Tag Archives: polls

முடிவெடுக்க உதவும் இணையதளம்

poolதளம் புதிது; முடிவெடுக்க உதவும் இணையதளம்

முடிவெடிப்பதில் உங்களுக்கு உதவி தேவையா? முடிவெடுப்பதற்கு முன் மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்களா? எனில் டூபூல்.கோ (doopoll.co ) இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த தளம் இணையம் மூலம் கேள்வி கேட்டு கருத்துக்கணிப்பு நடத்த வழி செய்கிறது. இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு, நீங்கள் கருத்துக்களை அறிய விரும்பும் விஷயம் தொடர்பான கேள்விகளை கேட்கலாம்.

ஆம், இல்லை என பதில் அளிக்கும் எளிய கேள்வியில் துவங்கி, ஒரே கேள்விக்கு பல பதில்களை அளிக்கும் வாய்ப்பு அளிப்பது வரை பலவிதமாக இதில் கருத்துக்கணிப்பு நடத்ததலாம். இப்படி இணைய வாக்கெடுப்பு நடத்த உதவும் இணையதளங்கள் ஏற்கனவே இருக்கின்றன. ஆனால் இந்த தளம் கூடுதலான பல அம்சங்களை கொண்டிருக்கிறது.

இந்த தளத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதற்கான உதாரணங்களும் இடம்பெற்றுள்ளன. நேரில் கேட்கும் போது பலர் வெளிப்படையாக கருத்து கூற தயங்கலாம். இப்படி கேள்வி கேட்டு பதில் அளிக்கச்சொல்வதன் மூலம் நேர்மையான எதிர்வினைய அறியலாம் என இந்த தளம் குறிப்பிடுகிறது. உடனடியாக பதில்களை அறியும் வசதியும் இருக்கிறது.

நீங்களும் முயன்று பார்க்கலாம்:http://doopoll.co/

=—

வீடியோ புதிது: பழைய படம் பார்க்கலாம் வாங்க!

காப்புரிமை சிக்கல் இல்லாமல் இணையத்தில் ஆங்கில திரைப்படங்களை பார்த்து ரசிக்க விருப்பமா? கவலையை விடுங்கள் இதற்காக என்றே ஒரு யூடியூப் சேனல் இருக்கிறது.

பப்ளிக் டொமைன் புல் மூவிஸ் எனும் அந்த யூடியூப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட அந்தக்கால ஆங்கில திரைப்படங்களை பார்த்து ரசிக்கலாம். இவை எல்லாமே காப்புரிமை விடுபட்டு பொது வெளியில் இருப்பவை என்பதால் எந்த சிக்கலும் இல்லை.

சார்லி சாப்ளின், லார்ல் ஹார்டி காமெடி திரைப்படங்கள் உள்ளிட்ட அந்த கால படங்கள் பலவற்றை பார்த்து ரசிக்கலாம்.

பழைய ஆங்கில திரைப்படங்களை பார்த்து ரசிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த சேனல் ஏற்றதாக இருக்கும்.

படங்களை பார்த்து ரசிக்க:https://www.youtube.com/user/BestPDMovies/

——-

உலகம் முழுவதும் உணவு

தினமும் ஒரே மாதிரியான மதிய உணவு சாப்பிட்டு அலுத்துவிட்டதா? மதிய உணவுக்காக மாறுபட்ட சுவையை எதிர்பார்க்கிறீர்கள? இதற்கான ஊக்கமும் உந்துதலும் தேவையா?

இந்த கேள்விகளுக்கான பதிலை அழகான வரைபட சித்திரம் அளிக்கிறது. சோஸ் வீடியோடூல்ஸ் உருவாக்கியுள்ள இந்த வரைபட சித்திரம் உலகின் பல நாடுகளில் மதிய உணவு எப்படி இருக்கிறது எனும் தகவலை சுவாரஸ்யமாக அளிக்கிறது. சீனா, கோஸ்டா ரிக்கா, டென்மார்க்,பிரான்ஸ், அர்ஜண்டினா,ஜெர்மனி, ஐஸ்லாந்து உள்ளிட்ட நாடுகளின் மதிய உணவு பற்றிய விவரங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தியாவும் இந்த பட்டியலில் இருக்கிறது.

உலக உணவு சித்திரம்: https://www.sousvidetools.com/toolshed/lunch-around-the-world/

——-

குறிப்பு; மேலே குறிப்பிட்ட தளங்களில் பழைய படங்களுக்கான யூடியூப் சேனல் காப்புரிமை சார்ந்த புகாரால் கைவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை பகிர்ந்து கொண்ட டிவிட்டர் வாசகர் விவன் சாமுவேலுக்கு நன்றி. மாற்றாக ஒரு தளம் :http://www.openflix.com/ விரிவாக பின்னர் எழுத திட்டம்.

கருத்து கணிப்பு நடத்த உதவும் இணையதளம்.

போல்ஸ்.இயோ போலவே எளிமையான முறையில் கருத்து கணிப்புகலை நடத்த உதவுகிறது கிவிக்போல் இணையதளம்.

கருத்து கணிப்பை உருவாக்குங்கள் அதற்கான இணைப்பை பகிர்ந்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் என சொல்லும் இந்த தளம் அதற்கேற்பவே மிக எளிதாக கருத்து கணிப்பை நடத்தி கொள்ள உதவுகிறது.

கருது கணிப்புக்கான கேள்வியை டைப் செய்து விட்டு அதற்கான பதில்களை வரிசையாக குறிப்பிட்டால் போதும் கருத்து கணிப்பு விண்ணப்ப படிவம் தயார்.அதன் பிறகு தரப்படும் இணைப்பு முகவரியை பேஸ்புக் டிவிட்டர் வழியே உங்கள் நண்பர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டு அவர்கள் பதில்களை பெற்று கொள்ளலாம்.

உறுப்பின‌ராக பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.எனவே இந்த சேவையை சுலபமாக பயன்ப‌டுத்தி கொள்ளலாம்.

புதிதாக‌ போன வாங்க போகிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் எந்த போன் சிறந்தது என நண்பர்கள் மத்தியில் ஒரு ஆய்வு நடத்தலாம்.இப்படி பலவிதங்களில் இந்த சேவையை பயன்ப‌டுத்தி கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://kwiqpoll.com/

———–
நீங்களும் நடத்தலாம் கருத்து கணிப்பு.;http://cybersimman.wordpress.com/2012/04/30/polls-2/

நீங்களும் நடத்தலாம் கருத்து கணிப்பு.

கருத்து கணிப்புகளை பெரிய நிறுவனங்களும் மீடியாக்களும் தான் நடத்த வேண்டுமா என்ன?நீங்களும் கூட க‌ருத்து கணிப்பு நடத்தலாம்?அதாவது இணைய கருத்து கணிப்பு!

நீங்களே கேள்வி கேட்டு அதற்கான பதில்களை நண்பர்களிடம் இருந்து பெற்று அதனடைப்படையில் முடிவுக்கு வரலாம்.இப்படி இணையம் வழியே கருத்து கணிப்பு நடத்துவது எந்த அளவுக்கு சுலபமானதாகவும் எளிமையானதாகவும் இருக்கிறது என்பதை போல்ஸ்.இயோ சேவையை பார்த்து புரிந்து கொள்ளலாம்.

எளிமையாக கருத்து கணிப்பை உருவாக்கி உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கும் இந்த தளம் அதை தான் கச்சிதமாக செய்கிறது.

கருத்தறிய விரும்பும் கேள்வி எதுவே அதனை டைப் செய்து விட்டு வரிசையாக அதற்கான பதில்களை டைப் செய்தால் போதும் உங்களுக்கான கருத்து கணிப்பை தயார் செய்து தந்து விடுகிறது இந்த தளம்.அந்த இணப்பை டிவிட்டர் அல்லது பேஸ்புக் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு பதில்களை திரட்டி கருத்து கணிப்பை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

அவ்வளவு தான்.இதற்காக உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேன்டும் என்ற தேவை கூட‌ கிடையாது.

எந்த கருத்து கணிப்பை எப்படி ந‌டத்தி கொள்ளலாம் என்பது உங்கள் தேவையையும் ஆர்வத்தையும் பொருத்தது.

இணையம் ஏற்படுத்தி தரும் வசதிகளுக்கு இன்னொரு அழகான உதாரண‌ம் இந்த தள‌ம்.ரயான் கில்பர்ட் என்பவர் இந்த சேவையை உருவாக்கியிருக்கிறார்.

———–

இணையதள முகவரி;http://polls.io/

எளிது ,எளிது ,கருத்து கணிப்பு நடத்துவது!

கருத்து கணிப்பு வசதி எல்லாம் பெரிய இணையதளங்களுக்கே சாத்தியம் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது .ஆனால் இன்று வலைப்பதிவாளர்கள் விரும்பினால் கூட தங்கள் தளத்திலேயே கருத்து கணிப்பு வசதியை அளிக்க முடியும்.இதற்கு உதவக்கூடிய சாப்ட்வேர்களும் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன.

இந்த வகையில் புதிதாக அறிமுகமாகியுள்ளது போல்மோ இணையதளம்.கருத்து கணிப்பு வசதிகளிலேயே மிகவும் எளிமையானது இந்த சேவை.காரணம் இதனை பய‌ன்படுத்த விரும்புகிறவர்கள் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றோ புதிதாக கணக்குக் உருவாக்கி கொள்ள வேண்டும் என்றோ அவசியம் இல்லை.

கருத்து கணிப்புக்கான கேள்வியை குறிப்பிட்டு அதற்கான பதிலகளையும் குறிப்பிட்டு அதற்கான வடிவமைப்பை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதும் கருத்து கணிப்பு ரெடியாகிவிடும்.

அதன் பீறகு அந்த கணிப்பிறகான நிரலை இணையதளத்தில் அல்லது வலைப்பதிவில் பேஸ்ட் செய்தால் போதுமானது .

இணையதள முகவரி;http://pollmo.com/