ஸ்மார்ட்போன் உலக செய்திகள்

1sm

7 டாலர் ஸ்மார்ட்வாட்ச்!

ஆப்பிள் வாட்ச் 349 டாலருக்கு விற்பனைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. மோட்டோரோலாவின் மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் விலை 249 டாலர். சாம்சங்கில் காலெக்சி கியர் 199 டாலரில் ஆரம்பமாகிறது. எதற்கு இந்த விலை பட்டியல் என்றால் சீன நிறுவனம் ஒன்று சந்தைக்கு கொண்டு வர உத்தேசித்துள்ள புதிய ஸ்மார்ட்வாட்சின் விலையை பற்றி புரிய வைக்க தான். பாஸ்ட்பாக்ஸ் எனும் அந்த நிறுவனம், ஜஸ்ட் 7 டாலரில் ஸ்மார்ட்வாட்சை ( ரிஸ்ட்பாண்ட் ) அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனத்து நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இருந்தாலும் கூட 7 டாலருக்கு ஸ்மார்ட்வாட்ச் என்பது ஆச்சர்யம் தான்.
சாப்ட்வேரை எளிமையாக வைத்துக்கொண்டு, ஹார்ட்வேரிலும் சிக்கனத்தை கடைபிடித்தால் குறைந்த விலையில் ஸ்மார்ட் ரிஸ்ட்பாண்ட் சாத்தியமே என்று அந்த நிறுவனம் சொல்கிறது.
ஆனால் இந்த மலிவுவிலை வாட்ச் சந்தைக்கு இன்னும் அறிமுகமாகவில்லை. ஆஸ்திரேலியாவின் பிரபலமான கிரவுட்பண்டிங் இணையதளமான பாஸிபில் மூலம் இந்த வாட்ச் கருத்தாக்கத்தை வெள்ளோட்டம் விட்டு ஆதரவு கேட்டுள்ளது.
தற்போது சந்தையில் உள்ள வியரபில் என குறிப்பிடப்படும் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் பலவகையான ஸ்மாட்ர்பாண்ட்கள் எல்லாமே முதல் முறையாக பயன்படுத்துபவர்களுக்கு விலை அதிகமானதாகவும் பயன்படுத்த சிக்கலானதாகவும் பாஸ்ட்பாக்ஸ் கூறுகிறது.
எனவே முதல் முறை ஸ்மார்ட்வாட்ச் வாங்குபவர்கள் அந்த அனுபவத்தை அதிக ரிஸ்க் இல்லாமல் பெறுவதை உறுதி செய்ய பத்து டாலருக்கும் குறைவாக ஸ்மார்ட் ரிஸ்ட்பாண்டை உருவாக்கி இருப்பதாக இதற்கான நிதி திரட்டும் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பக்கத்தில் முதல் 100 ரிஸ்ட்பாண்களை 7 டாலருக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 8டாலருக்கு கருப்பு நிற பட்டை மற்றும் 9 டாலருக்கு பல வண்ண பட்டைகளும் அளிக்கப்படும். ஆதரவு அளிக்கும் நிதிக்கு ஏற்ப பரிசாக இந்த தயாரிப்பு வழங்கப்படும். திட்டத்திற்கான இலக்கு நிறைவேறினால் தான் இது செயலுக்கு வரும் .
இதன் பின்னே உள்ள தொழில்நுட்பம், இது செயல்படும் விதம், இதன் செயலிகள் ,பயன்பாடு பற்றி எல்லாம் இணையபக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ; http://www.pozible.com/project/187863
100 மில்லியனை நோக்கி ஓபரா மினி

ஸ்மார்ட்போன்களுக்கான ஓபரா மினி பிரவுசர் கடந்த மாதம் தான் 50 மில்லியன் பயனாளிகள் எனும் மைல்கல்லை எட்டியது. அதற்குள் நிறுவனம் அடுத்த 50 மில்லியன் பயனாளிகளை விரைவில் எட்டிவிடுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதன் தலைமை செயல் அதிகாரி லார்ஸ் பாயிலேசென் (Lars Boilesen) ராய்டர்சுக்கு அளித்த பேட்டியில், எவ்வளவு விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக 100 மில்லியன் பயனாளிகளை இந்தியாவில் எட்டுவதே இலக்கு என கூறியுள்ளார்.
இந்திய சந்தை தங்களுக்கு மிகவும் முக்கியமானது என்றும் இங்கு ஸ்மார்ட்போன் செயலிகளில் 3 வது இட்த்தில் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
உலகில் வேகமாக வளரும் 5 ஆண்ட்ராய்டு போன் சந்தையை எடுத்துக்கொண்டால் அங்கெல்லாம் முன்னணி செயலிகளில் முதல் 5 இடத்தில் ஓபரா இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
பிரேசில், இந்தோனேசியா,ரஷ்யா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதனிடயே ஓபரா, செயலிகளுக்கான அதன் ஆப் ஸ்டோரின் நீட்டிப்பாக சந்தா செலுத்தி பயன்படுத்திம் சேவையை அறிமுகம் செய்திருக்கிறது. கட்டண செயலிகளை தனித்தனியே வாங்குவதற்கு பதில் ஒருமுறை சந்தா செலுத்திவிட்டு விரும்பிய பிரிமியம் செயலிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இசை மற்று வீடியோக்களில் வெற்றிகரமாக செயல்படும் முறை இது. செயலிகளுக்கு கைகொடுக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.: http://www.operasoftware.com/products/subscription-mobile-store
இரட்டைத்திரை ஸ்மார்ட்போன்

