ஆலோசனை கூட்ட குறிப்புகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்!

அலுவலக ஆலோசனை கூட்டங்கள் அலுப்பூட்டகூடியவையாக இருக்கலாம்; ஆனால் தவிர்க்க இயலாதவை இல்லையா? அதிலும் புதிய குழுக்களுக்கு இவை மிகவும் முக்கியம்.
அலுவலக கூட்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றனவோ இல்லையோ அவை பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டாக வேண்டும்.!

ஆலோசனை கூட்டங்களை பயனுள்ளதாக ஆக்குவது எந்த அளவு எளிதானது எனத்தெரியவில்லை, ஆனால் கூட்டத்தின் முடிவுகளை பகிர்ந்து கொள்வதை எளிதாக்க ஒரு வழி இருக்கிறது. மினிட்.இயோ (minute.io ) இணையதளம் இதை அழகாக செய்கிறது.

கூட்டம் முடிந்தவுடன் அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை நினைவு கூர்ந்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை பகிர்ந்து கொள்வது கூட்டத்தின் பலனை பெற அவசியம் தான் இல்லையா?
ஆலோசனை நடத்தியதே அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காக எனும் போது கூட்டத்தின் சாரம்சத்தை நினைவூட்டுவது செயலுக்கான உந்துதலாக இருக்கும்!

ஆனால், இதை செய்வதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும். குறிப்புகளை எழுதி, விவாதங்களை குறிப்பிட்டு , முடிவுகளை தெரிவித்து அதன் பிறகு எல்லோருக்கும் மெயில் அனுப்ப வேண்டும். இதை உடனடியாக செய்து முடிககாமல் தள்ளிப்போட்டால் இதை செய்வது இன்னும் சுமையாக விடும்.
இந்த இடத்தில் தான் மினிட்.இயோ தளம வருகிறது.

பொதுவாக மினிட்ஸ் என குறிப்பிடப்படும் கூட்டத்தின் முக்கிய அம்சங்களை கூட்டம் முடிந்தவுடன் எளிதாக பகிர்ந்து கொள்ள இந்த தளம் வழி செய்கிறது.

ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்பதில் அனுபவம் உள்ளவர் என்றால் இந்த தளம் அதன் எளிமையாலும் பயன்பாட்டு தன்மையாலும் உங்க்ளை கவர்ந்துவிடும். இதுவரை ஆலோசனை கூட்டங்களில் அதிகம் பங்கேற்றதில்லை என்றாலும் கூட, இந்த தளத்தை பார்த்ததும் ஒரு கூட்டம் நடத்திப்பார்க்கலாமே என்று தோன்றும் . அந்த அளவுக்கு இது தரும் வசதி இருக்கிறது.
minutes.io_thumb
ஆலோசனை கூட்டம் முடிந்ததுமே கம்ப்யூட்டாரிலோ லேப்டாப்பிலோ இந்த தளத்தை திறந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு குறிப்புகளை எழுதுவதற்கான பகுதியை கிளிக் செய்ததும் குறிப்புகளுக்கான பக்கம் வந்து நிறகும்.

உதவியாளர் ஒருவர் உங்களுக்காக என்று குறிப்பெடுக்கும் பக்கத்தை தயார் செய்து கொடுத்தது போல எல்லா அம்சங்களுடனும் இந்த பக்கம் இருக்கும். அதில் மேலே கூட்டத்தின் தலைப்பை டைப் செய்துவிட்டு, குறிப்பெடுப்பவரின் பெயர் மற்றும் இதை பெற வேண்டியவர்களின் இமெயில் முகவரிகளை வரிசையாக டைப் செய்து விட்டு அதன் பிறகு குறிப்புகளை அடிக்க வேண்டியது தான்.

குறிப்புகளை டைப் செய்வதற்கும் அழகான வழிகாட்டுதல் இருக்கின்றன. குறிப்பின் தன்மை பற்றிய பகுதியை கிளிக் செய்ததுமே, நோக்கம் (ஏஜெண்டா), முடிவுகள், செய்ய வேண்டியவை, கருத்துக்கள் என துணை தலைப்புகள் தோன்றுகின்றன. அவற்றில் பொருத்தமானவற்றில் தகவல்களை இடம்பெறச்செய்யலாம்.
இதற்கான அவகாச தேதியையும் குறிப்பிடலாம். கூட்டத்தின் நோக்கம் பற்றியும் டைப் செய்ய தனிப்பகுதி இருக்கிறது.

அவ்வளவு தான் கூட்டத்தின் குறிப்புகள் தயார். இனி ஒரே கிளிக்கில் அனுப்பிவிடலாம். குறிப்புகளை அனுப்பும் முன் அதன் முன்னோட்ட வடிவையும் பார்த்துக்கொள்ளலாம். தேவை எனில் அச்சிட்டு கொள்ளலாம். நகலெடுக்கலாம்.

கூட்டத்தில் விவாதித்த விஷயங்களை மேற்கொண்டு முன்னெடுத்துச்செல்ல இது உதவும். கூட்டத்திற்கான ஆவணமாகவும் இருக்கும்.

இதை பயன்படுத்த உறுப்பினராக பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் பதிவு செய்து கொண்டால் குறிப்புகளை சேமித்துக்கொள்ளலாம்.

அடுத்த முறை அலுவலக கூட்டம் நடக்கும் போது முயன்று பாருங்கள். அலுலவலக் கூட்டத்திற்கு தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை, நண்பர்கள் சந்தித்து பேசுவதை கூட இப்படி குறிப்புகளாக்கி ஆவணப்படுத்தலாம்!.

இணையதள முகவரி: https://minutes.io/welcome

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.