ஆறு கட்ட விளையாட்டு

sixdegreeஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கன் மிகவும் விசேஷமானவர். அமைதி யான தனித்தன்மை கொண்ட நடிகர் அவர். கெவின் பேக்கனுக்கு நிகரானவராக நம்மூர் நடிகர்களில் யாராவது சொல்ல முடியுமா? நாகேஷை சொல்லலாம். ஜெய் சங்கர், பிரகாஷ் ராஜ், எஸ்.வி. ரங்காராவ் ஆகியோரையும் நினைத்துப் பார்க்கலாம். கொஞ்சம் யோசித்தால் ஆச்சி மனோரமா வையும் சொல்ல முடியும்.
.
கெவின் பேக்கனை அறிந்தவர்களை இந்த ஒப்பீடு மேலும் குழப்பி அவர் என்ன மாதிரியான நடிகர் என திகைக்க வைத்து விடலாம். நாகேஷைப் போல் நல்ல நகைச்சுவை நடிகரா,ஜெய் சங்கரைப் போல எளிமையான நாயகனா, பிரகாஷ் ராஜ் போல் நவீன குணச்சித்திர நடிகரா? என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.

ரங்காராவ் மற்றும் மனோரமாவுட னான ஒப்பீடு மேலும் குழப்பத்தை அதிகமாக்கி இருக்கலாம். பேக்கனுக்கும் இவர்களுக்குமான ஒற்றுமை நடிப்புத் திறமையில் இல்லை. அவர்கள் நடித்த விதத்தில் இருக்கிறது. அதாவது, அனைவ ருமே வரம்புகளோ, வரையறை களோ இல்லாமல் எல்லா படங்களி லும் நடித்தவர்கள்.

இதைவிட எல்லோர் படங்களிலும் நடித்த வர்கள் என்று சொல்வது மிகவும் பொறுத்தமாக இருக்கும். ஆம் எந்த வகையான பாத்திரங் களிலும் நடிக்க கூடியவர் என சொல்லப் படும் கெவின் பேக்கன், ஒரு கட்டத்தில் எல்லா நடிகர்களுடனும் நடித்துக் கொண்டிருந்தார்.

மூன்று அமெரிக்க வாலிபர்கள், பேக்கன் நடித்த படம் ஒன்றை பார்த்துக்கொண் டிருந்தபோது இந்த அம்சத்தை கண்டு கொண்டனர். எந்த நடிகரின் படத்தை எடுத்துக் கொண்டாலும் பேக்கன் இருப்ப தைப் பார்த்து, மனிதர் எல்லோருடனும் நடித்து விட்டாரே என்பது போல அந்த வாலிபர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

வாலிபர்கள் அத்தோடு நின்று விட வில்லை. ஹாலிவுட் படங்களில் சகட்டு மேனிக்கு பேக்கன் நடித்துக் கொண்டிருப் பது வேறு எந்த நடிகருக் கும் சாத்தியமாகாத ஒரு விஷயத்தை அவருக்கு உரியதாக்கி உள்ளதாக வாலிபர்கள் நினைத்தனர்.

அனைத்து ஹாலிவுட் நடிகர்களுட னும் சேர்ந்து நடித்த ஒரே நடிகராக கெவின் பேக்கன் இருப்பார் என அவர்களுக்குத் தோன்றியது. அவரது சம கால நடிகர்கள் மட்டும் அல்ல, ஹாலிவுட்டில் இதுவரை நடித்துள்ள எந்த ஒரு நடிகருடனும் அவர் சேர்ந்து நடித்திருப்பார் என்றும் வியப்புக் குரிய எண்ணம் உதயமானது.

அதாவது அனைத்து நடிகர்களுடனும் அவர் நடித் திருக்காவிட்டாலும், குறிப்பிட்ட ஒரு நடி கருடன் இணைந்து நடித்த ஏதாவது ஒரு நடிகரை எடுத்துக் கொண்டால், அவருடன் நிச்சயம் பேக்கன் நடித்திருக்க வாய்ப்பு இருப்ப தாக வாலிபர்களுக்கு தோன்றியது. இதுவே சுவாரஸ்யமான ஒரு விளையாட் டாக உருவெடுத்தது.

ஏதாவது ஒரு ஹாலிவுட் நடிகரை எடுத்துக்கொள்ள வேண்டும். அவரு டன் பேக்கன் எப்படி தொடர்பு கொண்டிருக் கிறார் என்று பார்க்க வேண்டும்- இதுதான் விளையாட்டு.
உதாரணத்திற்கு பழம்பெரும் ஹாலிவுட் நடிகரை எடுத்துக் கொள் வோம். அவரோடு பேக்கன் நடித் திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அந்த நடிகருடன் இணைந்து நடிகர் (அ) நடிகையோடு பேக்கன் நடித் திருக்க வாய்ப்பு உண்டு.

அப்படியும் இல்லாவிட்டால் இந்த தொடர்பை இன்னும் கொஞ்சம் விரிவு படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவரோடு நடித்த இன்னொருவரு டன் நடித் துள்ள மற்றொருவர் (அ) அவருடன் நடித்த வேறு ஒரு நடிகர் / நடிகை யோடு பேக்கன் நிச்சயம் நடித்திருப் பார்.

இப்படியாக ஆறுக்கும் குறைவான தொடர்புகளில் ஹாலிவுட்டின் எந்த ஒரு நடிகருடனும் கெவின் பேக்கனுக்கு தொடர்பு இருப்பதை நிரூபித்து விட முடியும். இந்த விளையாட்டை வாலிபர்கள் சுட்டிக்காட்டியதுமே திரைப்பட ரசிகர்கள் வியந்து போய் இது உண்மை தானா என்று பரிசோதித்து பார்த்தனர்.

ஏதாவது ஒரு நடிகரை எடுத்துக் கொண்டு அவருக்கும் கெவின் பேக்க னுக்குமான சங்கிலித் தொடர்பை கண்டு பிடிப்பது சுவாரசியமாக இருந்தது. விரைவில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலமாகி கெவின் பேக்க னுக்கு தனிப்புகழைத் தேடித்தந்தது. சிக்ஸ் டிகிரிஸ் ஆப் கெவின் பேக்கன் என்று இந்த அபூர்வ நிகழ்வு அமைக்கப் பட்டது.

உண்மையில் இது இந்த சுவாரசிய மான சங்கிலி தொடர்பு புகழ் பெற்ற சமூகவியல் கோட்பாட்டின் ஒரு அங்கம். சமூகவியல் நிபுணரான ஸ்டான்லி மில் கிராம் சிக்ஸ் டிகிரீஸ் ஆப் சபரேஷன் என்னும் பெயரில் இந்த கோட்பாட்டை முன் வைத்து சிந்தனைக்குரிய சோதனை களை மேற்கொண்டார்.

அறிமுகம் இல்லாத வர், அந்நியமான வர் என்பதை எல்லாம் மீறி உலகில் உள்ள எவரும் மற்றொரு வருடன் உறவு கொண்டவர்களாகவே இருப்பார்கள் என்பதே கோட்பாட்டின் மையக்கருத்து.

இதற்கு தேவை எல்லாம் அதிக பட்சம் ஆறுக்கும் குறைவான உறவுச் சங்கிலி இணைப்புகள்தான்! அதாவது நண்பருக்கு நண்பர், அவருக்கு தெரிந்தவர், அவரோடு பழகியவர் என்று தொடர்பை விரிவு படுத்திக் கொண்டே சென்றால் கடைசி யில் உலகின் எந்த மூளையில் உள்ளவரும் அறிமுகமானவர்களாக இருப்பார்கள்.

இன்றளவும் இந்த உறவுச்சங்கிலி கோட்பாடு தொடர்பான ஆய்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது. திரையுலகில் பேக்கனுக்கு இருந்த தனித் தன்மை காரணமாக அவரை மையமாக கொண்டு ஹாலிவுட் உறவுச் சங்கிலியை அமைக்கும் விளையாட்டு உருவானது.
பல ஆண்டுகளுக்குப் பின் பேக்கன் இந்த விளையாட்டை உலக நன்மைக் காக கையில் எடுத்திருக்கிறார்.

ஹாலிவுட் நடிகர் கெவின் பேக் கனை மையப்படுத்தி விளையாட்டு 1990-களில் அறிமுகமானது. எல்லா ஹாலிவுட் நடிகர்களும், ஆறுக் கும் குறைவான தொடர்புகளில் பேக்க னோடு தொடர்பு கொண்டு இருப்பார்கள் என நிரூபிக்கும் இந்த விளையாட்டு, வேறு எந்த நடிகருக் கும் கிடைத்திராத கவுரவம் என்று தான் சொல்ல வேண்டும். பார்க்கப் போனால் இந்த விதி, பெரும் பாலான நடிகர்களுக்கு பொருந்தவே செய்யும்.

முதலில் கெவின் பேக்கனை மையமாக கொண்டு அறிமுகமான தால் இந்த விளை யாட்டு அவருடன் தொடர்பு கொண்ட தாகவே அறியப் படுகிறது. விளையாட்டுக் கும் அவர் பெயரே நிலைத்திருக்கிறது.

ஹாலிவுட் நடிகர்களை கொண்டு இந்த விளையாட்டை ஆடிப்பார்ப்பதற் காக என்றே பிரத்யேக இணைய தளங்களும் இருக்கின்றன. ஹாலிவுட் நடிகர்களின் பெயரும், அவர்கள் நடித்த படங்களின் பட்டிய லும் இந்த தளத்தில் இடம்பெற்றுள் ளன. குறிப்பிட்ட ஒரு நடிகரை தேர்வு செய்து அவர் மற்ற நடிகருடன் எப்படி தொடர்பு கொண்டிருக்கிறார் என இங்கு பரிசோதித் துப் பார்க்கலாம்.

ஒரு நடிகர் அவருடன் நடித்த நடிகர் அவர்நடித்த படத்தில் இவர் இருந்தால், முதல் நடிகருக்கு இவரோடு தொடர்பு கொள்ள மூன்று உறவுச் சங்கிலிகள் தேவைப்படுவதாக பொருள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு எண் வரும். இந்த எண்ணுக்கும் பேக்கன் எண் என்றே பெயர். ஆக, தன் பெயரில் சுவாரசியமான விளை யாட்டை கொண்ட நடிகராக பேக்கன் விளங்கி வருகிறார்.

இந்த புதுமையான விளையாட்டை விரை வில் பழசாகி மறக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப் பட்டதற்கு மாறாக, இதன் மீதான ஆர்வம் இன்டெர்நெட் உலகில் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது.

பேக்கன், இந்த விளையாட்டை தொடர்ந்து பிரபலமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை போலும்! அல்லது அவர் எதிர்ப்பையும் மீறி இது பிரபல மாக இருப்பதில் அவருக்கு வியப்பு இருக்கிறது போலும்! எப்படியோ இந்த விளையாட்டு இன்னமும் பரவலாக இருப்பதை வியப்புடன் சுட்டிக் காட்டியுள்ள அவர், இந்தவிஷயத்தை நல்ல நோக்கத் துக்காக பயன்படுத்திக் கொள்ளலாமே என்று தீர்மானித்து இருக்கிறார்.

இதற்காக அவர் துவக்கி யுள்ள தளம் தான் ‘சிக்ஸ்டிகிரீஸ்'(sixdegrees.org).
தெரிந்தவர் தெரிந்தவரின் தெரிந்த வர்… என யாருடனோ நமக்கு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் ஆறு கட்ட (சிக்ஸ் டிகிரீஸ்) தொடர் பின்அருமையை பயன் படுத்திக் கொண்டு நல்ல விஷயங்களுக் காக நிதி திரட்டித் தர வேண்டும் என்பது தான் இந்த தளத்தின் நோக்கம்.

இதற்காக நெட்வொர்கிங் பார் இட் என்னும் பெயரிலான தளத்துடன் அவர் கைகோர்த்துக்கொண்டிருக்கிறார். தெரிந்தவர், தெரிந்தவருக்கு தெரிந் தவர் என விரியும் கோட்பாடு வலைப் பின்னல் தத்துவம் என்றும் பிரபலமாக குறிப்பிடப் படுகிறது.
நன்கொடைக்காக இந்த வலைப் பின்னல் தத்துவத்தை பயன்படுத்தி வருகிறது.

நெட்வொர்கிங் பார் சூட் இந்த தளத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தன்னார்வ அமைப்புகள் மற்றும் சேவை அமைப்புகள் பட்டிய லிடப்பட்டுள்ளன. தாராள மனம் கொண்டவர்கள் இதில் தேடிப்பார்த்து தங்கள் நோக்கத்திற்கு பொருத்தமான அமைப்புக்கு நன்கொடை வழங்க லாம்.

கெவின் பேக்கன் தன் பெயரில் இருக்கும் விளையாட்டு மீதான இணையவாசி களின் ஆர்வத்தையும் இதே வகையில் பயன்படுத்திக் கொள்ள சிக்ஸ்டிகிரீஸ் தளத்தை உருவாக்கி இருக்கிறார்.

நமக்குள்ளே இருக்கும் தொடர்பா னது ஒரு நல்ல காரியத்தை செய்வதற் காகத் தான் என்று கூறும் பேக்கன், இந்த தளத்தின் மூலம் அதனை நிறைவேற்றி காட்டுவோம் என்று அழைப்பு விடுக்கிறார்.

பிரபலமாக இருக்கும் வலைப் பின் னல் கோட்பாட்டிற்கு சமூக அக்கறை யையும் கொண்டு வருவோம் என்று அவர் வேண்டுகோள் வைக்கிறார். இந்த திட்டத்திற்காக பல பிரபலங் களும் அவருடன் கை கோர்த்து இருக் கின்றனர். இந்த திட்டத்தில் பங்கேற்க பிரபலமான வராக இருக்க வேண்டும் என்ற கட்டாய மும் இல்லை.

உயர் வான நோக்கம் இருந்தால் நீங்களும் பிரபலம்தான். அந்த நோக்கத்திற்காக இந்த தளத்தின் மூலம் மற்றவர்களின் ஆதரவை திரட்ட முயற்சிக்கலாம். இப்படி சமர்ப்பிக்கப்பட்ட உதவிக் கான வேண்டுகோள்கள் இந்த தளத் தில் நுழைந்தவுடன் எட்டிப்பார்க்கும். அவற் றோடு நெட்வொர்க் பார் குட் தளத்தில் உள்ள சேவை அமைப்புகள் பற்றிய தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.

உதவலாம் என நீங்கள் தீர்மானிக்கும் அமைப்பை தேர்வு செய்த பின் அதற்கு உதவுமாறு வேண்டுகோளோடு உங்கள் நண்பர்கள் ஆறு பேருக்கு ஒரு இ-மெயில் தட்டி விட்டால் போதும். இதன் மூலம் அவர்கள் அந்த அமைப் பிற்கு நன்கொடை வழங்கும் வாய்ப்பு ஏற்படலாம். தினமும் எத்தனையோ இ-மெயில்கள் அனுப்புகி றோம்.

மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒரு சில இ-மெயில்கள் அனுப்பி பார்ப் போமே! அது தான் இந்த தளத்தின் ஆதார செய்தி. சேவை அமைப்புகள் பற்றி பரவலாக தெரிய வருவதோடு, உதவி தேவைப்படு பவருக்கு பொருத் தமான உதவி கிடைக்கும் வழி பிறக்கும் அல்லவா!

——–

link;
www.sixdegrees.org

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஆறு கட்ட விளையாட்டு

  1. RAM

    GOOD CAUSE IS BEING DONE BY THE HOLLYWOOD ACTOR “KEVIND BEKON”….LET US SEE HOW BEST WE CAN POPULARISE HIS WEB SITE…

    Reply
  2. ஆனா என்நேட சத்தியமா நடிக்கேலைங்க
    நல்லா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்கhttp://nallurran-nallur.blogspot.com/

    Reply
  3. win

    Sir pls tell me how to play this so that we can have Mr.Nagesh or Mrs.Manoramma aachi as began and play the same game so that it is good time pass as well as it is a pride for the particular actors.

    Reply

Leave a Comment to hajan Cancel Reply

Your email address will not be published.