இரட்டை சிம் ஸ்மார்ட்போன் இப்போது சர்வசகஜமாகிவிட்டது. இப்போதெல்லாம் பெரும்பாலான போன்களில் முன்பக்க காமிரா பின்பக்க காமிரா என காமிராவும் இரட்டையாக தான் இருக்கிறது. ஆனால் இரட்டைத்திரை என்பது கொஞ்சம் புதுசு இல்லயா? யோட்டா ஸ்மார்ட்போன் (Yotaphone) தான் இப்படி இரட்டைத்திரையுடன் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதன் முன்பக்கம் வழக்கமான டிஸ்பிலேவை கொண்டிருக்கும். பின்பக்கத்தை திருப்பினால் அங்கும் ஒரு திரை இருக்கும். இந்த டிஸ்பிலே இ-இங்க் நுட்பத்தில் செயல்படக்கூடியது. மின்நூல்களை வாசிக்க இது மிகவும் ஏற்றது. நோட்டிபிகேஷன் போன்றவற்றையும் பெறலாம். இமெயில் படிப்பது மற்றும் மெசேஜுகளுக்கு பதில் அளிக்கவும் பயன்படுத்தலாம். விரும்பிய வால்பேப்பரையும் வைத்துக்கொள்ளலாம். பேட்டரியின் ஆயுலை அதிகரிக்க இந்த நுட்பம் உதவும் என்று சொல்லப்படுகிறது. இந்த பின்பக்கத்திரை வண்ணமயமாக இல்லாவிட்டாலும் எப்போதுமே விழித்திருக்கும் என்கிறது யோட்டா. முன் பக்கத்தில் உள்ளவற்றை பின் பக்கத்திற்கு கொண்டு செல்லும் வசதியும் இருக்கிறது. முன் பக்க திரையில் காமிராவை கிளிக் செய்தால் பின்பக்க திரையில் ஸ்மைல் பிளிஸ் என்று வருவது சுவாரஸ்யம். ஆண்ட்ராய்டு அடிப்படையிலான போன் தான். விலை ரூ. 23,499. இந்தியாவில் பிலிப்கார்ட் மூலம் அறிமுகமானது. சமீபத்தில் ஐரோப்பிய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு: http://yotaphone.com/in-en/

பேட்டரி கவலைக்கு தீர்வு

எந்நேரமும் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதன் எதிர்பார்க்க்கூடிய பக்கவிளைவுகளில் ஒன்று, பேட்டரியில் சார்ஜ் தீர்ந்து போவது. அதிலும் அலுவலகத்திலோ ,பணியிடத்திலோ இருக்கும் போது பேட்டரியில் சார்ஜ் இல்லாத நிலை ஏற்பட்டால் சிக்கல் தான். இது போன்ற நேரங்களில் அக்கம்பக்கத்தில் செல்போன் சார்ஜ் செய்ய இடம் இருக்கிறதா? என அலைபாய்வதைவிட , ஒரு சாதாரண பேட்டரியில் செல்போனை பொருத்தி , அதை சார்ஜ் செய்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? பிளான் வி சார்ஜர் இதை தான் சாத்தியமாகுவதாக சொல்கிறது. இந்த புதுமையான சாதனத்தில் 9 வோல்டு பேட்டரியை பொருத்தி அதை மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மூலம் ஸ்மார்ட்போனில் இணைத்தால் 4 மணி நேரம் பேசக்கூடிய அளவுக்கு போனில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாமாம். இந்த சார்ஜர் சாதனத்தில் என்ன விஷேசம் என்றால் இது ஒரு கிசெயின் அளவுக்கு தான் இருக்கிறது. ஆக, இதை கிசைனிலேயே அழகாக கோர்த்து எப்போதும் கையில் வைத்துக்கொள்ளலாம். பேட்டரி பேக் அப் சாதனத்தை வீட்டிலேயே மறந்துவிட்டு திண்டாட வேண்டிய அவசியம் இருக்காது. அட, அபாரமாக இருக்கிறதே! இந்த சாதனம் எங்கே கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? இருங்கள் இப்போது தான் , கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் இந்த சாதனத்திற்கான கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டு நிதி திரட்டப்பட்டு வருகிறது. ஆனால் இப்போதே கோரப்பட்ட நிதியை விட இரண்டு மடங்கு நிதி குவிந்திருப்பதால் இந்த சார்ஜர் விரைவில் சந்தைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது என எதிர்பார்க்கலாம்.
விவரங்களுக்கு: https://www.kickstarter.com/projects/1838401618/plan-v-the-failsafe-charger-you-cant-leave-home-wi
ஸ்மார்ட்போன் கால கவலை

