உங்களுக்கு நீங்களே ஒரு கடிதம் எழுதுங்கள்: அழைக்கும் புதுமை இணையதளம்!

Screenshot_2019-01-06 Setup - This Next Yearஉங்களுக்கு நீங்களே இமெயில் அனுப்பிக்கொள்ள வழி செய்யும் இணையதளங்கள் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். பியூச்சர்மீ (https://www.futureme.org/) இதற்கு அழகான உதாரணம்.  இந்த தளத்தில் நீங்கள் விரும்பிய வாசகத்தை டைப் செய்து, உங்களுக்கு இமெயிலாக வரவைத்துக்கொள்ளலாம். அந்த மெயில் உங்களுக்கு எப்போது வந்து சேரலாம் என்பதையும் நீங்களே தீர்மானிக்கலாம். ஓராண்டு கழித்து அல்லது ஐந்து ஆண்டு கழித்து அந்த மெயில் உங்கள் இன்பாக்சிற்கு வரச்செய்யலாம்.

இமெயில் பியூச்சர் (http://emailfuture.com/ ), வென்செண்ட் (http://www.whensend.com/) லெட்டர்டூமை பீயூச்சர்செல்ப் (http://lettertomyfutureself.net/ ) என மேலும் சில இணையதளங்களும் இருக்கின்றன. திட்டமிடலில் துவங்கி, நினைவூட்டல் வரை பலவிதங்களில் இவற்றை பயன்படுத்தலாம்.

இந்த எதிர்கால இமெயில் தளங்களின் வரிசையில், இப்போது புதிதாக திஸ்நெக்ஸ்ட்இயர் (https://thisnextyear.com/) எனும் இணையதளமும் இணைந்திருக்கிறது. ஆனால் இந்த இணையதளம், எதிர்கால இமெயில் ஐடியாவில் சின்னதாக ஒரு புதுமையை புகுத்தி அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

புத்தாண்டு பிறந்திருக்கும் நேரத்தில் மிகவும் பொருத்தமாக அறிமுகம் ஆகியிருக்கும் இந்த தளம், அடுத்த ஆண்டு உங்களை தேடி வரக்கூடிய கடிதத்தை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. இதை கேள்வி பதில் வடிவில் மிக சுவாரஸ்யமாக செய்கிறது.

இந்த தளத்தில் நுழைந்ததும், முதலில் உங்கள் பெயரை சமர்பிக்க வேண்டும். அதன் பிறகு வரிசையாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். முதலில் உங்கள் தொழில் வாழ்க்கையில் இருந்து துவங்கலாம் என்கிறது இந்த தளம். இதை ஒப்புக்கொண்டால், நீங்கள் பணி புரியும் துறையை தேர்வு செய்ய சொல்கிறது. இதற்கான தேர்வுகளும் கொடுக்கப்படுகின்றன.

நீங்கள் பணியாற்றும் துறையை தேர்வு செய்த பிறகு, தொழில் வாழ்க்கையில் அடுத்த ஆண்டு நீங்கள் எந்த இடத்தில் இருக்க விரும்புகிறீர்கள் எனும் கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கான உங்கள் பதிலை டைப் செய்யுங்கள்.

அடுத்ததாக, தனிப்பட்ட விருப்பங்களுக்கு செல்லலாமா? என கேட்கப்படுகிறது. உடற்பயிற்சி, தோட்டக்கை, சந்திப்புகள், பயணம் செய்வது என பல்வேறு வாய்ப்புகள் அளிக்கப்பட்டு உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. உங்கள் விருப்பம் இந்த பட்டியலில் இல்லை எனில், அதை தனியே உருவாக்கி கொள்ளவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.

இவற்றை தேர்வு செய்த பிறகு, அடுத்த ஒராண்டில் இதில் எந்த இடத்தில் இருக்க விரும்புகிறீர்கள் என கேட்கப்படுகிறது. நன்றாக் யோசித்து இதற்கான பதிலை அளித்தப்பிறகு, அடுத்ததாக உறவுகள் தொடர்பான கட்டத்திற்கு செல்லலாம்.

இந்த கட்டத்தில் கொஞ்சம் மாறுபட்டு, உறவுகள் விஷயத்தில் நீங்கள் எப்படி என கேட்கப்படுகிறது. நன்று, சுமார், மோசம், ஆகியவற்றில் இருந்து உங்கள் உறவின் தன்மையை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் பிறகு மற்றவர்களுடனான உறவை மேம்படுத்திக்கொள்ள நீங்கள் என்ன செய்ய இருக்கிறீர்கள் எனும் கேள்வி தோன்றுகிறது. இதற்கான பதிலை அளிக்க வேண்டும்.

இப்போது, கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டீர்கள் என தெரிவிக்கப்பட்டு,  உங்கள் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றி மதிப்பிடச்சொல்கிறது. மோசம், பரவாயில்லை என்பது போன்ற தேர்வுகளை தீர்மானித்த பிறகு, உடல்நலனை மேம்படுத்திக்கொள்வதற்கான உங்கள் திட்டம் என்ன எனும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்.

இனி போனஸ் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். நான் சார்ந்திருக்கும் சமூகத்தை மேம்படுத்த என்ன செய்வேன்?, என்றாவது ஒரு நாள் செய்யக்கூடியது என்ன? ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

அவ்வளவு தான், உங்கள் இமெயில் முகவரியை சமர்பித்தால், நீங்கள் தெரிவித்த விருப்பங்களின் அடிப்படையில் உங்களுக்கான கடிதம் 365 நாட்கள் கழித்து உங்களுக்கு இமெயிலாக அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில், கடந்த ஆண்டி இப்படி எல்லாம் திட்டமிட்டோம் அல்லவா? என திரும்பி பார்த்து உங்கள் முன்னேற்றத்தை சீர்தூக்கி பார்க்க இது வாய்ப்பாக அமையும்.

புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில், இலக்குகளை திட்டமிடுவது, உறுதிமொழி எடுத்துக்கொள்வது போன்றவற்றில் பலரும் ஆர்வம் காட்டும் சூழலில், அடுத்த ஆண்டை இலக்காக கொண்டு, நமக்கான இலக்குகளை வகுத்துக்கொள்ள இந்த இணையதளம் மிகவும் சுவாரஸ்யமான முறையில் வழிகாட்டுகிறது. அலெக்ஸ் கேரே என்பவரும், டிம் சாங் என்பவரும் இணைந்து இந்த தளத்தை உருவாக்கி உள்ளனர்.

இந்த தளத்தில் சமர்பிக்கப்படும் விவரங்கள் உடனடியாக நீக்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

அடுத்த ஆண்டு உங்கள் இலக்கை அடைய வாழ்த்துக்கள்!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *