Tag Archives: url

உங்களை ஊக்கப்படுத்தும் இணையதளம்

EM_slide2_1024 (1)காலத்தினால் செய்த நன்றி பெரிது என வள்ளுவர் சொல்லியிருக்கிறார். காலத்தினால செய்யப்படும் பாராட்டும் பெரிது தான். உரிய நேரத்தில் கிடைக்கும் பாராட்டு எவரையும் ஊக்கப்படுத்தும். பல சாதனை மனிதர்கள் இத்தகைய பாராட்டுகளால் தான் உருவாகியுள்ளனர். 

சரி, இத்தகைய பாராட்டு கிடைக்காவிட்டால் என்ன செய்வது? அவசரகால பாராட்டுக்களை வழங்க இருக்கவே இருக்கிறது இணையம். ஆம், நீங்கள் சோர்வுக்கு ஆளாகிய்ருந்தாலோ , அல்லது கொஞ்சம் ஊக்கம் தேவை என்றாலோ, எமர்ஜன்சி காம்ப்லிமெண்ட் இணையதளத்திற்கு விஜயம் செய்யுங்கள். ‘ உங்களைப்போல உலகில் யாருமே இல்லை’ என்பது போன்ற பாராட்டு வாசகத்தோடு இந்த இணையதளம் உங்களை வரவேற்கும். 

நல்லதாக நாலு வார்த்தை என்பார்களே, அதே போல இந்த இணையதளத்தில் எப்போதுமே ஊங்களைப்பற்றி ஊக்கம் அளிக்கும் வாசகம் இடம்பெற்றிருக்கும். இந்த வாசகம் உங்களை புன்னகைக்க வைத்து, உற்சாகம் கொள்ள வைத்தால், கிழே உள்ள நன்றி, பட்டனை அழுத்தலாம். ( உங்களை மகிழ்வித்த வாசகத்தை அச்சிட்ட வடிவில் ஆர்டர் செய்து கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது ). இல்லை, இன்னும் மோசமான மனநிலை தான் நீடிக்கிறது எனும் பட்டனை அழுத்தினால், உங்களை ஊக்கப்படுத்தக்கூடிய வேறு ஒரு வாசகம் தோன்றும்.

குறிப்பாக உங்களுக்கு என்று இல்லாமல் பொதுவாக எல்லோருக்குமான வாசகங்கள் தான் என்றாலும், இந்த பாராட்டுக்கள் நிச்சயம் மன மகிழ்ச்சியை தரும். 

அவசர உலகில் இப்படி அவசரகால பாராட்டும் தேவைப்பட தான் செய்கிறது இல்லையா?

இணையதள முகவரி: http://emergencycompliment.com/

இந்த எளிமையான ஆனால் புத்திசாலித்தனமான இணையதளத்தை அமெரிக்காவை சேர்ந்த மேக் செங் என்பவர் உருவககியுள்ளார். அவரே எதிர்பார்க்காத அளவுக்கு இந்த நல்லெண்ண இணையதளம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாம். இதன் பாதிப்பால் ஒரு யூடியூப் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த வாசகங்களை தொகுத்து புத்தகமாக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளதாம். இது அவ்ரது இணையதளம்: http://megssenk.com/

 

ஒரே கேள்வி இணையதளம்.

இந்த இணையதளம் எனக்கு மட்டும் தான் பிரச்சனையாக இருக்கிறதா அல்லது எல்லோருக்குமே பிரச்சனையாக இருக்கிறதா?

இணையத்தில் எல்லோருக்கும் எப்போதாவது எழக்கூடிய கேள்வி தான் இது.

குறிப்பிட்ட இணையதளத்தை பயன்படுத்த முற்படும் போது ,அதன் முகப்பு பக்கம் தோன்றுவதில் சிக்கல் ஏற்பட்டால் இவ்வாறு கேட்க தோன்றும்.சில நேரங்களில் இணைய இணைப்பில் அல்லது பிரவுசர் அமைப்பில் ஏதாவது கோளாறு என்றாலும் இணையதளத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.

இன்னும் சில நேரங்களில் குறிப்பிட்ட அந்த இணையதளத்தில் ஏதாவது தொழில்நுட்ப சிக்கல் என்றாலோ அல்லது அந்த இணையதளம் முடக்கப்பட்டிருந்தாலோ அதனை அணுக முடியாமல் போகலாம்.

இது போன்ற நேரங்களில் பிரச்சனை தங்கள் இணைப்பிலா அல்லது அந்த இணையதளத்திலா என்ற குழப்பமும் தடுமாற்றமும் இணையவாசிகளுக்கு ஏற்படலாம்.

இந்த குழப்பத்திற்கான பதிலை தான் ஈஸ் டவுன் ஆர் பிலாக்ட் தளம் அளிக்கிறது.

அதாவது குறிப்பிட்ட இணையதளம் முடக்கப்பட்டுள்ளதா அல்லது அதில் ஏதாவது பிரச்ச்னையா என்ற கேள்விக்கு பதில் அளிக்கிறது.

எந்த இணையதளம் பற்றி அறிய விருப்பமோ அந்த தளத்தின் முகவரியை இந்த தளத்தில் சமர்பித்தால் இணைய உலகில் அந்த தளத்தின் தற்போதைய நிலை என்ன என்று இந்த சொல்லி விடுகிறது.

அந்த தளம் முடக்கப்பட்டிருந்தால் அது பற்றி தகவல் சொல்கிறது.இல்லை என்றால் அந்த தளம் இயங்கி கொண்டிருக்கிறது என பதில் அளிக்கிறது.

எனவே ஏதாவது தளத்தை காண்பதில் சிக்கல் ஏற்பட்டால் அந்த தளத்திற்கு ஏதாவது பிரச்சனையா என்று இதன் மூலம் தெரிந்து கொண்டு விடலாம்.

ஒரு பக்கம் பல்வேறு தணிக்கை காரணங்களுக்காக இணையதளங்கள் முடக்ப்பட்டு கொண்டே இருக்கின்றன.இன்னொரு பக்கம் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இணையதளங்களை அணுகுவதில் சிக்கல் ஏற்படலாம்.

இரண்டுக்கும் நடுவே சிக்கி கொண்டு இணையவாசிகள் அல்லபடுவதற்கு மாறாக ஒரு இணையதளத்தை அணுக முடியாமல் போனால் அந்த நிலை தனக்கு மட்டும் தானா அல்லது எல்லோருக்குமானதா என்று அறிந்து கொள்ளலாம்.

ஆனால் ஒன்று இந்த தளம் இந்த ஒற்றை கேள்விக்கு மட்டும் தான் பதில் அளிக்கிறது.இணையதளம் முடக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையோ தீர்வையோ இது தருவதாக சொல்லவில்லை.

ஆனால் பயனுள்ள இணையதளம் என்பதில் சந்தேகமில்லை.

பல நேரங்களில் வைரஸ் பாதிப்புகளால் கூட இணையதளங்கள் பாராமுகம் காட்டலாம்.எனவே இந்த தளத்தில் பரிசோதித்து பார்ப்பதன் மூலம் என்ன பிரச்ச்னை என்பதை சரியாக தெரிந்து கொள்ளலாம்.

அதோடு இதில் பரிசோதிக்கப்பட்ட இணையதளங்களின் பட்டியலும் முகப்பு பக்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.அந்த பட்டியலை ஒரு பார்வை பார்த்தால் இணையதளங்களின் நிலை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://isdownorblocked.com/

முடக்கப்பட்ட இணைய‌தளங்களை பார்க்க!

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையதளங்களை விடுவிக்கும் இணைய சேவை இது.அதாவது தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்க உதவும் சேவை.ஆனால் தடை செய்யப்பட்ட எல்லா தளங்களையும் பார்க்க முடியாது.அதற்கே வேறு சேவையை தான் நாட வேண்டும்.

அன் டைனி தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது.

டிவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அதன் வரம்பு கருதி இணையதள முகவரிகளை சுருக்கி பகிர்ந்து கொள்ளும் பழக்கம் பிரபலமாக உள்ளது அல்லவா?டிவிட்டர் பயனாளிகள் பலரும் இந்த இணைய முகவரி சுருக்கங்களை பயன்படுத்துகின்றனர்.

சில நேரங்களில் குறும்பதிவுகள் தணிக்கைக்கு ஆளாகும் போது இந்த இணைப்புகள் முடக்கப்பட்டு விடும்.இதனால் இணைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தளத்தை பார்க்க முடியாமல் போகலாம்.

இது போன்ற நேரங்களில் முடக்கப்பட்ட அந்த இணைப்பின் பின்னே உள்ள மூல இணையதளத்தை தடையின்றி பார்க்க உதவுவது தான் அன் டைனியின் பணி.

ஆனால் ஒன்று மூல இணையதளமும் முடக்கப்பட்டிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.அந்த வகையில் இதன் பயன்பாடு குறிப்பிட்ட எல்லை வரை தான்.

இணையதள முகவரி;http://untiny.me/