சாட்ஜிபிடிக்கு முன்னர் ’சைபாட்’ இருந்தது தெரியுமா?

சாட்ஜிபிடியின் சாத்தியங்களையும், வரம்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், முதல் சாட்பாட்டான எலிசாவை மனதில் கொண்டாக வேண்டும். சாட்ஜிபிடி உள்ளிட்ட எல்லா நவீன சாட்பாட்களும் எலிசாவின் மீது தான் உருவாக்கப்பட்டவை.

எலிசா துவக்கி வைத்த சாட்பாட்கள் பயணத்தில் எண்ணற்ற சாட்பாட்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் சின்ன சின்ன மைல்கல் சாட்பாட்களும் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்றான் ’சைபாட்’ (CyBot) பற்றி இப்போது தெரிந்து கொண்டால் வியப்பாக இருக்கும்.

1996 ல் அறிமுகமான இந்த ஏஐ திறன் கொண்ட சாட்பாட், உலகின் முதல் தனிநபர் வலை சிலந்தி என வர்ணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது தனிநபர்களுக்கான வெப் கிராளர். இதை இன்னும் நேரடியாக சொல்வது என்றால், தனிநபர்களுக்கான கூகுள் என்று சொல்லலாம். நிற்க, கூகுள் எனும் தேடியந்திரமே அறிமுகம் ஆகாத காலத்தில் சைபாட் பயன்பாட்டில் இருந்தது என்பதால் அதை கூகுளோடு ஒப்பிடுவது வரலாற்று பிழையாக அமையும்.

வெப் கிராலர் என்றால் இணையத்தை துழாவி அதன் இணைய பக்கங்களை கொண்டு வரும் மென்பொருள் என புரிந்து கொள்ளலாம். அடிப்படையில் கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்கள், கிராலர் மூலம் இணையத்தை துழாவி தங்களுக்கான தேடல் அட்டவனையை உருவாக்கி கொள்கின்றன.

கூகுளுக்கு முன்னரே எண்ணற்ற தேடியந்திரங்கள் உருவாகி இருந்தன என்றாலும், இந்த கலையில் தேர்ச்சி பெற்ற கூகுள் வெற்றி பெற்றது தனிக்கதை. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சாட்பாட்களும், தேடியந்திரங்களும் பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும், தேடலும், சாட்பாட்டும் ஒன்றிணையத்துவங்கியிருப்பது சாட்ஜிபிடி வருகைக்கு பின்னர் தான்.

சாட்ஜிபிடியின் கேள்வி பதில் திறனால் பலரும் கூகுளுக்கு பதில் சாட்ஜிபிடியில் தேடலாம் என பேசத்துவங்கியுள்ளனர். சாட்ஜிபிடி போலவே பல சாட்பாட் தேடியந்திரங்களும் உருவாகியுள்ளன. இந்த பின்னணியில், 1996 ம் ஆண்டிலேயே, பயனாளிகளுக்கு தனிப்பட்ட தேடல் வசதியை வழங்கும் வகையில் ஒரு சாட்பாட் அறிமுகம் ஆகியிருந்தது என்றால் அது பெரிய செய்தி தானே. சைபாட் தான் இத்தகையை சாட்பாட் தேடியந்திரமாக இருந்திருக்கிறது.

ஆய்வு செய்யும் போது அல்லது ஏதேனும் தகவல்கள் தேடும் போது, தனிநபர்கள் அவற்றை தேடுவதை விட மிக விரைவாக தேடித்தரும் தனிப்பட்ட தேடியந்திரமாக ( கிராலர்) சைபாட் விளங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரம் மடங்கு வேகமாக செயல்படும் இந்த சாட்பாட் ஏஐ திறன் கொண்டு இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, மார்க்கெட்டிங் நோக்கிலும் இது பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபாட் பின்னர் என்ன ஆனது எனத்தெரியவில்லை. ஆனால் சாட்ஜிபிடிக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே சைபாட் இணையத்தில் இருந்து ஏஐ துணையுடன் தகவலை தேடித்தந்திருக்கிறது.

பி.கு: சாட்பாட் வரலாற்றில் சைபாட் பற்றி பெரும்பாலும் குறிப்பிடப்படுவதில்லை என்பதோடு, சைபாட் தொடர்பான தகவலை கூகுள் மூலம் அறிவதும் கடினம். சாட்பாட்கள் தொடர்பான ஆய்வில் பாட்ஸ்பாட் எனும் பாட் தொடர்பான தேடல் சரட்டில், பழைய கால தேடியந்திரங்கள் பட்டியலை கண்டறிந்த போது சைபாட் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் இணைய முகவரியை வெப் ஆர்க்கேவ் இணைய காப்பகத்தில் தேடிய போது சைபாட் கூகுளுக்கு முந்தைய கூகுள், சாட்ஜிபிடிக்கு முந்தைய சாட்ஜிபிடி என அறிய முடிந்தது.

  •  

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.