ஹை5 எனும் முன்னோடி வலைப்பின்னல் சேவை!

சமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக் ஆகத்தவறிய சேவைகள் என வர்ணிக்கப்படும் வலைப்பின்னல் தளங்கள் சில இருக்கின்றன. பேஸ்புக்கிற்கு முன்னதாக துவங்கப்பட்டு, பேஸ்புக்கை விட செல்வாக்கு பெற்றிருந்த முன்னோடி சமூக வலைப்பின்னல் தளங்களே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.

முதல் சமுக வலைப்பின்னல் தளம் என பரவலாக கருதப்படும் சிக்ஸ்டிகிரீஸ், பிரண்ட்ஸ்டர், மைஸ்பேஸ், ஆர்குட் என நீளும் இந்த பட்டியலில் அதிகம் கவனிக்கப்படாத பெயராக ஹை5-https://hi5.com/ அமைகிறது.

இந்த முன்னோடி வலைப்பின்னல் சேவைகள், பேஸ்புக் அளவுக்கு ஏன் வெற்றிபெறவில்லை எனும் கேள்விக்கான பதில், இந்த சேவைகள் செல்வாக்கு இழந்த விதத்தை புரிய வைப்பதோடு, பேஸ்புக் பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கான காரணத்தையும் புரிய வைக்க கூடியது என்பதால் சமூக வலைப்பின்னல் வரலாற்று நோக்கில் இந்த ஆய்வும், அலசலும் முக்கியமானது.

ஹை5.காம், ராமு யலமஞ்சி எனும் அமெரிக்க இந்தியரால் 2004 ம் ஆண்டு துவக்கப்பட்டது. 2006 ம் ஆண்டு ஏழாவது பெரிய சமூக வலைப்பின்னல் சேவையாக இருந்த இந்த தளம், 2007 ம் ஆண்டில் மைஸ்பேஸ் தளத்திற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருந்தது. ( 2006 ம் ஆண்டு பின்பகுதியில் தான் பேஸ்புக் கல்லூரி மாணவர்களுக்கான பிரத்யேக சேவை என்பதில் இருந்து அனைவருக்குமான பொதுவான சேவையாக மாறியது.)

2008 ம் ஆண்டு வாக்கில் வீசத்துவங்கிய பேஸ்புக் அலையில் மைஸ்பேஸ் ஆட்டம் கண்டதோடு, ஹை5 போன்ற தளங்களும் பின்னுக்குத்தள்ளப்பட்டன. முன்னணியில் இருந்த ஹை5 தளத்தால் ஏன் பேஸ்புக் போட்டியை சமாளிக்க முடியவில்லை என்பது தனியே ஆய்வுக்குறியது என்பதால், இந்த கேள்வி ஏன் முக்கியம் என்பதை மட்டும் இங்கே பார்க்கலாம்.

எப்படி பார்த்தாலும், ஹை5 மூல சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஒன்று. சிக்ஸ்டிகிரீஸ் போல, பிரண்ட்ஸ்டர் போல, மைஸ்பேஸ் போலவே ஹை5 தளமும், பயனாளிகள் இணையம் வாயிலாக தங்களுக்கான சமூக வலைத்தொடர்புகளை உருவாக்கி கொள்ள வழி செய்ததோடு, இந்த பிரிவில் தனக்கான சில தனித்தன்மைகளையும் கொண்டிருந்தது.

ஹை5 தளம் செயல்பட்ட விதம் தொடர்பாக இணையத்தில் அதிக பதிவுகள் இல்லாத நிலையில், ஹவ்ஸ்டப் ஒர்க்ஸ் கட்டுரையே இந்த தளத்தின் தன்மை பற்றிய முக்கிய தகவல்களை அளிப்பதாக அமைகிறது.

ஹை5 தளம், பழைய நண்பர்களை கண்டறிந்து தொடர்பு கொள்ள வழி செய்ததோடு, உலகம் முழுவதும் புதிய நட்புகளை உருவாக்கி கொள்ள வழி செய்தது. இந்த வலைப்பின்னலை கொண்டு, இணையத்தில் பல்வேறு விதமான பொழுதுபோக்குகளில் ஈடுபடவும் உதவியது. இணையவழி சமுகமாக்கலுக்கு பலவிதங்களில் கைகொடுத்தது.

ஹை5 தளத்தின் முக்கியமான அம்சத்தை தெரிந்து கொள்வதற்கு முன், அதன் அடிப்படை அம்சங்களை பார்க்கலாம்.

ஹை5 தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்ட பிறகு, இமெயில் தொடர்புகளை அணுக அனுமதி கொடுத்தால், உறுப்பினர்கள் சார்பில் தானாக நட்பு கோரிக்கை அனுப்பி வைக்கப்படும். மற்றபடி உறுப்பினர்கள் தங்களுக்கான அறிமுக பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.

அறிமுக பக்கத்தின் வாயிலாக உறுப்பினர்கள் ஆர்வம், ஈடுபாடுகளை குறிப்பிட்டு தங்களைப்பற்றி உணர்த்தலாம். ஒரே பார்வையில், உறுப்பினர்கள் மற்றவர்களின் வயது, பாலினம், வசிப்பிடம், கல்வி உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம். நட்பு வலை விரிக்க இது வழிகாட்டும். இந்த தகவல்களை யார் பார்க்கலாம், கூடாது என வரையறுக்கலாம்.

இந்த தளத்தில் மூலம் எளிதாக நட்பு உருவாக்கி கொள்ளலாம். சக உறுப்பினர்கள் பக்கத்தை பார்வையிடும் போது அவர்கள் அறிமுக பக்கம் ஈர்ப்புடையதாக இருந்தால், நட்பு கோரிக்கை விடுக்கலாம். அவர்கள் ஏற்றுக்கொண்டால் நண்பர்களாகலாம்.

நட்பு பட்டியலில் உள்ளவர்களுடன் பலவிதமாக தகவல்களை பகிரலாம். புகைப்பட கேலரியில் படங்களை பதிவேற்றலாம், சஞ்சிகை பகுதியில் மனதில் உள்ள கருத்துக்களை எழுதலாம். கருத்து புத்தகத்தை உருவாக்கி கொள்ளலாம். பலவித விளையாட்டுகளும் இருந்தன.

இவையே ஒரு முழுமையான சமூக வலைப்பின்னல் அனுபவத்தை அளிக்க கூடியது என்றாலும், இந்த தளத்தின் முக்கியமான அம்சமாக, அதன் ’நிலைத்தகவல்’ பகுதி அமைகிறது. அறிமுக பக்கத்தில் உள்ள இப்போது என்ன செய்கிறீர்கள் எனும் (What Are You Doing Now? ) கேள்விக்கு பதிலாக உறுப்பினர்கள் தங்களது அப்போதைய தகவலை பகிரலாம்.

இந்த நிலைத்தகவல் வசதி மிகவும் கவனிக்கத்தக்கது.  ஏனெனில் பேஸ்புக் சுவர் வசதிக்கு முன்பே இந்த அம்சம் ஹை5 தளத்தில் அறிமுகம் ஆகியிருக்கிறது. அது மட்டும் அல்ல, 2006 ல் டிவிட்டர் அறிமுகமான போது, இப்போது என்ன செய்கிறீர்கள்? எனும் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஹை5 தளம் முன்னோடி சமூக வலைப்பின்னல் சேவைகளில் ஒன்றாக விளங்குகிறது.

ஹை5 சேவை, மெல்ல செல்வாக்கு இழந்து, ஒரு கட்டத்தில் கேமர்களுக்கான சேவையாக மாறி பின்னர் டேக்ட் எனும் சமூக வலைப்பின்னல் சேவையால் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் டேக்டு சேவையும் கையகப்படுத்தப்பட்டது. ஹை5 தளமும் இன்னமும் பயன்பாட்டில் இருந்தாலும் அதன் பழைய வடிவில் இருப்பதாக தெரியவில்லை. பாதுகாப்பானதா என்றும் தெரியவில்லை

இணைப்பு:

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *