விக்கிபீடியாவின் முன்னோடியை தெரிந்து கொள்ளுங்கள்!

உங்களுக்கு பில் கேட்சை தெரியும். ரிக் கேட்சை தெரியுமா? ரிக் கேட்சை எனக்கும் இதுவரை தெரியாது. இன்று தான் தற்செயலாக அறிந்து கொண்டேன். விக்கிபீடியாவுக்கு முன்னோடி என்று சொல்லக்கூடிய இணைய திட்டம் ஒன்றை துவக்கியவர் ரிக் கேட்ஸ் எனும் தகவலை விக்கிபீடியா கட்டுரையில் தெரிந்து கொள்ள நேர்ந்ததால், அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.

ரிக் கேட்ஸ் பற்றிய விக்கிபீடியா கட்டுரை சொற்ப தகவல்களை கொண்டதாக இருந்தாலும், அந்த தகவல்களே அவரைப்பற்றி வியப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றன. எனவே தான் ரிக் கேட்ஸ் பற்றிய பற்றி இந்த அறிமுக குறிப்பை எழுதும் ஆர்வம்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். அது ரிக் கேட்ஸ் என்று தேடினால், கூகுள் இணைய முன்னோடி ரிக் கேட்ஸ் தொடர்பான முடிவுகளை அளிக்காமல், இதே பெயரில் உள்ள அமெரிக்க அரசியல் தலைவர் ஒருவர் தொடர்பான முடிவுகளை முன் வைக்கிறது.

இதை சுட்டிக்காட்டுவதற்காக காரணம், கூகுள் தேடல் முடிவுகளின் போதாமையை இடித்துரைப்பது அல்ல; மாறாக, கூகுளை மட்டுமே இணைய தேடலுக்கான முழு முதல் வழியாக கருதுவதன் போதாமையை உணர்த்துவதற்காக.

நிற்க, இப்போது ரிக் கேட்ஸ் அறிமுகத்திற்கு வருவோம்.

முதலில் உத்தேசிக்கப்பட்ட இணைய களஞ்சியங்களில் ஒன்று என வர்ணிக்கப்படும் இண்டெர்பிடியா தொடர்பான விக்கிபீடியா அறிமுக கட்டுரையில், அதை துவக்கியதாக அடையாளம் காட்டப்படும் ரிக் கேட்ஸ் இணைப்பை கிளிக் செய்தால், இந்த மனிதர் இணைய முன்னோடிகளில் ஒருவராக இருப்பதையும், அவரை நாம் அதிகம் அறியாமல் இருப்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

இணைய வேட்டை ( இண்டெர்நெட் ஹண்ட் ) மற்றும் இண்டெர்பீடியாவுக்கான எண்ணம் ஆகியவற்றை மேற்கொண்டதற்காக ரிக் கேட்ஸ் இணைய முன்னோடியாக கருதப்படுவதாக விக்கி கட்டுரை குறிப்பிடுகிறது.

இணைய வேட்டையின் பின்னே இருக்கும் ஐடியாவை படித்தால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

இணைய வேட்டை என்பது ஒரு போட்டி. மாதாமாதம் நடத்தப்பட்ட இந்த போட்டியில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கு, இணையத்தை ஆதார வழியாக கொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதே விஷயம். இணைய ஆதாரங்கள் எனும் போது, விவாத குழுக்களின் இருப்பிடமான யூஸ்நெட், கூகுளின் தாத்தாவான ஆர்ச்சி தேடியந்திரம், வலைக்கு முந்தைய இணைய வடிவமான கோபர் உள்ளிட்டவை இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

1992 ல் இந்த போட்டி நடத்தப்பட்டுள்ளது. இது கூகுள் எல்லாம் எட்டிப்பார்க்காத காலம் என்பது மட்டும் அல்ல, இணையத்தை பரவலான பயன்பாட்டிற்கு கொண்டு வந்த வலை எனப்படும் வைய விரிவு வலையே பொதுமக்களுக்கு அறிமுகமாகாத காலம் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆனால், 1993 ல் வலை அறிமுகமான பின், இந்த போட்டி சுவாரஸ்யம் இழந்து நிறுத்தப்பட்டது.

ரிக் கேட்ஸ், பயனாளிகள் கூட்டு முயற்சியால் உருவாக்கப்படக்கூடிய இணைய களஞ்சியத்திற்கான யோசனையை 1993 ல் யூஸ்னெட் விவாத குழுவில் முன்வைத்திருக்கிறார். இதிலிருந்து தான் இண்டெர்பீடியா உருவானது. அதாவது இணைய களஞ்சியமாக அறியப்படும் விக்கிபீடியா உருவாவதற்கு முன் உருவான கூட்டு முயற்சியில் உருவான களஞ்சியம் இது.

இப்போது சொல்லுங்கள் ரிக் கேட்ஸ் இணைய முன்னோடிகளில் ஒருவர் தானே!

விக்கி இணைப்பு: Rick Gates (Internet pioneer)

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.