Category: தேடல்

மொழிபெயர்ப்பு செய்த இணைய மீனும் கூகுளின் மறதியும்!

கூகுள் தேடலில் ஈடுபடும் போது, அதன் முடிவுகளை கண்ணை மூடிக்கொண்டு ஏற்காமல் சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, பல நேரங்களில் அது முன்னிறுத்தும் முதல் முடிவு எத்தனை அபத்தமானது அல்லது பொருத்தமற்றது என்பதை உணர்வதும் அவசியம்.இதற்கான காரணங்களை அறிய அல்டாவிஸ்டாவின் பேபல் பிஷ் சேவை தொடர்பாக கூகுளில் தேடிப்பார்க்கவும். பேபல் பிஷ் (Babel fish) என்பது பல ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட அல்டாவிஸ்டா தேடியந்திரம் சார்பில் அதற்கு முன் வழங்கப்பட்ட மொழிபெயர்ப்பு சேவை. […]

கூகுள் தேடலில் ஈடுபடும் போது, அதன் முடிவுகளை கண்ணை மூடிக்கொண்டு ஏற்காமல் சீர் தூக்கி பார்க்க வேண்டும் என்பது மட்டும் அல்...

Read More »

இணையத்தில் உரையாடுவது என்றால் என்ன?

இணைய விவாதங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பழைய அல்டாவிஸ்டா தேடியந்திரம் தொடர்பான ’ஹேக்கர்நியூஸ்’ தளத்தின் விவாத சரட்டை குறிப்பிடலாம்: https://news.ycombinator.com/item?id=19170950 ஹேக்கர்நியூஸ் தளம் பற்றி அறிந்தவர்கள், அதன் விவாத சரடுகள் அனைத்துமே உரையாடலுக்கான உதாரணம் என்று குறிப்பிட விரும்பலாம். இந்த கருத்து மிகையோ வெறும் புகழ்ச்சியோ அல்ல என்பதை ஹேக்கர் நியூஸ் தளத்தை பயன்படுத்தி பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். ஹேக்கர் நியூஸ் என்பது, சமூக ஊடக பிரிவுகளின் கீழ் வரும் செய்தி அல்லது விவாத […]

இணைய விவாதங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, பழைய அல்டாவிஸ்டா தேடியந்திரம் தொடர்பான ’ஹேக்கர்நியூஸ்’ தளத்தின் விவாத...

Read More »

மெகல்லன் எனும் மாயமாய் மறைந்த தேடியந்திரம்!

மெகல்லன் பற்றி தற்செயலாக தெரிந்து கொண்ட போது, இப்படி ஒரு தேடியந்திரம் இருந்ததா? எனும் வியப்பே ஏற்பட்டது. இணைய வரலாற்றில் ஆர்வம் உள்ளவன் என்ற முறையில், பழைய தேடியந்திரங்கள் பற்றி ஓரளவு அறிந்திருந்தாலும், இதற்கு முன் மெகல்லன் எனும் தேடியந்திரம் பற்றி அறிந்தது இல்லை. அந்த கால தேடியந்திரங்கள் பற்றி கட்டுரைகளில் கூட, லைகோஸ், அல்டாவிஸ்ட்,இன்போசீக், எக்சைட், கோ, ஆஸ்க்ஜீவ்ஸ், ஹாட்பாட் போன்ற எண்ணற்ற தேடியந்திரங்களை அடிக்கடி எதிர்கொண்டிருந்தாலும், மெகல்லன் இதுவரை கண்ணில் பட்டதில்லை. இணைய தேடல் […]

மெகல்லன் பற்றி தற்செயலாக தெரிந்து கொண்ட போது, இப்படி ஒரு தேடியந்திரம் இருந்ததா? எனும் வியப்பே ஏற்பட்டது. இணைய வரலாற்றில்...

Read More »

அந்த காலத்திலேயே சாட்பாட் இருந்தன…

கூகுளுக்கு முன்னர் ஒரு சில அல்ல, சில நூறு தேடியந்திரங்கள் இருந்தன. இவற்றில், அல்டாவிஸ்டா, லைகோஸ் போன்ற தேடியந்திரங்கள் பற்றி எல்லாம் எப்போதாவது குறிப்பிடப்படும் அளவுக்கு கூட இல்லாமல், நம் கவனத்திற்கே வராத அந்த கால தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. நார்த்தன் லைட்ஸ் இதற்கு ஒரு உதாரணம். நார்த்தன் லைட்ஸ் பற்றி தனியே பார்க்கலாம், இந்த பதிவில் இன்னொரு மறக்கப்பட்ட தேடியந்திரத்தை பார்க்கலாம். பாய்ண்டர்ஸ்.கோ.யூகே – (www.pointers.co.uk ) பாய்ண்டர்ஸ் தேடியந்திரத்தின் சுவட்டை கூட இப்போது இணையத்திலும், […]

கூகுளுக்கு முன்னர் ஒரு சில அல்ல, சில நூறு தேடியந்திரங்கள் இருந்தன. இவற்றில், அல்டாவிஸ்டா, லைகோஸ் போன்ற தேடியந்திரங்கள் ப...

Read More »

தொழில்நுட்ப அகராதி: Crawl Budget- துழாவல் கணக்கு

இப்படி ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள். தினமும் அல்லது அடிக்கடி, யாரேனும் ஒருவர் அல்லது ஒரு சிலர், வீடு,வீடாக வந்து தகவல்களை சேகரித்து சென்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும். வருபவர் எதுவும் கேட்பது கூட கிடையாது, வீட்டின் வெளியே குறிப்பிட்ட இடத்தில் நின்றபடி தேவையான தரவுகளை சேகரித்துக்கொள்கிறார். அவ்வளவு தான். நிஜ உலகில் இப்படி நிகழ்வதில்லை: ஆனால் இணைய உலகில் நிகழ்கிறது. அதாவது மனிதர்கள் அல்ல, பாட்கள் அல்லது வலை சிலந்திகள் பெரும்பாலான இணையதளங்களின் கதவைத்தட்டி, […]

இப்படி ஒரு காட்சியை கற்பனை செய்து பாருங்கள். தினமும் அல்லது அடிக்கடி, யாரேனும் ஒருவர் அல்லது ஒரு சிலர், வீடு,வீடாக வந்து...

Read More »