Category: இணைய செய்திகள்

பிட்காயினும், டிஜிட்டல் ரூபாயும்!

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதிய போது பிட்காயின் தொடர்பாக ஒரு அத்தியாயம் சேர்க்க வேண்டும் என விரும்பினேன். எனினும், ரொக்கமில்லா சமூகத்தை மையமாக கொண்ட கட்டுரைகளிலேயே கவனம் செலுத்தியதால், பிட்காயின் பகுதியை சேர்க்க முடியவில்லை. இப்போது, இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை பரவலாகி, ரிசர்வ் வங்கி தரப்பில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிட்காயின் பற்றி தனியே எழுத தோன்றுகிறது. இப்போதைக்கு, பிட்காயினுக்கும் டிஜிட்டல் ரூபாய்க்குமான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் மட்டும் பார்க்கலாம். பிட்காயின் பரவலாக அறியப்பட்டது […]

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதிய போது பிட்காயின் தொடர்பாக ஒரு அத்தியாயம் சேர்க்க வேண்டும் என விரும்பினேன். எனினும், ரொக்கம...

Read More »

பத்து நாளில் உருவான இணையதளம்!

காலத்தினால் செய்த உதவி என்பதை போல, கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட தளங்களின் வரிசையில் வருகிறது ’கொரோனாஹண்ட்’ தளம் (https://coronahunt.app/) . அதோடு கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட தளங்களில் இன்னமும் அணுக கூடியதாக இருக்கும் தளமாகவும் இது விளங்குகிறது. கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப்படைக்கத்துவங்கிய கட்டத்தில் 2020 ஏப்ரல் மாதம் இந்த தளம் அமைக்கப்பட்டது. உலக நாடுகளும், பெரும்பாலான மக்களும் கொரோனாவின் தீவிரத்தை இன்னும் உணர்ந்திராத நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான தரவுகளை தொகுத்தளிக்கும் வகையில் இந்த தளம் […]

காலத்தினால் செய்த உதவி என்பதை போல, கொரோனா காலத்தில் அமைக்கப்பட்ட தளங்களின் வரிசையில் வருகிறது ’கொரோனாஹண்ட்’ தளம் (https:...

Read More »

ஏ.ஐ கொடுக்கும் செயற்கை குரல் – ஆவணப்பட உலகில் தலைதூக்கும் புதிய பிரச்சனை !

ஒரு ஆவணப்படம் கவனத்தை ஈர்த்து, சர்ச்சயையும், விவாதத்தையும் ஏற்படுத்துவது புதிதல்ல. ஆனால், புகழ் பெற்ற சமையல் கலைஞர் ஆந்தோனி போர்டியன் வாழ்க்கையை மையமாக கொண்டி அண்மையில் வெளியாகி இருக்கும் ஆவணப்படம் தொடர்பான சர்ச்சை, முற்றிலும் எதிர்பாராததாக அமைந்து திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் அல்ல, இந்த ஆவணப்படம் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை, திரை உருவாக்கம் தொடர்பாக இது வரை இல்லாத புதிய கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புவதாக அமைந்திருக்கிறது. ஆவணப்பட படைப்பாளிகள் மட்டும் அல்லாமல், தொழில்நுட்ப வல்லுனர்களும் இந்த சர்ச்சையில் […]

ஒரு ஆவணப்படம் கவனத்தை ஈர்த்து, சர்ச்சயையும், விவாதத்தையும் ஏற்படுத்துவது புதிதல்ல. ஆனால், புகழ் பெற்ற சமையல் கலைஞர் ஆந்த...

Read More »

கொரோனா இரண்டாம் அலையை சமாளிக்க உதவும் தளம்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் தகவல்களையும், உதவிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இணையதளங்களில், கோவிட்ரிலிப் (https://covidrelief.glideapp.io/ ) ஒன்றாக விளங்குகிறது. தோற்றத்திலும் சரி உள்ளடக்கத்திலும் சரி மிக மிக எளிமையாக இருக்கும் இந்த தளம், அதன் நோக்கத்தை சரியாகவே நிறைவேற்றுகிறது. இந்த முகப்பு பக்கத்தில், உதவி, மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன், பிளாஸ்மா கோரிக்கை மற்றும் உணவு உதவி ஆகிய தலைப்புகளில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தலைப்புகளை கிளிக் செய்தால் மேலதிக தகவல்களை அணுகலாம். […]

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் தகவல்களையும், உதவிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் அமைக்கப...

Read More »

விக்கிபீடியாவின் முன்னோடியை தெரிந்து கொள்ளுங்கள்!

உங்களுக்கு பில் கேட்சை தெரியும். ரிக் கேட்சை தெரியுமா? ரிக் கேட்சை எனக்கும் இதுவரை தெரியாது. இன்று தான் தற்செயலாக அறிந்து கொண்டேன். விக்கிபீடியாவுக்கு முன்னோடி என்று சொல்லக்கூடிய இணைய திட்டம் ஒன்றை துவக்கியவர் ரிக் கேட்ஸ் எனும் தகவலை விக்கிபீடியா கட்டுரையில் தெரிந்து கொள்ள நேர்ந்ததால், அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. ரிக் கேட்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை சொற்ப தகவல்களை கொண்டதாக இருந்தாலும், அந்த தகவல்களே அவரைப்பற்றி வியப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. […]

உங்களுக்கு பில் கேட்சை தெரியும். ரிக் கேட்சை தெரியுமா? ரிக் கேட்சை எனக்கும் இதுவரை தெரியாது. இன்று தான் தற்செயலாக அறிந்த...

Read More »