Tag Archives: cards

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதியது ஏன்?

moneyபணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பின், ரொக்க பணத்திற்கான தட்டுப்பாடு நிலவிய நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவது தொடர்பான அவசியத்தை வலியுறுத்தி இந்த புத்தகத்தை எழுதுவதற்கான எண்ணம் உண்டானது. ஏடிஎம் வாயில்களில் நீண்ட வரிசையில் மக்கள் கால் கடுக்க காத்திருந்த நிலையில், பொது கருத்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு எதிராக அமைந்த நிலையில் இந்த புத்தகத்திற்கான தகவல் சேகரிப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட்டிருந்தேன்.

டிஜிட்டல் பணம் இந்தியாவுக்கு எல்லாம் சரிபட்டு வராது என பரவலாக கருதப்பட்ட சூழலில் இந்த புத்தகத்தை எழுத தீர்மானித்ததற்கு சில முக்கிய காரணங்கள் உண்டு. அவற்றில் முதன்மையானது கென்யாவில் எம்-பெசா எனும் மொபைல் பணம் பெரும் வெற்றி பெற்று ஒரு முன்னோடி முயற்சியாக இருந்ததை அறிந்திருந்தது தான். ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மொபைல் மூலமான பண பரிவர்த்தனை சரியாக வரும் எனில் இந்தியாவிலும் இந்த சிக்கலுக்கான பதில் மொபைல் பணமாக தான் இருக்க வேண்டும் என நம்பினேன்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், மொபைல் பணம் என்பது பரவலாக அறியப்பட்ட மொபைல் வாலெட்டில் இருந்து வேறுபட்டது. இது சாதாரணா செல்போனிலேயே செயல்படக்கூடியது. அதனால் தான் எம்-பெசா கென்யாவில் வெற்றி பெற்று மற்ற ஏழை நாடுகளிலும் பரவலானது . உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியாவிலும் மொபைல் பணம் செயல்படுத்தப்படுவதை கட்டுரைகள் வாயிலாக அறிய முடிந்தது.

எம்-பெசா

எம்-பெசா பற்றிய புரிதலே இந்த புத்தகம் எழுத மூலக்காரணம். அதே போலவே தொழில்நுட்பத்தின் மீது எனக்கிருந்த ஆர்வமும், நம்பிக்கையும் மற்றொரு முக்கிய காரணமாக அமைந்தது. டிஜிட்டல்மயமாக்கலின் முக்கியத்துவம் மற்றும் தவிர்க்க இயலா தன்மையை அறிந்திருப்பதால் பணமும் டிஜிட்டல்மயமாக வேண்டும் என நினைத்தேன்.

பண பரிவர்த்தனை தொடர்பான வரலாற்று செய்திகளை தேடிப்படித்த போது இன்னும் கூடுதல் புரிதல் கிடைத்தது. ரொக்கமில்லா சமூகம் எனும் கருத்தாக்கத்தின் துவக்கப்புள்ளி காசோலை இல்லா சமூகம் எனும் புள்ளியிலிருந்து துவங்குவதையும், கம்ப்யூட்டர்களின் வருகை மற்றும் பயன்பாடு இதற்கு முக்கிய காரணம் என்பதையும் அறிய முடிந்தது. இந்த வரலாறு பற்றிய கட்டுரைகள் புத்தகத்தின் துவக்கமாக அமைந்துள்ளன.

உண்மையில், தந்தி மூலமான தகவல் பரிமாற்றம் பண பரிவர்த்தனைக்கு உதவிய காலத்திலேயே பணம் டிஜிட்டல் மயமாவது துவங்கிவிட்டது. இப்போது நவீன தொழில்நுட்பம் இதை மேலும் செழுமையாக்கியுள்ளது.

இவைத்தவிர ஸ்வீடன் போன்ற நாடுகள் ரொக்கமில்லா சமூகத்திற்கு மாறியுள்ள தகவலும் என்னை ஈர்த்தன. ஸ்விடனில் ரொக்கமில்லா சமூகத்திற்கான கருத்தாக்கம் வேரூன்றிய விதமும், செயல்படுததப்படும் விதமும் தனிக்கட்டுரைகளாக அமைந்துள்ளன.

ஸ்வீடன் சரி, இந்தியாவுக்கு எப்படி பொருந்தும் என கேட்பர்வர்களுக்கு பதிலாக நம் நாட்டிலேயே விளிம்பு நிலை மக்களுக்கு மொபைல் பணம் மூலம் நிதிச்சேவைகளை கொண்டு சேர்க்கும் எகோ மணி, பீம் மணி போன்ற முயற்சிகள் அமைந்துள்ளன. இவை பற்றிய தனிக்கட்டுரைகள் உள்ளன.

ஏழைகளுக்கானது …

இது தவிர வங்கதேசத்தில் மொபைல் போனை ஏழைகளுக்கு கொண்டு சென்ற முன்னோடி தொழில்முனைவொரான இக்பால் காதீர் பற்றியும் எழுதியுள்ளேன்.

உண்மையில் ரொக்கமில்லா சமூகத்தின் சாத்தியம் பற்றிய வல்லுனர்கள் விவாதம் மற்றும் சந்தேகங்களை மீறி, மொபைல் பணம் சார்ந்த முன்னோடி முயற்சிகளில் ஈடுபட்டுள்ள தொலைநோக்கு மிக்க மனிதர்களின் முயற்சியே இந்த புத்தகத்தை எழுதும் உத்வேகத்தை தீவிரமாக்கியது.

இதனிடையே ரொக்கமில்லா சமூகத்தில் வாழந்து பார்த்த மனிதர்களின் பரிசோதனை முயற்சியும் அறிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாக பணத்தின் வரலாற்றை ஆய்வு செய்து எழுதிய பத்திரிகையாளர் டேவிட் வால்மனின் புத்தகம் பற்றி படித்தது கண்களை திறந்துவிட்டது போல இருந்தது. வால்மன் புத்தகம் மூலமே இந்தியாவில் மொபைல் பணம் முயற்சிகள் பற்றி அறிய முடிந்ததை என்னவென சொல்வது?

மொபைல் பணம் !

ரொக்கமில்லா சமூகத்தின் சாத்தியம் குறித்த அனைத்து அம்சங்களை எழுத விரும்பினாலும், அதன் மீதான சந்தேகங்களுக்கு பதிலாக அமையக்கூடிய மொபைல் பணம் பற்றிய முக்கிய கவனம் செலுத்தியுள்ளேன்.

இந்த புத்தகம் எழுதும் போக்கில், மொபைல் பணம் மூலம் ஏழை மக்களுக்கு நிதிச்சேவைகளை கொண்டு செல்லும் முயற்சிகள் பற்றியும், வங்கியில்லா வங்கிச்சேவைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. ஏழைகளுக்கு டிஜிட்டல் பணம் எல்லாம் சரிபட்டு வருமா என்பது தவறான கேள்வி. உண்மையில் டிஜிட்டல் பணம் மூலம் தான் ஏழைகளுக்கு அடிப்படை நிதிச்சேவைகளை அளிக்க முடியும் என்பது தான் இந்த புத்தகம் சொல்லும் சேதி.

புத்தகத்தை வாசித்துப்பார்த்து இதை ஏற்க முடிகிறதா என சொல்லுங்கள்.

 

அன்புடன் சைபர்சிம்மன்

 

டிஜிட்டல் பணம் –

கிழக்கு பதிப்பக வெளியீடு,

விலைரூ.150

மின்னல் அட்டைகள் உங்களுக்கு தெரியுமா?

flஉங்களுக்கு மின்னல் அட்டைகள் பற்றித் தெரியுமா? அதென்ன மின்னல் அட்டைகள், புதிதாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? ஆங்கிலத்தில் பிளாஷ் கார்ட்ஸ் என்று குறிப்பிடப்படும் மின்னல் அட்டைகளை வாசிப்புத்தோழன் என்று சொல்லலாம். தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் போது சரி , புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கும் போது சரி, நீங்கள் படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள உதவும் அட்டைகளை தான் பிளாஷ் கார்ட்ஸ் அதாவது மின்னல் அட்டைகள் என்று சொல்கின்றனர்.

மின்னல் அட்டைகள் என்பவை சின்ன அட்டைகள் தான். இந்த  அட்டைகளில் படித்தவற்றில் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை குறித்து வைத்துக்கொண்டு தேவைப்படும் போது பார்த்துக்கொள்ளலாம்.

