பேஸ்புக்கில் பெஞ்சமின் பிராங்கிளின்

1-f4d82b61c6சரித்திரத்தை திரும்பி பார்ப்பது எப்போதுமே சுவாரஸ்யமான விஷயம் தான். இன்னும் சுவாரஸ்யம் என்னவென்றால் சமகாலத்து தொழில்நுட்பங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலமும் சரித்திரத்தை திரும்பி பார்க்கலாம். இதற்கு சமீபத்திய உதாரணம் பெஞ்சமின் பிராங்கிளின் நினைவாக உருவாக்கப்பட்டுள்ள பேஸ்புக் பக்கம். அமெரிக்காவை நிறுவைய முன்னோடிகளில் ஒருவராக போற்றப்படும் பெஞ்சமின் பிராங்கிளின் அடைமொழிகளில் அடக்க முடியாத அளவுக்கு பன்முகம் கொண்டவர். பள்ளி பாடப்புத்தகத்தில் அவரது புகழ்பெற்ற கற்றாடி பரிசோதனையை படித்தது நினைவிருக்கலாம். இது பிராங்கிளினின் விஞ்ஞான முகம். எழுத்தாளர், அச்சக உரிமையாளர், அரசியல்தலைவர்,கண்டுபிடிப்பாளர், இசை கலைஞர், சிவில் உரிமை போராளி, ராஜதந்திரி என இன்னும் பல முகங்கள் அவருக்கு உண்டு. இதையெல்லாம் விட முக்கியமான விஷயம், பிராங்கிளினின் சமூக ஆளுமை. சுதந்திரத்திலும் பகிர்வதிலும் அபார நம்பிக்கை கொண்டிருந்த பிராங்கிளின் எழுத்து மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் காட்டிய ஆர்வம் நிகரில்லாதது. புதுமைகளை விரும்பி அரவனைத்துக்கொண்ட மேதை அவர். அதனால் தான் பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் பயன்பாடு பற்றி சிந்திக்கும் போது பிராங்கிளின் பொருத்தமானவராக தோன்றுகிறார்.

18 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிறந்த பிராங்கிளின் தொழில்நுடப் யுகமான 21 ம் நூற்றாண்டில் இருந்திருந்தால் எப்படி செயல்பட்டிருப்பார் என்பது சுவாரஸ்யமான கற்பனை தான். நிச்சயம் பிராங்கிளின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளை ஆர்வத்தோடு பயன்படுத்தியிருப்பார். இவற்றில் முன்னோடியாகவும் இருந்திருப்பார். சரி, பெஞ்சமின் பிராங்கிளின் பேஸ்புக்கில் இருந்திருந்தால் அவரது பேஸ்புக் பக்கம் எப்படி இருந்திருக்கும் ? இப்படி தான் இருந்திருக்கும் என்று சொல்லும் வகையில் விசிட் பிலடல்பியா அமைப்பு பிராங்கிளினுக்கான பேஸ்புக் பக்கத்தை அமைத்திருக்கிறது. பிராங்கிளினின் 308 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேஸ்புக் பக்கம் சமூக வலைப்பின்னல் யுகத்தில் அவரது ஆளுமையை அழகாக உணர்த்துகிறது.

பேஸ்புக்கில் தகவல்கள் பகிரப்படும் பாணியில் அவரது வாழ்க்கை விவர குறிப்புகள் , பன்முகம் கொண்ட ஆளுமை இந்த பகக்த்தில் வெளிப்படுகிறது. பிராங்கிளினின் அறிமுக குறிப்பு கண்டுபிடிப்பாளர்,ராஜதந்திரி, விஞ்ஞானி, தொழில்முனைவோர் … என அடுக்கிக்கொண்டே போகிறது. அதின் கீழே போஸ்டனில் பிறந்தார், போஸ்டனின் லத்தீன் பள்ளியில் படித்தார், டெபேராவை திருமணம் செய்து கொண்டார் போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன. விக்கிபீடியாவில் பிராங்கிளினின் வாழ்க்கை குறிப்பை படிப்பதை விட இப்படி பேஸ்புக் டைம்லைன் பாணியில் படிப்பது சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.

அவரது ஸ்டேடஸ் அப்டேட்டுகளும் இதே பாணியில் அவரது வாழ்வின் மைல்கல் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறது. இடியும் மின்னலும் நிறைந்த மழை நாள் ஒன்றில் அவர் காற்றாடியை பறக்க விட்டு சோதனை செய்ததை , பிராங்கிளின், ’பு
யல் மழையில் காற்றாடி விடுகிறேன்’ என பகிர்ந்து கொண்டது போல கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல அமெரிக்க அரசியல் சாசனம் படிக்க வேண்டிய ஒன்று என குறிப்பிட்டு அதற்கான இணைப்பை பிராங்கிளின் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த பதிவுகளுக்கு மேலே , பிராங்கிளினின் பிறந்த நாளில் 302 நண்பர்கள் அவரது டைம்லைனில் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜார்ஜ் வாஷிங்டன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிராங்கிளினின் நண்பர்கள் வட்டத்தை பார்த்தால் தாமச் ஜெப்பர்சன்,ஜேம்ஸ் மேடிசன், ஜார்ஜ் வாஷிங்டன் என செல்வாக்கு மிக்கதாகவே இருக்கிறது.

இந்த பேஸ்புக் பக்கத்தின் விளம்பர பகுதிகளில் கூட அந்த கால குதிரை வண்டிகளின் விளம்பரங்கள் தென்படுகின்றன.

சமூக வலைப்பின்னல் யுகத்தில் மேதைகளை நினைவு கூற நல்ல வழி .

பிலடல்பியா நகர சுற்றுலா பிரிவான விசிட்பில்லி உருவாக்கியுள்ள பிராங்கிளின் பேஸ்புக் பக்கம் இங்கே: http://www.visitphilly.com/ben-franklins-facebook-page/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *