திரைக்கதையில் இருக்க வேண்டிய முக்கிய அம்சம்!

தலைப்பு திரைக்கதை தொடர்பாக அமைந்தாலும், திரைக்கதை நுட்பங்கள் தொடர்பான தகவல்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த பதிவு ஏமாற்றமே அளிக்கும். ஏனெனில், இந்த பதிவு திரைக்கதை நுட்பங்கள் பற்றி பேசாமல், பிரசண்டேஷன் எனப்படும் காட்சி உரை நுட்பம் பற்றியதாக அமைகிறது.

ஒரு நல்ல திரைக்கதையில் இருக்க வேண்டிய அம்சங்கள் போலவே, நல்ல காட்சி உரையிலும் இருக்க வேண்டிய அம்சங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒன்றாக, உணர்வுநோக்கிலான கதை சொல்லலை (Visceral Storytelling) கிளிப் அட்கின்சன் (Cliff Atkinson) குறிப்பிடுகிறார்.

உணர்வுநோக்கிலான கதை சொல்லலை மனித அறிவுக்கு கதை சொல்லாமல், மனித உணர்வை தூண்டும் வகையில் கதை சொல்வது என புரிந்து கொள்ளலாம். நிற்க, பிரசண்டேஷன் பிஸ்தா என வர்ணிக்கப்படும் வல்லுனர்கள்- வழிகாட்டிகளில் ஒருவரான அட்கின்சன், நல்ல காட்சி உரை என்பது அடிப்படையில் கதை சொல்லும் என்பதை வலியுறுத்தி வருபவர்.

கதை சொல்லல் மைய உத்தி என்பதன் அடிப்படையில், உணர்வு நோக்கிலான கதை சொல்லல் அம்சத்தையும் வலியுறுத்துகிறார். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்டதற்கு, அவர் மிக எளிதாக பதில் அளித்திருக்கிறார்:

அண்மையில் வழக்கறிஞர் ஒருவருக்கு வழக்கு ஒன்றின் தயாரிப்பிற்காக உதவி கொண்டிருந்தேன். விபத்தில் மூளை காயம் அடைவதன் தீவிரத்தை உணர்த்தும் அவசியம் அவருக்கு ஏற்பட்டது. இதற்காக மூளையின் உள் அமைப்பை புரிந்து கொள்ளும் வகையில் கேள்விகள் கேட்ட போது பளிச் என ஒரு எண்ணம் உண்டானது. நாம் மூளையை பிளாஸ்டிக் மாதிரி கொண்டு விளக்கி கொண்டிருக்கிறோம். இது மூளை உறுதியான தன்மை கொண்டது எனும் புரிதலை அளிக்கிறது. ஆனால் மனித மூளை மென்மையானது மற்றும் கடினமான பொருள் மீது மோதினால் மிகவும் பாதிக்கப்படக்கூடியது. உடனே அமேசானில் இருந்து மென்மையான தன்மை கொண்ட மூளை மாதிரியை வாங்கி என் கை மீது அதை அழுத்தி பாதிப்பின் தன்மையை உணர்த்தினேன். மூளை விபத்தின் போது எதிர்கொள்ளக்கூடிய பாதிப்பின் தீவிரத்தை இது நீதிபதிகளுக்கு உணர்த்தும்.

இந்த உதாரணத்தை குறிப்பிட்டு, இவ்வாறு உணர்வு நோக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி புரிதலை உண்டாக்கும் உத்தி உணர்வுநோக்கிலான கதை சொல்லல் என்கிறார். காட்சி உரையில் இந்த உத்தியையும் பயன்படுத்த வேண்டும்.

நல்ல திரைப்படங்களின் காட்சிகளில் இந்த உதாரணத்தை பார்க்கலாம்.

மீண்டும் நிற்க, காட்சி உரைகளுக்காக ( காட்சி விளக்கம்) என்றே பிரத்யேக மாநாடு நடைபெறுகிறது தெரியுமா? இந்த மாநாடு ஒன்றில் உணர்வுநோக்கிலான கதைசொல்லல் தொடர்பான முக்கிய பேச்சாளராக இருந்த அட்கின்சனிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் இருந்து பெறப்பட்ட தகவல் தான் மேலே இடம் பெறும் கதை.

நாமெல்லாம் பிரசண்டேஷன் பற்றி மிக சாதாரணமாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது ஒரு கலை வடிவம் போன்றது என கருதும் வல்லுனர்களில் ஒருவரான அட்கின்சன், இதற்கான உத்திகள் பற்றி தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகிறார்.

அட்கிசனும் திரைக்கதையும் பற்றிய முந்தைய பதிவு.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.