ஆங்கில பாடம் என்றால் கடினமான சொற்களுக்கான அர்த்தம், அறிவியல் பாடம் என்றால் சம்பாடுகள் , கணிதம் என்றால் சூத்திரங்கள் ஆகியவற்றை இப்படி அட்டைகளில் எழுதி வைத்துக்கொள்ளலாம். வரலாறு பாடத்தில் முக்கிய நிகழ்வுகளின் வருடங்களை எழுதி வைத்துக்கொள்ளலாம். இந்த அட்டைகள் எளிமையான ஐடியா தான். ஆனால் படித்தவற்றை நினைவில் கொள்ள இவை சிறந்த வழி என்று நினைவாற்றல் நிபுணர்கள் சொல்கின்றனர்.

உங்களுக்கேத்தெரியும் படித்தால் மட்டும் போதாது. படித்தவை நினைவில் இருக்க வேண்டும். இல்லை என்றால்  தேர்வு அறையில் அமர்ந்திருக்கும் போது குழம்பி விடுவோம். ஆக, படித்தவற்றை மறக்காமல் இருக்க அவற்றை அவ்வப்போது நினைவு படுத்திப்பார்க்க வேண்டும். இதற்கான எளிய வழி தான் , நினைவில் நிற்க வேண்டியவற்றை அட்டைகளில் எழுதி வைத்துக்கொள்வது.

மின்னல் அட்டைகளின் பின்னே, இடைவெளி விட்டு தொடந்து நினைத்து பார்க்கும் உத்தி இருப்பதாக சொல்கின்றனர். அதாவது ஒரு விஷயத்தை கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி பார்ப்பது. உட்கார்ந்து மணிக்கணக்கில் மனனம் செய்து கொண்டிருப்பதை விட , இப்படி அழகாக அட்டைகளில் எழுதி வைத்துக்கொண்டு படித்து பார்ப்பதன் மூலம் படித்த விஷயங்கள் காலத்துக்கும் நினைவில் நிற்கும் என்றும் ஊக்கம் தருகின்றனர்.

அட, நன்றாக இருக்கிறதே நாமும் கூட மின்னல் அட்டைகளை பயன்படுத்திப்பார்க்கலாம் என்று நினைக்கிறீர்களா? மின்னல் அட்டைகளை தேடி எங்கும் போக வேண்டாம். இணையத்திலேயே தேவையான மின்னல் அட்டைகளை எளிதில் உருவாக்கி கொள்ளலாம். இதற்கு உதவும் அட்டகாசமான இணையதளங்களில் சிலவற்றை பார்ப்போம்.

முதலில் கார்ட்விக்கி.காம் (http://cardkiwi.com/ ) .மின்னல் அட்டை உருவாக்க உதவும் இணையதளங்களில் இது தான் மிகவும் எளிதானது. இந்த தளத்தை பயன்படுத்த முதலில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். அது எளிதானது தான். உறுப்பினரான பின், நீங்கள் படிக்க விரும்பும் தலைப்பு அல்லது பாடங்களில் இணைய அட்டைகளை உருவாக்கி கொள்ளலாம். அட்டைக்கான தலைப்பை கொடுத்து விட்டு , ஒரு பக்கத்தில் கேள்வி அல்லது குறிப்பை எழுது விட்டு மறு பக்கத்தில் அதற்கான பதிலை எழுத வேண்டும். இப்படி வரிசையாக எத்தனை கார்டுகளை வேண்டுமானாலும் உருவாக்கி கொள்ளலாம். இந்த கார்டுகளை கொஞ்சம் இடைவெளி விட்டு கிளிக் செய்து பார்த்து ,குறித்து வைத்தவை நினைவில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும் இப்படி அட்டைகள் மூலம் பார்க்கும் போது தானாக மனதில் பதிந்து விடும் என்கின்றனர். நீங்களே பயன்படுத்திப்பாருங்கள் தெரியும்!

மின்னல் அட்டைகளை பயன்படுத்தும் முறைப்பற்றி இந்த தளத்திலேயே அழகான வீடியோ விளக்கமும் இருக்கிறது. இந்த தளத்தில் கூடுதல் விஷேசம் என்ன என்றால் , நீங