பொழுதுபோக்கு கவலை என்ற வார்த்தையை கேள்விபட்டதுண்டா? வாய்ப்பில்லை தான். ஏனெனில் இது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பதம். ஸ்மார்ட்போன் பழக்கத்தால் வந்திருக்கும் பாதிப்புகளில் ஒன்றை தான் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். அதாவது அதிக அளவிலான ஸ்மார்ட்போன் பயன்பாட்டால், கேளிக்கை உணர்வு ஏற்படுதவதற்கு பதிலாக, மன அழுத்தம், கவலை, நெருக்கடி உணர்வு ஏற்படலாம் என்று அமெரிக்காவின் கெண்ட் மாநில பலகலைக்கழக ஆய்வாளர் ஜியான் லீ சொல்கிறார். கல்லூரி மாணவர்கள் மத்தியில் இவர் நடத்திய ஆய்வில் , எந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு பொழுதுபோக்கை அனுபவிக்கும் உணர்வு பாதிப்பதாக தெரியவந்துள்ளது. எப்போதும் ஸ்மார்ட்போனில் தொடர்பு கொண்டிருப்பது பொழுதுபோக்கிற்கு உதவுவதில்லை என்று இவர் சொல்கிறார். ஸ்மார்ட்போன் பயனாளிகள் மூன்று வகையினர் இருப்பதகாவும் இவர்களில் மூன்றாவது வகையினரான அதிக அள்வில் ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான திறன் இல்லாமல் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு ஓய்வு நேரம் மன அழுத்தம் மிக்க அனுபவமாக மாறி வருவதாகவும் அவர் சொல்கிறார். இதை தான் பொழுதுபோக்கு கவலை (லீஷர் டிஸ்டிரஸ்) என குறிப்பிடுகிறார். கம்ப்யூட்டர் இன் ஹுயுமன் பிஹேவியர் இதழில் இந்த ஆய்வு வெளியாகி உள்ளது.
சிறந்த செயலிகள்

ஆண்டின் சிறந்த செயலிகள் பட்டியலை,ஆண்ட்ராய்டு பயனாளிகள் அடிப்படையில் கூகிள் கடந்த வாரம் வெளியிட்டது. இப்போது ஆப்பில் நிறுவனம் ஆண்டின் சிறந்த ஐபோன் செயலிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மூளைக்கு வேலை கொடுக்கும் செயலியான எலிவேட் முதலிடத்தில் இருக்கிறது. த்ரீஸ் (Threes! ) எனும் கேமும் முன்னிலையில் உள்ளது. இன்ஸ்டாகிராமின் ஹைபர்லேப்ஸ் மற்றும் லியோஸ் பார்டியூன் ஆகியவை அடுத்த இடத்தில் உள்ளன. யாஹூ நியூஸ் டைஜஸ், ஸ்விட்கீ, 1 பாஸ்வேர்டு, காமிரா+, பஸ்ஃபீட் உள்ளிட்டவையும் இந்த பட்டியலில் உள்ளன. இவை ஆப்பில் குழுவால் தேர்வு செய்யப்பட்டவை. சிறந்த ஐபேட் செயலியாக பிக்சல்மீட்டர் தேர்வாகியுள்ளது. பயனாளிகள் டவுண்லோடு செய்தவை அடிப்படையிலான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பேஸ்புக் மெசஞ்சர், ஸ்னேப்சாட்,யூடியூப் ஆகியவை இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் இடம்பெற்றுள்ளன. பேஸ்புக்,இன்ஸ்டாகிராம் மற்றும் பண்டோரா அடுத்த இடங்களில் உள்ளன.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *