Tag Archives: இணையவாசிகள்

ஓவியங்களுக்கான விக்கிபீடியா;

விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் தகவல்களை சேர்க்கலாம்,திருத்தலாம்.அதே போலவே யார் வேண்டுமானாலும் வரைவதற்கான வாய்ப்பைம் அளிக்கிறது டிராசம்(  http://www.drawsum.com/   ) இணையதளம்.

ஒரு திறந்தவெளி கலை முயற்சி என வர்ணித்துக்கொள்ளும் இந்த தளத்தை ஓவியங்களுக்கான விக்கிபீடியா என குறிப்பிடலாம்.விக்கிபீடியாவை முன்னோடியாக கொண்டே இந்த தளம் உருவக்கப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விக்கிபீடியா இணையவாசிகளின் பங்களிப்பால் மாபெரும் கலைக்களஞ்சியமாக உருவானதோ அதே போல இந்த தளமும் காலப்போக்கில் இணையவாசிகளின் பங்களிப்பால் மாபெரும் மக்கள் ஓவியமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பங்கேற்பது மிகவும் சுலபமானது.இதில் உள்ள கேன்வாஸ் பகுதியை கிளிக் செய்தால் அதில் ஏற்கனவே வரையப்பட்டுள்ள ஓவிய பகுதிகள் இடம்பெற்றிருக்கும்.நீங்கலூம் உங்கள் பங்கிற்கு ஓவியத்தை வரையலாம்.

புதிது புதிதாக இணையவாசிகள் வரைந்து கோண்டே இருப்பார்கள் என்பதால் இந்த ஓவியம் தினம் மாறிக்கொண்டே இருக்கும்.வளர்ந்து கொண்டே இருக்கும்.

பெரிய கலைப்படைப்பாக இது உருவாகுமா என்றெல்லாம் தெரியவில்லை.ஆனால் சுவாரஸ்யமான முயற்சி.

இணையதள முகவரி;http://www.drawsum.com

வித்தியாசமான தேடியந்திரம்;3 டி தேட‌ல்

ச‌ர்ச் கியூப் தேடிய‌ந்திர‌த்தை உண்மையிலேயே வித்தியாச‌மான‌ தேடிய்ந்திர‌ம் என்று தான் சொல்ல‌ வேண்டும்.அதிலும் எத்த‌னை நாள் தான் ஒரே மாதிரியான‌ தேட‌ல் முடிவுக‌ளை பார்த்து கொன்டிருப்ப‌து என‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ தேடிய‌ந்திர‌ம் கொஞ்ச‌ம் புத்துண‌ர்ச்சியை அளிக்க‌ கூடும்.

அந்த‌ அள‌வுக்கு தேட‌ல் முடிவுக‌ளை முற்றிலும் புதிய‌ முறையில் இந்த‌ தேடிய‌ந்திர‌ம் காட்டுகிற‌து.

உட‌னே கூகுலுக்கு போட்டியாக‌ ஒரு தேடிய‌ந்திர‌ம் (அல்லது இன்னொரு தேடியந்திரம்)வ‌ந்துவிட்ட‌து என‌ நினைக்க‌ வேண்டாம்.கார‌ண‌ம் கூகுலை வைத்து பிழைப்பு ந‌ட‌த்தும் தேடிய‌ந்திர‌ வ‌கையை சேர்ந்த‌து தான் ச‌ர்ச் கீயுப்பும்.
அது மட்டுமல்ல இணையதளங்களை இணையதுண்டுகளாக (த‌ம்ப்ஷாட்) காட்ட தம்ப்ஷாட்ஸ் இணையசேவையை பயன்படுத்துகிறது.

அதாவ‌து ச‌ர்ச் கியூப்பும் கூகுல் தேடிய‌ந்திர‌த்தையே ப‌ய‌ன்ப‌டுத்துகிற‌து.ஆனால் முடிவுக‌ளை ப‌ட்டிய‌லிடுவ‌தில் தான் வித்தியாச‌ம் காட்டுகிற‌து.உணமையில் இது தேட‌ல் முடிவுக‌ளை ப‌ட்டிய‌லிட்டு தரவில்லை.அத‌ற்கு மாறாக‌ முப்ப‌ரிமான‌ ச‌துர‌மாக‌ தேட‌ல் ப‌ட்டிய‌லில் உள்ள‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை இட‌ம்பெற‌ வைக்கிற‌து.

இணைய‌த‌ள‌ங்க‌ளின் துண்டு தோற்ற‌ம் (த‌ம்ப்ஷாட்)இந்த‌ ச‌துர‌ம் சுழன்று கொண்டே இருக்கும்.ச‌துர‌த்தில் ஏதாவ‌து ஒரு இட‌த்தில் ம‌வுசை கொண்டு சென்றால் அருகே அந்த‌ இணைய‌த‌ள‌த்தின் அறிமுக‌ம் வ‌ந்து நிற்கிற‌து.அதில் கிளிக் செய்தால் த‌ள‌த்திற்கு விஜ‌ய‌ம் செய்ய‌லாம்.

இணைய‌த‌ள‌ங்க‌ள்,இணைய‌ ப‌க்க‌ங்க‌ள்,செய்திக‌ள்,வீடியோ,புகைப்ப‌ட‌ங்க‌ள்,என‌ எல்லாமே இந்த‌ சதுர‌த்தில் இருக்கின்ற‌ன‌.மொத்த‌ம் 96 இணைய‌ துண்டுக‌ள் இவ்வாறு இட‌ம்பெற்றுள்ள‌ன‌.

வ‌ரிசையாக‌ தேட‌ல் முடிவுக‌ளை பார்த்து பார்த்து ஏற்ப‌ட்ட‌ க‌ளைப்பு இந்த‌ ச‌துர‌த்தை பார்த்த‌ மாத்திர‌த்தில் வில‌கிவிடும்.

ச‌துர‌த்தை மேலும் கீழாக‌வோ ப‌க்க‌வாட்டிலோ புர‌ட்ட‌லாம்.இந்த‌ தேடிய‌ந்திர‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து எப்ப‌டி என்று த‌னியே குறிப்பும் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.அநேக‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து எப்படி? என‌ விள‌க்க‌ம் அளிக்கும் அபூர்வ‌ தேடியந்திர‌ம் இதுவாக‌ தான் இருக்கும்.

ச‌ர்ச் கியூப்பை சூப்ப‌ர் தேடிய்ந்திர‌ம் என்று சொல்ல‌ முடியாவிட்டாலும் முடிவுக‌ளை காண்பிக்கும் வித‌த்தில் சின்ன வித்தியாச‌த்தை செய்து க‌வ‌ர்ந்திழுக்கிற‌து.

காட்சிரீதியாக‌ முடிவுக‌ளை காண்பிப்ப‌து என இத‌னை ச‌ர்ச் கியூப் குறிப்பிடுகிற‌து.வெகு கால‌ம் முன் விவிஸ்மோ தேடிய‌ந்திர‌ம் முடிவுக‌ளை ப‌ட்டிய‌லிடுவ‌தில் புதுமையை புகுத்த‌ முய‌ன்றது நினைவிருக்க‌லாம்.விவிஸ்மோ முடிவுக‌ளை பட்டியலிடும் முறையில் இருந்து வில‌கி அவ‌ற்றை வ‌ரைப‌ட‌ம் போல‌ காட்ட‌ முய‌ன்ற‌து.ஆனால் விவிஸ்மோ இப்போது பயன்பாட்டில் இல்லை.

அந்த‌ வ‌ரிசையில் இப்போது ச‌ர் கியுப் அறிமுக‌மாகியுள்ள‌து.

எத‌யும் காட்சி ரீதியாக‌ அணுக‌ விரும்புகிர‌வ‌ர்க‌ளுக்கு நிச்ச‌ய‌ம் இந்த‌ தேடிய‌ந்திர‌ம் பிடித்திருக்கும்.
ஆனால் இத‌னை முழுமையாக ப‌ய‌ன்ப‌டுத்த‌ பிளேஷ் வ‌ச‌தி தேவை.

சர்ச் கியூப் உங்களுக்கு பிடித்திருந்தால் அதே பாணியில் வேறு சில தேடிய்ந்திரங்களும் இருக்கின்றன.அவற்றில் ரெட்ஜீயை மிகவும் சிரப்பானது என்று குறிப்பிடலாம்.

அழகிய வரிக்குதிரையின் லோகோ வரவேற்கும் இந்த தேடியந்திரம் வண்ணமயமான பின்னணியில் மாமுலான தேடியந்திரம் போலவே இருக்கிறது.ஆனால் தேடு என கட்டளையிட்ட பின் இதன் தனித்துவம் தெரிகிறது.

தேடல் முடிவுகள் இணையதளங்களின் துண்டு தோற்றங்களாக அரை வட்டமாக தோன்றுகின்றன.வட்டத்தை பக்கவாட்டில் நகர்த்தினால் புதிய இணையதளங்களின் தோற்ற‌த்தை பார்க்க முடியும்.அவை பற்றிய‌ குறிப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.
இதே போல ஆஸ்கோப் தேடியந்திரமும் முடிவுகளை காட்சி ரீதியாக தருகிறது.

———–

http://www.search-cube.com/

யூடியூப் வீடியோக்களை சேர்த்து வைப்பதற்கான இணையதளம்.

ஆற‌ அம‌ர‌ இணைய‌த்தில் உலா வ‌ருவ‌தென்ப‌து வேறு.ஆனால் அந்த பாக்கியம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வேலைக்கு நடுவே அவசர கதியில் தான் இணையத்தில் உலாவ நேர்கிறது.அதிலும் பலர் அலுவலக நேரத்தில் தான் இண்டெர்நெட்டை பயன்படுத்துபவர்களாகவும் இருப்பதால் அரக்க பரக்க சமைக்கும் இல்லத்தலைவியைப்போல தான் இணையதளங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.

சிலருக்கு இண்டெர்நெட்டில் உலாவுவதே வேலையாகவும் அமையலாம்.அவர்களும் கூட வேலைக்கு நடுவே தங்களுக்கு பிடித்தமான தளங்களை போகிற போக்கில் தான் மேய வேண்டும்.

இந்த பீடிகை எதற்காக என்றால் இப்படி அவசரமாக இனைய உலா மேற்கொள்ளும் இணையவாசிகளுக்கு உதவக்கூடிய அருமையான இணைய சேவையை அறிமுக செய்வதற்காக தான்.

அதிலும் குறிப்பாக‌ யூடியூப் பிரிய‌ர்க‌ளுக்கான‌து.இன்னும் குறிப்பிட்டு சொல்ல‌ வேண்டும் என்றால் இசைம‌ய‌மான‌ யூடியூப் பிரிய‌ர்க‌ளுக்கான‌து.

மியூப் என்னும் அந்த‌ இணைய‌த‌ள‌ம் உங்க‌ள் க‌ண்ணில் ப‌டும் யூடியூப் விடியோ கோப்புக‌ளை சேமித்து வைத்துக்கொள்ள‌ உத‌வுகிற‌து.

அதாவ‌து வேலைக்கு ந‌டுவே யூடியூப் ப‌க்க‌ம் எட்டிப்பார்க்கும் போது ந‌ல்ல‌தாக‌ ஒரு விடியோ தென்ப‌ட‌லாம்.3 அல்ல‌து 4 நிமிட‌ங்க‌ள் ஓட‌க்கூடியு வீடியோ என்றாலும் அப்போது உட‌ன‌டியாக‌ பார்ப்ப‌து சாத்திய‌ம் இல்லாம‌ல் போக‌லாம்.அதிலும் இசை ஆல்பம் தொடர்பான வீடியோ காட்சி என்றால் கொஞ்சம் ஆர அமர கேட்டும் பார்த்தும் ரசிக்க தோன்றும்.

உட‌னே என்ன‌ செய்வீர்க‌ள்?பின்னர் பார்த்து ரசிக்கலாம் என்று ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ வீடியோவை ம‌ன‌தில் குறித்து வைத்து கொள்வீர்க‌ள்.அத‌ன் பிற‌கு ம‌ற‌ந்து போய் விடுவீர்க‌ள்.நேர‌ம் கிடைக்கும் போது நினைத்துப்பார்த்தால் அந்த‌ முக‌வ‌ரியும் ம‌ற‌ந்து போயிருக்கும்.அல்ல‌து ச‌ரியாக‌ நினைவில் இருக்காது.

எதையும் காகித‌த்தில் குறித்து வைக்கும் ப‌ழ‌க்க‌ம் இருந்தால் பிர‌ச்ச‌னையில்லை.ஆனால் ந‌ம்மில் ப‌ல‌ருக்கு அந்த‌ ப‌ழ‌க்க‌ம் இல்லையே.

இது போன்ற‌ நேர‌ங்க‌ளில் இணைய‌ ப‌க்க‌ங்க‌ளை புக்மார்க்காக‌ குறித்து வைக்க‌லாம் .ஆனால் யூடியூப் வீடியோக்க‌ளுக்கு இது ச‌ரிப‌ட்டு வ‌ருமா?

ஒரு க‌ட்டுரையை ம‌ட்டும் பின்ன‌ர் ப‌டிக்கமாம் என்று சேமித்து வைப்ப‌து போல‌ யூடியூப் வீடியோவையும் அப்ப‌டியே செமித்து வைக்க‌ முடிந்தால் எப்ப‌டி இருக்கும்?மீயூப் த‌ள‌ம் அத‌னை தான் செய்கிற‌து.

இந்த‌ த‌ள‌த்தில் உறுப்பின‌ரான‌ பின்ன‌ர் அவ‌ப்போது யூடியூபில் க‌ண்ணில் ப‌டும் அழ‌கான‌ வீடியோக்க‌ளை உங்க‌ள் க‌ண‌க்கில் சேமித்து கொள்ள‌லாம்.நேர‌ம் கிடைக்கும் போது அவ‌ற்றை சாவ‌காச‌மாக‌ பார்த்து ர‌சிக்க‌லாம்.

ஆக‌ இந்த‌ சேவையை ப‌யன்ப‌டுத்தினால‌ யூடியூப் விடியோக்களை மற‌தியால் த‌வ‌ற‌விடும் வாய்ப்பே இல்லை.

இந்த‌ த‌ள‌த்தில் நீங்க‌ள் பார்க்க‌ வேண்டிய‌ வீடியோக்க‌ளை சேமித்து வைப்ப‌தோடு ஏற்க‌னெவே ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சேர்த்து வைத்துள்ள‌வ‌ற்றையும் க‌ண்டு ர‌சிக்க‌லாம்.அந்த‌ வ‌கையில் புதிய‌ வீடியோக்க‌ளை பார்த்து ர‌சிப்ப‌த‌ற்கான‌ வ‌ழியாக‌வும் இது விள‌ங்குகிற‌து.புதிய வீடியோ காட்சிகளை பார்ப்பதற்கான ஒன்னொரு வழியாக இந்த‌ த‌ள‌த்திலேயே பிர‌ப‌ல‌மான‌ வீடியோ காட்சிக‌ளூம் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டுள்ள‌து.

இந்த‌ த‌ள‌ம் ம‌ற்றும் யூடியூப்பில் தேடும் வ‌ச‌தியும் உண்டு.

——–

http://www.muube.com/

வறுமையை விரட்ட டிவிட்டர்

tweetடிவிட்டர் மூலம் வறுமையை ஒழிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் டிவிட்டர் வழியே நிதி திரட்டலாம். டிவீட் பாவர்ட்டி தளம் அதனைதான் செய்கிறது.

இந்த தளமும் எளிதானது. அதன் நோக்கமும் அதைவிட எளிதானது.டிவிட்டர் வழியே 2000 டாலர்களை திரட்ட முடியுமா என்பது தான் நோக்கம்.

இதற்காக இணையவாசிகள் செய்ய வேண்டியதெல்லாம் ந‌ன்கொடை வழங்க ஒப்புக்கொண்டு, அது பற்றி டிவிட்டரில் தகவல் தெரிவிப்பதும் தான். முகப்பு பக்கத்திலேயே இதற்கான வசதியும் இடம்பெற்றுள்ளது.

நன்கொடை செலுத்தியது பற்றி டிவிட்டர் செய்தவுடன் அருகில் அந்த தகவல் இடம்பிடிக்கும்.இந்த டிவிட்டர் செய்தியை பார்ப்பவர்கள் தங்கள் பங்கிற்கு நன்கொடை தந்து டிவிட்டர் செய்ய வெண்டும்.

இப்படி டிவிட்டர் டிவிட்டராக நீண்டுகொண்டே சென்றால் திட்டமிட்ட தொகையை திரட்டிவிடலாம் என்பது நம்பிக்கை.

2000 என்பது ஒரு இலக்கு தான். இதில் வெற்றி பெற்றால் மேற்கொண்டு பல நல்ல விஷயங்களை இவ்விதமாக செய்யலாம் என்னும் நம்பிக்கை 1010 பிராஜக்ட் அமைப்பிற்கு உள்ளது. இந்த அமைப்பு தான் ட்வீட்பாவ‌ர்டி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த அமைப்பும் டிவிட்டர் மூலம் தன்னுடைய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறது.வலது புறத்தில் இதனை காணலாம்.

டிவிட்டர் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கான மற்றொரு சிறந்த உதாரணம் இது.

———-
link;
http://tweetpoverty.com/

சுயநல நெட்

உலகில் சுயநலமே மேலோங்கியிருப்பதாக உங்களில் பலர் கருதலாம். உலகில் எப்படியோ, இன்டெர்நெட் உலகைப் பொறுத்தவரை இணையவாசிகள் எல்லாம் சுயநலமிக்கவர்களாக மாறிவருகின்றனர்.

.
இன்டெர்நெட் நிபுணரான ஜேக்கப் நீல்சன் இந்தகருத்தைதான் உறுதிபட தெரிவித்திருக்கிறார். இன்டெர் நெட்டைப்பொறுத்தவரை நீல்சன் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால், அது சரியாகத்தான் இருக்கும்.

காரணம், மனிதன் ஆழமான ஆய்வு மேற்கொள்ளாமல் மேலோட்டமாக எல்லாம் எந்த கருத்தையும் கூறுவதில்லை. அதோடு, இன்டெர்நெட் பயன்பாடு சார்ந்த விஷயத்தில் அவர் ஒரு மன்னராகவே இருந்து வருகிறார்.

இன்டெர்நெட் பயன்பாடு என்பது எத்தனை நுட்பமானது என்பதை உணர்த்தக்கூடிய பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து பயன்பாட்டு நிபுணர் என்னும் பட்டப்பெயரையும் நீல்சன் வாங்கி வைத்திருக்கிறார்.

இன்டெர்நெட் பயன்பாடு தொடர்பான விஷயங்களை தொடர்ந்து கவனித்து வரும் அவர், அவ்வப்போது இதுகுறித்த தமது பார்வைகளை வெளியிட்டும் வருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை அவர் இன்டெர்நெட் பயன்பாடு குறித்த விரிவான அறிக்கையையும் வெளியிடுவது வழக்கம்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்டெர்நெட் பயன்பாடு தொடர்பான அறிக்கைதான் இணையவாசிகளை சுயநலம் தொடர்பான கருத்தை முன்வைத்திருக்கிறது. சுயநலம் என்றவுடன் நிஜ உலகில் நாம் பார்க்கக்கூடிய சுயநலத்தோடு ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.

நீல்சன் இங்கே குறிப்பிடும் சுயநலம் என்பது இணையவாசிகளின் கவனம் சிதறாமல் எது தேவையோ, அதனை தீர்மானித்துக்கொள்ளும் தன்மையைத் தான். இன்டெர்நெட் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. இணைய தளங்களின்எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதோடு, இணைய சேவைகளும் புதிது புதிதாக அறிமுகம் ஆகிக்கொண்டிருக்கின்றன.

முன் இருந்தது போல் இன்டெர்நெட் இன்று எளிமையாக இல்லை. இன்டெர் நெட்டும் சரி, அதில் கொட்டிக்கிடக்கும் தளங்களும் சரி மிகவும் சிக்கலாகியிருக்கின்றன. எனவே இன்டெர்நெட்டில் தகவல்களை தேடிச்செல்லும் ஒருவர், வழிமாறி சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. அவர்களின் கவனத்தை சிதறடிக்கக்கூடிய அநேக விஷயங்கள் இன்டெர்நெட்டில் இருக்கின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் மீறி இணையாவாசிகள் தங்கள் நோக்கத்தில் தெளிவாக இருக்கின்றனர் என்று நீல்சன் தமது ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பிட்ட இணையதளத்தை தேடிவரும் இணையவாசிகள் அதற்கு முன்பாகவே தங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து இருக்கின்றனர் என்றும், இணையதளத்தில் எதிர்பார்த்த தகவல்கள் கிடைத்ததும் வந்த வேலை முடிந்து விட்டதாக அவர்கள் வெளியேறி விடுகின்றனர் என்றும் நீல்சன் தெரிவிக்கிறார்.

பலரது விஷயத்தில் ஒருவித அவசர தன்மையே காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
இணையதளங்கள் பல்வேறு உப சேவைகளை வழங்கி வந்தாலும் கூட, பலர் அவற்றையெல்லாம் அலட்சியப் படுத்த தயாராக இருக்கின்றனர். மேலும் பொருட்களை விற்பனை செய்யும் இன்டெர்நெட் வர்த்தகம் சார்ந்த முயற்சிகளையும் அவர்கள் கண்டுகொள்ள தயாராக இல்லை.

தங்களுக்கு எது தேவையோ அதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். இது சுயநலம் என்றாலும், யாருக்கும் பாதகம் இல்லாத சுயநலம்தான். ஆனால் இணையவாசிகளை கவர்வதற்காகவென்று பல்வேறு அம்சங்களைக்கொண்ட இணைய தளங்களை வடிவமைத்து வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தரும் செய்திதான். ஏமாற்றம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் தரலாம்.

இன்டெர்நெட் வர்த்தகம் சார்ந்த முயற்சிகளை இணையவாசிகளை புறக்கணிப்பதுபோல, செய்திகள் மற்றும் தகவல்களை தேர்வு செய்து வழங்கும் இணையதளங்களின் முயற்சிகளையும் அநேகமாக புறந்தள்ளிவிடுகின்றனர் என்று நீல்சன் தெரிவிக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் இணையவாசிகள் தாங்கள் தேடும் விஷயத்தை இன்டெர்நெட் மூலம் பெறுவதன் வெற்றிவிகிதம் 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இணையதளங்களின் மிகச்சிறந்த வடிவமைப்பு இதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் கூறுகிறார். இத்தனைக்கும் மத்தியில் இன்னமும் தேடியந்திரங்களே கோலோச்சுவதாக வும், பெரும்பாலான இணையவாசிகள் தேடியந்திரங்கள் மூலமே தகவல்களை தேடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேடியந்திரங்களில் கூகுலே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. மிகச்சரியான போட்டி தேடியந்திரம் ஒன்று உருவாகாத வரை கூகுலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தேடியந்திரங்கள் முழுமையானது என்று சொல்லி விடுவதற்கில்லை. நீண்டகால நோக்கில் பார்த்தால், கூகுலை விட நல்லதொரு தேடியந்திரம் உருவாக்கப்படும் சாத்தியம் இருக்கிறது என்று நீல்சன் நம்புகிறார்.

——————