Tag Archives: sachin

பேஸ்புக்கில் நுழைந்தார் சச்சின்!.


திரைக்கு வெளியே நாகேஷ் அதிகம் நடித்ததில்லை என்று அவரைப்பற்றிய புத்தகத்தில் சந்திரமவுளி குறிப்பிட்டிருப்பார். அதே போல தான் சச்சினும் ஆடுகளத்திற்கு வெளியே அதிக ஆடியதில்லை.அதாவது அதிகம் பேசியதில்லை.அதிலும் தன்னைப்பற்றி அவர் தற்பெருமை அடித்து கொண்டதுமில்லை.அவரது பேட்டிகள் கூட கிரிக்கெட் தொடர்பானதாகவே இருக்கும்.அப்போது கூட பந்துக்கு ஏற்ற ஷாட்டை போல கேள்விக்கேற்ற பதில் தான் வருமே தவிர தேவையில்லாத கருத்துக்கள் இருக்காது.

இந்த அமைதியும் அடக்கமும் தான் சச்சின்.

அவரது பேஸ்புக் பக்கமும் இப்படி தான் இருக்கிறது.

ஆம் சச்சின் சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் நுழைந்திருக்கிறார்.ஏற்கனவே சச்சின் குறும்பதிவு சேவையான டிவிட்டரில் இருக்கிறார்.சச்சின் டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக சொல்ல முடியாது.எப்போதாவது அரிதாக தான் அவர் குறும்பதிவுகளை வெளியிடுகிறார்.அந்த குறும்பதிவுகளும் பெரும்பாலும் கிரிக்கெட் சார்ந்ததாகவே இருக்கின்றன.

ஒலிம்பிக்கின் போது சாய்னாவுக்கும் சுசில் குமாருக்கும் பதக்கம் வென்றவுடன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.மற்றபடி சச்சின் மனதை டிவிட்டரில் அறிய முடியாது.

சச்சினிடம் ஒரு வித கன்னியமான ஒதுங்குதலை காணலாம்.

சச்சினின் பேஸ்புக் பக்கமும் இதே போல தான் இருக்கிறது.

முதலில் சச்சின் தானே இந்த பேஸ்புக் பக்கத்தை உருவாக்கவில்லை.அவரது சார்பாக நிறுவனம் ஒன்று இந்த பக்கத்தை நிர்வகித்து வருகிறது.அதன் காரணமாக இந்த பக்கத்தின் பதிவுகளில் ஒரு வித தொழில்முறைத்தன்மையை காணலாம்.தகவல்கள் நேர்த்தியாக தான் இருக்கின்றன என்றாலும் அதில் சச்சினின் தனிப்பட்ட குரல் இல்லை.

சச்சின் பேஸ்புக் பக்கத்தில் இது சச்சினின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த அதிகாரபூர்வ பக்கத்திற்கு அனைவரையும் வரவேற்பதாக குறிப்பிட்டுளள சச்சின் இந்தியாவுக்காக விளைடயாடுவது தனது கனவு என்றும் தனது அனுபவங்களை பேஸ்புக் வாயிலாக பகிர்ந்து கொள்ளப்போவதாகவும் ஒரு பதிவில் கூறியுள்ளார்.

இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் உன்முக்த சந்த பற்றி ஒரு பதிவில் குறிப்பிட்டூள்ளார்.ஜுனியர உலககோப்பை இறுதிப்போட்டியை ஐதராபாத் டெஸ்ட்டுக்கு நடுவே டிவியில் ஆர்வத்தோடு பார்த்ததையும் விவரித்திருக்கிறார்.குழந்தை போன்ற இந்த ஆர்வம் தான் சச்சின்!.

மற்ற பதிவுகள் எல்லாம் சச்சின் அடித்த 100 சதங்கள் பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் விவரிக்கின்றன.100 வது சதம்,99 வது சதம் என வரிசையாக ஒவ்வொரு சதம் பற்றியும் அவை அடிக்கப்பட்ட விதம் பற்றியும் விவரிக்கும் இந்த பதிவுகள் சச்சினிஸ்ட்டுகளுக்கு சரியான விருந்து என்று தான் சொல்ல வேண்டும்.

சச்சின் ராஜ்யசபை உறுப்பினராக பதவியேற்றது தொடர்பான பதிவும் உள்ளது.

ஒவ்வொரு பதிவுகளுக்குமான ரசிகர்களின் பின்னூட்டங்கள் தான் உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருக்கின்றன.ரசிகர்கள் உருகி உருகி தெரிவித்துள்ள கருத்துக்களை படிக்கும் போது சச்சின் ரசிகர்கள் மனதில் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பிட்ட ஒரு ரசிகர் ஒவ்வொரு பதிவிலும் சச்சின் நான் உங்களை ஆராத்திக்கிறேன் என கூறியுள்ளார்.சச்சின் யுவராஜ சிங்க்கையும் அவரது மன உறுதியையும் பாராட்டி எழுதியுள்ள பதிவில் கூட சச்சின் நீங்கள் மகத்தானவர் என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு சில கருத்துக்கள் குறிப்பிட்ட அந்த சதம் தொடர்பான கருத்தாக அமைந்துள்ளன.ஒவ்வொரு பதிவுக்கும் லைக்குகள் குவிந்து கிடக்கிறன.

சச்சின் அதிகாரபூர்வ பக்கம் இது என்றாலும் அவரது பெயரில் வேறு பல பேஸ்புக் பக்கங்களும் இருக்கின்றன.சச்சின் ரசிகர் குழ் பக்கம்,கிரிக்கெட் கடவுள் சச்சினின் பக்கம் என்று சச்சின் உபாசகர்கள் அவரது சார்பில் பேஸ்புக் பக்கங்களை அமைத்துள்ளனர்.

சச்சின் மகன் அர்ஜுன் டென்டுல்கரும் பேஸ்புக்கில் இருக்கிறார்.அவரது பக்கமும் எளிமையாகவே இருக்கிறது.

சச்சினின் பேஸ்புக் முகவரி;https://www.facebook.com/SachinTendulkar

சச்சின் மகனின் பேஸ்புக முகவரி;http://www.facebook.com/aarjuntendulkar

—————

அப்துல் க‌லாமின் பேஸ்புக் பக்கம்!

அமிதாப்பின் பேஸ்புக் பக்கம்.

what

டிவிட்டரில் இன்றைய சூடான செய்தி.

டிவிட்டர் என்ன நினைக்கிறதோ அதை தான் உலகம் நினைக்கிறது என்று சொல்லலாம்.இதையே ,உலகம் என்ன நினைக்கிற‌தோ அதையே டிவிட்டர் நினைப்பதாகவும் சொல்லலாம்.

உலகம் எதை பற்றி பேடிக்கொண்டிருக்கிறதோ அதை பற்றி தான் டிவிட்டரும் பேசுகிறது.அதாவது டிவிட்டரில் குறும்பதிவுகள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.இப்படி எந்த தலைப்பின் கீழ் அதிக குறும்பதிவுகள் வெளியாகின்றனவே அந்த தலைப்பு கவனத்தை ஈர்த்து உலகை பேச வைத்து விடுகின்றன‌.

இப்படி டிவிட்டரில் முன்னிலை பெறும் தலைப்புகள் திடிரென பரப‌ரப்பை ஏற்படுத்தி மேலும் கவனத்தை ஈர்க்கும்.அதன் பிறகு பார்த்தால் எங்கும் அந்த தலைப்பு பற்றி தான் பேச்சாக இருக்கும்.டிவிட்டர் மொழியில் இவை டிரென்டிங் டாபிக் என்று அழைக்கப்படுகின்றன.

ஒரே தலைப்பு பற்றி பலரும் குறும்பதிவுகளை பகிர்ந்து கொள்ளத்துவங்கும் போது அவை தானாக மேலெழுத்து வந்துவிடுகின்ற‌ன.

இவ்வாறு டிவிட்டரில் மேலெழும் தலைப்புகளை கோட்டை விடாமல் இருக்க விரும்பினால் ‘வாட் த டிரென்ட்’ இணையதளம் அதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இதோ இந்த நிமிடத்தில் டிவிட்டரில் எந்த தலைப்பு மேலெழுகிறதோ அந்த தலைப்புகளை எல்லாம் தொகுத்தளித்து நம் பார்வைக்கு வைக்கிறது.அதனால் தான் உடனடி வலையின் முகப்பு பக்கம் என்றும் பெருமைபட்டு கொள்கிற‌து.

நாளிதழ் உலகில் சுடச்சுட செய்திகள் என்று சொல்வது போல டிவிட்டர் உலகில் அந்த நிமிடத்தில் பரிமாறப்படும் தகவல்கள் ரியல் டைம் என்று சொல்லப்படுகின்றன.இந்த உடனடி செய்திகளில் கவனிக்க வேண்டியவை எவை என்பதை தான் இந்த தளம் அடையாளம் காட்டுகிறது.

செய்தி தளங்களில் எப்படி முக்கிய செய்திகள் பட்டியலிடப்பட்டிருக்குமோ அதே போல இந்த தள‌த்தில் டிவிட்டரில் இப்போது எந்த தலைப்பு முக்கியமாக இருக்கின்றனவோ அவை எல்லாம் வரிசையாக பட்டியலிடப்படுகின்ற‌ன.

குறிப்பிட்ட தலைப்பை கிளிக் செய்தால் அந்த தலைப்பில் வெளியான குறும்பதிவுகளை எல்லாம் படிக்கலாம்.முதல் பத்து தலைப்புகள் வரிசையாகவும் அதற்கு மேலே மற்ற தலைப்புகள் குறிச்சொற்களாகவும் இடம் பெறுகின்றன.

இவை உலகலாவிய போக்குகள் .அதே நேரத்தில் ஒவ்வொருவரும் தங்கள் நாட்டில் எநத தலைப்பு டாப்பில் இருக்கின்றன என்பதையும் தனியே தெரிந்து கொள்ளலாம்.வலது பக்கத்தில் உள்ள நாடுகளின் பட்டியலில் கிளிக் செய்தால் குறிப்பிட்ட நாட்டு டிவிட்டர் போக்குகளை தெரிந்து கொள்ளலாம்.அதே போல முக்கிய நகரங்களுக்கான டிவிட்டர் போக்குகளையும் அந்த அந்த நகரங்களை கிளிக் செய்து பார்க்கலாம்.

அது மட்டும் அல்ல,ஒவ்வொரு தலைப்புடனும் அந்த தலைப்பு டிவிட்டரில் பிரபலமானதற்கு என்ன காரணம் என்பதற்கான சுருக்கமான விளக்கமும் இடம் பெறுகிறது.இந்த விளக்கத்தை உறுப்பினரகளே சமர்பிக்கலாம் என்பது தான் விசேஷம்.அப்படியே டிவிட்டரில் முன்னிலை பெறும் தலைப்புகளையும் சமர்பிக்க‌லாம்.குறும்பதிவுகளை அப்படியே ரீடிவீட் செய்ய‌லாம் என்பதை சொல்லவே வேண்டாம்.

ஆக டிவிட்டரும் உலகமும் என்ன நினைக்கிறது என அறிய விரும்பும் போதெலாம இந்த தளத்திற்கு விஜயம் செய்யலாம் .இல்லை இந்த தளத்தை டிவிட்டரில் பின் தொடர்ந்தால் டிவிட்டரையே பின் தொடர்வது போல பிரபலமான தலைப்புகளை எல்லாம் உடனே உடனே தெரிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://www.whatthetrend.com/

பின்குறிப்பு;இப்போது இந்தியாவை பொருத்தவரை சச்சின் 100 வது சத்ததை அடிப்பதற்கு முன் என்ன விஷயம் எல்லாம் நடக்கும் என்பது தொடர்பான குறும் பதிவுகளே முன்னணியில் உள்ளன.

myopen

திறந்த மடல் எழுத ஒரு இணையதளம்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கோ அல்லது கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கருக்கே திறந்த மடலை எழுத விரும்புகிறீர்களா?ஆம் என்றால் மை ஓபன் லெட்டர் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தின் வாயிலாக நீங்கள் உலகில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் திறந்த மடல் எழுதலாம்.

அண்ண போன்ற தலைவர்கள் தம்பிக்கு என்று மடல்களை எழுதியுள்ளனர்.நாளிதழ்களில் அவப்போது பிரபலங்கள் முக்கிய பிரச்ச்னை குறித்து திறந்த மடல்களை எழுதுவதுண்டு.சில நேரங்களில் பத்திரிகைகளில் தொண்டர்களின் கடிதங்களும் திறந்த மடல்களாக வெளியாவதுண்டு.

திறந்த மடல்கள் மூலம் முக்கிய விஷயங்கள் குறித்து வலுவான கருத்துக்களை தெரிவிக்கலாம்.

ஆனால் இமெயில் யுகத்தில் கடிதங்கள் எழுதும் பழக்கமே அரிதாகி வருகிறது.இந்நிலையில் இமெயில் வடிவில் திறந்த மடல்களை எழுதும் வசதியை ஏற்படுத்தி தரும் தளமாக மை ஓபன் லெட்டர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

எதற்காக வேண்டுமானாலு யாருக்காக வேண்டுமானாலும் இந்த தளத்தில் இருந்து திறந்த மடலை எழுதலாம்.

யாருக்கு கடித்தத்தை எழுதுக்கிறீர்கல் என குறிப்பிட்டு உங்கள் பெயரையும் குறிப்பிட்டு கடித்ததை எழுத்த துவங்கலாம்.

கடித்தம் எழுதுவதற்கான பகுதியில் வலைப்பதிவுகளில் காணப்படக்கூடிய அனைத்து வசதியும் இருக்கின்றன.கடித வரிகளை தேவையான இடங்களில் அடிக்குறிப்பு ஈடுவது,எழுத்துருக்களை மாற்றுவது,வண்ண எழுத்துக்களை சேர்ப்பது,புகைப்பட்னக்களை இணைப்பது என பல்வேறு வசதிகள் இருக்கின்றன். தேவை ஏற்பட்டால் செய்திகளை மேற்கோளாகவும் இணைக்கலாம்.

ஆக வெறும் வரிகளாக இல்லாமல் தேவைக்கேற்ப அழுத்தங்களை கொடுத்து அழகான கடிதத்தை உருவாக்கலாம்.இந்த கடிதத்தை இணைய வெளியில் பதிப்பிப்பதன் மூலம் திற்ந்த மடலை உலகின் பார்வைக்கு சமர்பிக்கலாம்.

கடிததின் கீழ் மற்றவர்கள் அது குறித்து கருத்து தெரிவிப்பதற்கான வசதியும் இருக்கிறது.

ஆர்வம் உள்ளவர்கள் இந்த தளம் மூலமாக திறந்த மடல்களை எழுதலாம்.மறவ்ர்கள் எழுதியுள்ள கடிதங்களை படித்து பார்த்து கருத்து தெரிவிக்கலாம்.

இன்னும் மகத்தான கடிதஙக்ள எதுவும் இந்த தளத்தில் சமர்பிக்கப்படவில்லை என்றாலும் இந்த தளம் மகத்தான உரையாடலுக்கு வழி வகுக்கும் சாதியம் கொண்டிருக்கிறது.

இணையத்தில் கருத்து தெரிவிக்கவும் விவாத்தில் ஈடுபடவும் எண்ணற்ற வழிகல் இருந்தாலும் கடிதம் மூலம் கருத்துக்களை தெரிவிக்கும் போது அதன் வீச்சும் பரப்பும் தனித்துவம் மிக்கதாக அமையலாம்.ஒரு வலைப்பதிவிலோ ,டிவிட்டர் குறும்பதிவிலோ அல்லது பேஸ்புக் அப்டேட்டிலோ சொல்ல முடியாததை கடிதம் மூலம் சொல்லலாம்.உலகின் கவனத்தை ஈர்க்கலாம்.

ஏற்கனவே குறிப்பிட்ட பிரச்ச்னை தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்க இணையவாசிகளின் ஆதரவை திரட்ட பெட்டிஷன்ஸ் ஆன்லை போன்ற இணையம் வழி மனு போடும் தளங்கள் இருக்கின்றன.அந்த வகை தளங்களின் நீட்சியாக இந்த தளத்தை கருதலாம்.

இணையதள முகவரி;http://myopenletter.in/

டிவிட்டரில் இந்திய கேப்டன் டோனி

tதொழில்நுட்பத்தின் தாக்கம் நமக்கு எதிர்மறையாகாவே அறிமுகமாவது குறித்து எனக்கு எப்போதுமே வருத்தம் உண்டு.

இமெயிலின் அருமையை உணர்வதற்கு முன் இமெயில் மோசடி பற்றி தான் அதிகம் தெரிந்துகொண்டோம்.செல்போன் கொண்டு வ‌ந்துள்ள‌ மாற்ற‌ங்க‌ள் குறித்து எத‌தனையோ ந‌ல்ல‌ விஷய‌ங்க‌ள் இருக்க‌ செல்போனில் ஆபாச‌ ப‌ட‌ம் எடுக்க‌ முடிவ‌து ப‌ற்றியே அதிக‌ம் செய்திக‌ள் வெளியாகின்ற‌ன‌.

பொதுவாக‌வே இண்டெர்நெட் ப‌ய‌ன்பாடு தொட‌ர்பாக‌ எதிர்ம‌றையான‌ செய்திக‌ளே பெரிய அளவில் வெளியாகின்றன.இண்டெர்நெட் அறிமுகமில்லாதவர்கள் இந்த செய்திகளை படிக்க நேர்ந்தால் இந்த தொழில்நுடபமே தீமையானது என நினைத்து விடுவார்கள்.

பேஸ்புக் ம‌ற்றும் டிவிட்ட‌ர் போன்ற‌ வ‌லை பின்ன‌ல் த‌ள‌ங்க‌ள் விஷ‌ய‌த்திலும் இதே நிலை தான் தொட‌ர்கிற‌து.இந்த‌ இர‌ண்டு த‌ள‌ங்க‌ளுமே த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌த்திலும் தொட‌ர்புக‌ளை உருவாக்கி கொள்வ‌திலும் புதிய‌ எல்லைக‌ளை உண்டாக்கி வருகின்ற‌ன‌.இவை ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் வித‌ம் குறித்து எழுத‌வும் விய‌க்க‌வும் எவ்வ‌ள‌வோ இருக்கின்ற‌ன‌.

ஆனால் பேஸ்புக் ப‌ற்றி ந‌ம‌க்கு கிடைக்கும் த‌க‌வ‌ல்க‌ள் எத்த‌கைய‌து தெரியுமா?ந‌டிக‌ர் த‌னுஷ் பெய‌ரில் பேஸ்புக் த‌ள‌த்தில் மோச‌டி என்ப‌து தான்.பிர‌ப‌ல‌ங்க‌ள் பெய‌ரில் பேஸ்புக் ப‌க்க‌த்தை அமைத்து செய‌ல்ப‌டுவ‌து என்ப‌து உல‌க‌லாவிய‌ நிக‌ழ்வாக‌வே இருக்கிற‌து.

பேஸ்புக் போன்ற‌ த‌ள‌ங்க‌ளின் அருமையை புரிந்து கொள்ளும் பிர‌ப‌ல‌ங்க‌ள் த‌ங்க‌ளுக்கான‌ ப‌க்க‌த்தை உருவாக்கி கொண்டு ர‌சிக‌ர்க‌ளோடு தொட‌ர்பு கொள்கின்ற‌னர்‌.ம‌ற்ற‌ பிர‌ப‌ல‌ங்க‌ள் இத்த‌கைய‌ தொழில்நுட்ப‌ங்க‌ளின் முக்கிய‌த்துவ‌தை உண‌ராம‌ல் இருந்துவிடுகின்ற‌ன‌ர்.அப்போது யாராவ‌து ர‌சிக‌ர்க‌ள் அல்ல‌து விஷ‌மிக‌ள் அவ‌ர்க‌ள் பெய‌ரில் பேஸ்புக் ப‌க்க‌த்தை அமைத்து விடுகின்ற‌ன‌ர்.

இதில் பெரிய‌ மோச‌டி எல்லாம் ந‌ட‌ந்துவிட‌வில்லை.ஒரு ஏமாற்று வேலையாக‌வே இத‌னை க‌ருத‌லாம்.

டிவிட்ட‌ரிலும் இதே போல‌ ந‌ட‌ந்து வ‌ருகிற‌து.பிர‌ப‌ல‌ங்க‌ள் பெய‌ரில் போலி முக‌வ‌ரிக‌ள் உருவாக்க்க‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ளின் ப‌க்க‌ங்க‌ள் இய‌க்கப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.இத‌னை த‌டுப்ப‌த‌ற்காக‌வே டிவிட்ட‌ர் நிர்வாக‌ம் க‌ண‌க்கை ச‌ரிபார்க்கும் சேவையை அறிமுக‌ம் செய்துள்ள‌து.

இப்பொது இந்திய‌ கேப்ட‌ன் டோனி உள்ளிட்டோர் இந்த‌ நிலைக்கு ஆளாகியுள்ள‌ன‌ர் என்ற‌ செய்தியை பிடிஐ நிறுவ‌ன‌ம் வெளியிட்டுள்ள‌து.இந்த‌ க‌ண‌க்குக‌ளை பார்த்து ப‌ல‌ ர‌சிக‌ர்க‌ள் ஏமாந்து போயிருப்ப‌தாக‌வும் கூற‌ப்ப‌டுகிற‌து.

இங்கே நான் கூற‌ விரும்புவ‌து என்ன‌வென்றால் டோனி பெய‌ரில் மோச‌டி என‌ இத‌னை புரிந்து கொள்ள‌ முற்ப‌டுவ‌து த‌வ‌று என்ப‌தே.டிவிட்டர் சார்ந்த நிகழ்வுகளில் இது ஒரு சின்ன நிகழ்வு மட்டுமே.டிவிட்டரின் பரிமாணம் பலவிதமாக இருக்கும் போது டோனி பெயரில் மோசடி என்பது சரியான அறிமுகம் அல்ல.பிரபலங்கள் டிவிட்டர் பயன்பாடு பெரிய அளவில் பேசப்படும் போது இத்தகைய நிகழ்வுகளும் பெரிதுப்படுத்தப்படுவது இயல்பானது தான்.இருந்தாலும் கூட டோனி ஏமாற்றப்பட்டது போல இந்த செய்தி வெளியிடப்பட்டால் அது டிவிட்டருக்கான மோசமான அறிமுகமே.

உண்மையில் டிவிட்ட‌ரின் அருமையை புரிந்து கொள்ளாம‌ல் த‌ன்னுடைய‌ டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தை உரிய‌ நேர‌த்தில் உருவாக்க‌த்த‌வ‌றிய‌ இந்திய‌ கேப்ட‌னுக்கு இது ஒரு எச்ச‌ரிக்கை ம‌ணி என்றே க‌ருத‌ வேண்டும்.

டிவிட்ட‌ர் மூல‌ம் விளையாட்டு ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் ர‌சிக‌ர்க‌ளை நேர்டியாக‌ தொட‌ர்பு கொள்ள‌லாம் எனும் போது அதை டோனி போன்ற‌ இந்திய‌ வீர‌ர்க‌ள் உண‌ராம‌ல் இருப்ப‌தே ஏமாற்ற‌ம்.