அமீபா வலைப்பதிவும் இணைய நுட்பங்களும்

நுண்ணுயிர்களான அமீபா பற்றி பலரும் பேசாமல் இருப்பதால், அமீபா பற்றி வலைப்பதிவு செய்யத்துவங்கியதாக அறிவியல் எழுத்தாளர் ஜெனிபர் பிரேசர் குறிப்பிடுகிறார். அவரது அமீபா வலைப்பதிவை நாமெல்லாம் மறந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த பதிவை எழுதுகிறேன்.

அறிவியல் எழுத்தாளரான ஜெனிபர், கலைவண்ண அமீபா (The Artful Amoeba ) எனும் பெயரில் வலைப்பதிவு ஒன்றை நடத்தி வந்தார். 2009 ம் ஆண்டு இந்த வலைப்பதிவை துவக்கியிருக்கிறார். இந்த வலைப்பதிவு மூலம், அறிவியல் பதிவுகள் மேலும், குறிப்பாக அமீபாக்கள் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்தியவர், 2011 ல் சயிண்டிபிக் அமெரிக்கன் (https://blogs.scientificamerican.com/artful-amoeba/) அறிவியல் இதழ் சார்பாக இதே பெயரில் வலைப்பதிவு செய்து வந்தார்.

ஆனால், 2020 ஆண்டில் இந்த வலைப்பதிவு நிறுத்தப்பட்டு விட்டது. சயிண்டிபிக் அமெரிக்கன் இதழின் வலைப்பதிவுகள் அனைத்தும் கூட்டாக நிறுத்தப்பட்ட போது அமீபா பதிவும் மூடப்பட்டது. ஆனால் ஜெனிபர் அமீபா மீதானை ஆர்வத்தையும் ஆய்வையும் விட்டுவிடாமல் தொடர்கிறார். அவரது அறிவியல் எழுத்துகளும் தொடர்கின்றன.

ஜெனிபரின் இந்த வலைப்பதிவை சுட்டுக்காட்ட இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், வலைப்பதிவு எனும் இணைய ஊடக வடிவத்தின் நோக்கத்தையும், பயன்பாட்டையும் உணர்த்தும் வகையில் இது அமைந்திருக்கிறது. ஜெனிபர் போன்ற அறிவியல் ஆய்வாளர்கள் தங்கள் துறை சார்ந்த கருத்துகளையும், அனுபவங்களையும் பொதுமக்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினால், வலைப்பதிவு அதற்கான சரியான வடிவமும், வாகனமும்.

ஜெனிபரின் அமீபா பதிவுகளை படித்துப்பார்த்தால், இந்த நுண்ண்யிரிகள் பற்றி அறிய எத்தனை சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன என தெரிந்து கொள்ள முடிகிறது.

இரண்டாவது விஷயம், அறிவியல் வலைப்பதிவாளராக வரவேற்பை பெற்ற ஜெனிபர், சயிண்டிபிக் அமெரிக்கன் போன்ற முன்னணி அறிவியல் இதழின் சார்பில் வலைப்பதிவு செய்யும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். வலைப்பதிவாளர்களுக்கான அங்கீகாரத்தை இது உணர்த்துவதோடு, ஒரு காலத்தில் வலைப்பதிவு என்பது எத்தனை முக்கிய ஊடக வடிவமாக இருந்திருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது. இந்த இதழ், வலைப்பதிவு பின்னல்களை தனது தளத்தில் கொண்டிருந்தது. செய்திகள், கட்டுரைகள் தவிர,  வலைப்பதிவு வடிவத்தின் தேவையையும், சாத்தியங்களையும் ஊடகங்கள் உணர்த்து கொண்டதன் அறிகுறி இது. டிஜிட்டல் இதழியல் வரலாற்றில் இது முக்கிய அம்சங்களில் ஒன்று.

ஆனால் வலைப்பதிவுகள் பழைய செல்வாக்கை இழந்துவிட்டாலும், முற்றிலுமாக அவற்றின் தேவை குறைந்துவிடவில்லை.

பி.கு: சயிண்டிபிக் அமெரிக்கன் இணையதளத்தின் மூலம் இந்த வலைப்பதிவு நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை அறிய முடியவில்லை. இதற்கான பதிவின் இணைப்பு உடைந்து கிடக்கிறது. அதை கூகுள் சேமிப்பு தேடல் மூலம் மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது:

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *