளையும் சுட்டிக்காட்டலாம்.
உங்கள் விமர்சனங்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
அன்புடன் சிம்மன்.

——–
சைபர்சிம்மன் கையேடு வெளியாகிறது; ஆதரவு தாருங்கள்!;http://cybersimman.wordpress.com/2014/01/06/book-3/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *