Tag Archives: இசை

எல்லாம் இன்பமயம் இணையதளம்

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்று சொல்லப்படுவதுண்டு.அதே போல எதையும் சுவாரஸியமானதாக ஆக்கினால் அதனை அமல் செய்வதோ பின்பற்றுவதோ மிகவும் சுலபம்.

இந்த நம்பிக்கையோடு எந்த ஒரு செயலுக்கும் சுவாரஸ்யமான வழியை கண்டுபிடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ள இணையதளம் தான் ஃபன்தியரி டாட் காம்.

மக்களின் பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும் என்றால் எல்லா செயலையும் சுவாரஸ்யமானதாக ஆக்கினால் போதும் என்னும்  எண்ணமே இந்த தளத்திற்கான அடிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது.சமூக மாற்றத்திற்கான விஷ்யமாகட்டும் தனி மனிதர்கள் சார்ந்த பிரச்சனையாக இருக்கட்டும் மாற்றத்திற்கான வழி எளிமையானதாகவும் சுவாயானதாகவும் இருக்க வேண்டும் என்கிறது இந்த தளம்.

இதற்கான கருத்துக்களை பரிந்துரைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக சுற்றுச்சூழல் நோக்கில் சாலையில் குப்பைகளை வீசாமல் குப்பைத்தொட்டிகளில் போட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.இருப்பினும் இதனை நடைமுறை படுத்துவது சுலபமாக இருப்பதில்லை.இதற்காக அபராதம் விதிப்பதையோ அல்லது தண்டனை அளிப்பதையோ செய்வதை விட குப்பைத்தொட்டியில் வேண்டாதவற்றை போடுவதை சுவை மிகுந்த செயலாக மாற்றினால் எப்படி இருக்கும்?

அதாவது குப்பைத்தொட்டியில் குப்பைகளை போட்டதுமே விஷேச ஒலிகள் கேட்கத்துவங்கி விடும்.இந்த ஒலியை கேட்க விரும்பியே பலரும் குப்பைகளை தொட்டியில் பொடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல ஆரோக்கிய நோக்கில் லிப்டை பயன்படுத்துவதை விட மாடிபாடிகளில் ஏறிச்செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.ஆனாலும் பலரும் இதனை பின்பற்றுவதில்லை.மூச்சு வாங்க படிகளில் ஏறிச்செல்வதை விட ஜாலியாக லிப்டில் செல்லவே எல்லோரும் விரும்புகின்றனர்.

மாடிப்படிகளை பாடும் படிகளாக,அதாவது ஒவ்வொரு படியில் கால் வைக்கும் போதும் சங்கீத குறிப்புகள் கேட்கும் படி செய்து விட்டால் படிகளில் ஏறுவதை ரசிக்கும் படி செய்து விடலாம்.பியானோ படிகள் என்று இந்த மாடிபடிகளுக்கு பெயர் சூட்டலாம்.

இது போன்ற யோசனைகள் இந்த தளத்தில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றை படித்து தெரிந்து கொண்டு பின்பற்றலாம்.வரவேற்று கருத்து தெரிவிக்கலாம்.மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

இந்த தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகள் உண்மையிலேயே சுவையானதாக இருக்கின்றன.

போக்குவரத்து சிக்னல்களில் வாகன ஓட்டிகள் சிவப்பு விளக்கை பொருட்படுத்தாமல் செல்வதை தவிர்க்க,விதிகளை மதித்து நடப்பவர்களின் புகைப்படம் உடனடியாக அருகே உள்ள விளம்பர போர்டில் தோன்றச்செய்தால் எப்படி இருக்கும்?என்று ஒரு யோசனை கேட்கிறது.

அதே போல திரையரங்குகளிலோ சூப்பர் மார்க்கெட்டிலோ வரிசையில் காத்திருக்கும் போது போரடிக்காமல் இருக்க மாயக்கண்ணாடி ஒன்றின் முன் நின்ற படி அதில் தோன்று பந்தை தட்டிக்கொண்டிருக்கும் படி செய்தால் சுவாரஸ்ய்மாகவும் இருக்கும்,அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்தது போலவும் இருக்கும் அல்லவா என்கிறது மற்றொரு யோசனை.

இதைவிட சுவையாக இருக்கிறது பொழுதுபோக்கு சைக்கிள்.கூட்டமாக உள்ள இடங்களில் இந்த சைக்கிளை நிறுத்தி விட வேண்டும்.சைக்கிளோடு அழகிய விசிறிகள் இணைக்கப்பட்டிருக்கும்.சைக்கிளை மித்திதால் விசிறிகள் சுழலும்.வேகமாக மித்திதால் அதிக விசிறிகள் சுழலும்.போக்குவரத்து செரிசலில் சிக்கியவர்கள் இந்த சைக்கிளை மிதித்து மகிழ்ந்தால் காத்திருப்பு அலுப்பு போய்விடும்.அப்படியே உடற்பயிற்சி செய்த பலனும் கிடைக்கும்.

