இதழியல் உலகில் மோஜோ அலை வீசிக்கொண்டிருக்கிறது. மொபைல் ஜர்னலிசம் என்பதன் சுருக்கமே மோஜோ என குறிப்பிடப்படுகிறது. செல்பேசி தான் இதன் மையம்.
நவீன செல்பேசியில் இருந்தே செய்தி சேகரித்து, அதிலிருந்து வெளியிட முடியும் எனும் ஆற்றலை முழு வீச்சில் பயன்படுத்திக்கொள்வதாக மோஜோ எனும் செல்பேசி இதழியல் அமைகிறது. இதை புரிந்து கொண்டு, உலகம் முழுவதும் உள்ள செய்தியாளர்களும், கதை சொல்லிகளும் வேகமாக மோஜோவுக்கு மாறி வருகின்றனர். ஊடக நிறுவனங்களும் மோஜோ முறையை தழுவி வருகின்றன.
இவற்றைவிட முக்கியமாக வாசகர்கள் ஏற்கனவே மோஜோவை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர்.
இந்த புதிய போக்கையும், இதனால் அகல திறக்கப்பட்டிருக்கும் இதழியல் வாய்ப்புகளையும் விவரிக்கும் வகையில், ’மொபைல் ஜர்னலிசம்’ புத்தகம் அமைந்துள்ளது. செல்பேசி இதழியல் போக்குகள் மட்டும் அல்லாமல், அதற்கு தேவையான அடிப்படை நுட்பங்கள், வழிமுறைகள் ஆகியவற்றையும் இந்த புத்தகம் விவரிக்கிறது. மோஜோ முன்னோடிகள் மற்றும் சிலிர்க்க வைக்கும் உதாரணங்களையும் இந்த புத்தகம் கொண்டிருக்கிறது.
கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.
மொபைல் ஜர்னலிசம்- ஒரு நவீன இதழியல் கையேடு
கிழக்கு பதிப்பகம்.
–
அன்புடன் சிம்மன்