இப்படி எந்த வேலைக்கும் சுலபமான வழியை கண்டுபிடிக்கலாம் என்கிறது ஃபன்தியரி தளம்.

வர்த்தக நிறுவனமான வால்ஸ்வாகன் இந்த தளத்தை அமைத்துள்ளது.எதையும் சுவார்ஸ்யமாக்கினால் நடைமுறைக்கு கொண்டு வருவது சுலபமாது என்பதை நிறுவன செயல்பாட்டில் கடைபிடித்து வெற்றி கண்டை அடுத்து இந்த கோட்பாட்டை பிரபலமாக்க இந்த தளத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது.

சுவையான கருத்துக்களும் அவற்றை விளக்கும் அருமையான வீடியோக்களும் உள்ளன.

மன்னிக்கவும் தலைப்புக்கும் இன்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.ஒரு சுவாரஸ்யம் கருதி தான் இந்த தலைப்பு.

————–

http://www.thefuntheory.com/

இது இசைமயமான தேடியந்திரம்

மியூசிபீடியாவை இசைமயமான தேடியந்திரம் என்று வர்ணிக்கலாம்.ஆனால் இதனை பயன்படுத்திப்பார்க்க வேண்டும் என்றால் நிச்சயம் இசை ஞானம் தேவை .அதிலும் மேற்கத்திய இசையில் பரிட்சயம் அவசியம். இருப்பினும் இதன் அருமையை உணர்ந்து கொள்ள இசை ஆர்வம் இருந்தாலே போதும்.

மியூசிபீடியா என்ற பெயரை பார்த்தவுடன் விக்கிபீடியா போன்ற தளம் என்னும் நினைப்பு ஏற்பட்டிருக்கலாம்.அது ச‌ரி தான்.விக்கிபீடியாவின் தாக்கத்தால் துவக்கப்பட்ட தளம் என்றே இந்த தளம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் விக்கிபீடியாவுக்கும் இதற்கும் தொடர்பில்லை.

புரிந்து கொள்ளக்கூடியது போலவே இந்த தளத்தில் இசை தொடர்பான குறிப்புகளை யார் வேண்டுமானாலும் சமர்பிக்கலாம். எவர் வேண்டுமானாலும் திருத்தலாம்.இசை தொடர்பான தகவல் என்றால் கட்டுரைகளோ ,பாடகர்கள் அல்லது இசைக்குழுக்கள் குறித்த த‌க‌வ‌ல்க‌ளோ இல்லை.மாறாக நோட்ஸ் என்று சொல்லப்படும் பாட‌ல்க‌ளின் இசைக்குறிப்புக‌ள் இட‌ம் பெறுகின்ற‌ன‌.
அதாவ‌து பாட‌ல்க‌ளுக்கான‌ மியுசிக் ஷீட்டை அப்ப‌டியே ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.நிச்ச‌ய‌ம் இசை க‌லைஞ‌ர்க‌ளுக்கும் இசை ஆர்வ‌ல‌ர்க‌ளுக்கும் இது ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்.குறிப்பாக‌ இசையை ப‌யில்ப‌வ‌ர்க‌ளுக்கு பேரூத‌வியாக‌ இருக்கும்.
இந்த‌ த‌ள‌த்தில் உள்ள‌ ம‌ற்றொரு சிற‌ப்பம்ச‌ம் பாட‌ல்க‌ளை தேடுவ‌த‌ற்கான‌ வ‌ச‌தி.சில‌ நேர‌ங்க‌ளில் பாட‌லக‌ளின் மெட்டு தெரியும். என்ன‌ பாட‌ல் என்று தெரியாது அல்ல‌வா?அது போன்ற‌ பாட‌ல்க‌ளை மெட்டை குறிப்பிட்டு தேட‌லாம்.

நினைவில் இருக்கும் மெட்டை விசில‌டிப்ப‌து போல‌ வாயால் வாசித்துக்காட்ட‌லாம்.இல்லை விசைப்ப‌ல‌கை மூல‌ம் இசைத்துக்காட்ட‌லாம்.

—————

http://www.musipedia.org/

ஒரு பக்க கலைஞர்கள்

1ஒரே பக்கத்தில் ,அதாவது முகப்பு பக்கத்தில் எல்லா பாடகர்கள் பற்றிய விவரங்களையும் இடம்பெற வைத்தால் எப்படி இருக்கும்.ஒன்பேஜ் ஆர்டிஸ்ட் இணையதளம் இதை தான் அழகாக‌ செய்கிறது.

பாப் பாடகர்களில் தொடங்கி ராக் பாடகர்கள் ,ஹிப் ஹாப் படகர்கள்,ராப் பாடகர்கள் என மேற்கத்திய இசை உலகில் எத்தனை வகையான பாடகர்கள் இருக்கின்றன‌றோ அவர்கள் அனைவர் பற்றிய தகவல்களை தாங்கிய வண்ணம் இதன் முகப்பு பக்கம் அமைந்துள்ளது.

ஒரே குடையின் கீழ் எல்லா தகவல்களூம் என்று சொல்வது போல ஒரே இடத்தைல் பாடகர்களை பற்றி தெரிந்து கொள்ள செய்வது நல்ல முய்ற்சி தான்.ஆனால் முகப்பு பக்கம் சிக்கலானதாக குழப்பம் தரக்கூடியதாக தோன்றுமே என்ன செய்வது ?

ஆச்சர்ய‌ப்ப‌டும் வ‌கையில் ஒன்பேஜ் ஆர்டிஸ்ட் த‌ள‌த்தின் முக‌ப்பு ப‌க்க‌ம் குழப்பமில்லாம‌ல் எளிமையாக‌வே அமைந்திருக்கிற‌து.அந்த அள‌வுக்கு த‌க‌வ‌ல்க‌ளை அழ‌காக‌ தொகுத்துள்ள‌ன‌ர்.ப‌ல்வேறு வ‌கையான‌ இசை வ‌டிவ‌ங்க‌ள் த‌னித்த‌னி த‌லைப்புக‌ளாக‌ பிரிக்க‌ப்ப‌ட்டு அவ‌ற்றின் கீழ் பாட‌க‌ர்க‌ள் இட‌ம்பெறுகின்ற‌ன‌ர்.

விரும்பிய‌ ப‌ட‌க‌ரின் பெய‌ரை கிளிக் செய்தால் முழு விவ‌ர‌ங்க‌ளும் த‌னிப்ப‌க்க‌த்தில் வ‌ந்து நிற்கும்.இங்கு இட‌ம்பெறும் த‌க‌வ‌ல்க‌ள் மெரும்பாலும் ஏற்க‌ன‌வே யூடியூப்,அமேஸான்,போன்ற‌ த‌ல‌ங்க‌ளில் இருப்ப‌வைதான்.அவ‌ற்றை மிக அழ‌காக‌ தொகுத்து த‌ருவ‌து தான் இத‌ன் சிற‌ப்பு.

சின்ன‌தாக ப‌யோ டேட்டா, பாடல் ஆல்ப‌ங்க‌ளின் வீடியோ கோப்புக‌ள்,எதிர்வ‌ர‌ உள்ள‌ இசை நிக‌ழ்ச்சிக‌ள் பற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் ஆகிய‌வை இட‌ம்பெற்றிருகின்ற‌ன‌.ப‌க்க‌த்திலேயே இதே போன்ற‌ க‌லைஞ‌ர்க‌ள் என்னும் குறிபோடு நிக‌ரான‌ ம‌ற்ற‌ ப‌ட‌க‌ர்க‌ள் பற்றிய‌ விவ‌ர‌ங்க‌ளும் இட‌ம்பெறுகிற‌து.

ஆக‌ ஒரு முறாஇ உள்ளே நுழைந்துவிட்டால‌ இசைப்பிரிய‌ர்க‌ள் மேற்கொண்டு விவ‌ர‌ங்க‌ளை தேடிக்கொண்டே செல்ல‌லாம்.

இந்த‌ தள‌த்தின் ம‌ற்றொரு சிற‌ப்பம்ச‌ம் முக‌ப்பு ப‌க்க‌த்தில் ஒவ்வொரு த‌லைப்புக‌ளின் கீழும் 5 பாட்க‌ர்க‌ள் ம‌ட்டுமே இட‌ம்பெறுவ‌து தான்.இத‌னால் முக‌ப்பு ப‌க்க‌ம் எளிமையாக‌ தோற்ற‌ம் த‌ருவ‌தோடு த‌ற்போது முன்னியில் உள்ள‌ பாட‌க‌ர்க‌ளின் ப‌ட்டிய‌லாக‌வும் இது அமைகிற‌து.இந்த‌ வ‌கையில் இசை ச‌ந்தையில் நில‌வும் போக்குகளையும் தெரிந்துகொள்ள‌லாம்.

குறிப்பிட்ட‌ பாட‌க‌ர் தொட‌ர்பான‌ த‌க‌வ‌ல் தேவை என்றால் முக‌ப்பு ப‌க்க‌த்திலேயே தேட‌ல் வ‌ச‌தி இருக்க‌வே இருக்கிற‌து.

—–

link;
http://www.onepageartist.com/

மர்ம இணையதளம்

putyourearsincontrolநீங்கள் இசைப்பிரியர் என்றால் அதிலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவர் என்றால் வரும் 21 ம் தேதி சோனி எரிக்ஸ‌ன் அமைதுள்ள புதிய மைக்ரோ இணையதளத்திற்கு விஜயம் செய்து பார்க்கவும்.

அன்றைய தினம் நீங்கள் இசையை கேட்கும் முறையையே மாற்ற இருப்பதாக சோனி எரிகஸன் அந்த தளத்தில் தெரிவித்துள்ளது.அந்த அறிவிப்பை தவிர அந்த தளத்தில் வேறூ அந்த தகவலும் இல்லை.அந்த மர்ம தளம் இணைய உலகில் ஒருவித ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுதியுள்ளது.

இந்த இணையதளம் புதிய அறிமுகத்திறகான விளம்பர முயற்சியாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.பூளூடூத் சார்ந்த இசைகேட்கும் சாதனத்திற்கான விள‌ம்பரம் இது என்று செல்போன் துறையை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் த்னது டிவிட்டர் பதிவில் எழுதியுள்ளார்.

எப்படியோ இந்த இணையதளம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை.
——-

link;
http://www.sonyericsson.com/putyourearsincontrol/

ஒலி நூலகம் தெரியுமா?

soundsnap4நீங்கள் இசையமைப்பாளராகவோ அல்லது இசைப்பிரியராகவோ இருந்து புதிய வித்தியாசமான ஒலியை தேடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.அவ்வாறாயின் நீங்கள் செல்ல வேண்டிய இடம் எது தெரியுமா?

அது இடம் அல்ல இணைய தளம்; இல்லை ஒலி நூலகம்.

சவுண்டுஸ்நேப் என்பது அதன் பெயர்.
நுலகம் என்றால் புத்தங்கள் இருக்கும் என்பது போல இந்த தளத்தில் ஒலிகள் குவிந்து கிடக்கின்றன‍. இல்லை அழகாக ,வரிசையாக, வகை வகையாக அடிக்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த ஒலிகள் இடம்பெற்றுள்ளன. எல்லமே ஹாலிவுட் இசையமைப்பாளர்கள்,மற்றும் தொழில் முறை இசையமைப்பாளர்கள் வுருவாக்கியவை.

விலங்குகளின் ஒலிகள், தொழிற்சாலை ஓசைகள், இசை மெட்டுக்கள், வீட்டில் கேட்கும் ஒலிகள், இயற்கை ராகங்கள் என எண்ணற்ற ஒலிகள் கொட்டிகிடக்கின்றன.

இதில் எவற்றை வேண்டுமாலும் பதிவிறக்கம் செய்து கேட்டு பார்க்கலாம் . பயன்படுத்தலாம்.காப்புரிமை தொல்லை கிடையாது.எனினும் நிபந்தனைகளை கவனமாக படித்துக்கொள்ளவும்

ஆனால் அதற்கு முன்னால் உறுப்பினாராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.பதிவு செய்த பிறகு ஒலிகளை தேட துவங்கிவிடலாம்.

ஒலிகளை கேட்பது மட்டும் அல்ல உங்கள் வசம் உள்ள ஒலிகலையும் இங்கே சமர்பிக்கலாம்.

ஆரம்பத்தில் எத்தனை முறை வேன்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய அனுமதித்து வந்தனர். ஆனால் இப்போது முதல் 5 ஒலிகள் மட்டுமே இலவசமாக உள்ளது. அதன் பிறகு கட்டணம் உண்டு.

அதிகமானோர் பதிவிறக்கம் செய்வதால் தளத்தை பராமரிக்க அதிக செலவு ஆவதாலும், ஒலிகளை வழங்குபவர்கள் அதற்கான பலனை கேட்பதாலும் பகுதி இலவசம் பகுதி கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது.

ஆனால் ஒன்று நீங்கள் ஒலிகளை சமர்பிப்பவராக இருந்தால் இதன் மூலம் வருமானம் வரவுன் வாய்ப்புள்ளது அல்லவா?

————-

ஒலிகளை கேட்டு ம‌கிழ….

linki;
http://www.soundsnap.com/