140 எழுத்துகளில் சுயசரிதை

aviary_themeடிவிட்டர் செய்வதால் என்ன பயன் என்று கேட்க வேண்டிய அவசியமில்லை.டிவிட்டரில் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனரா என்று கவலைப்பட வேண்டியதில்லை.என் கடன் டிவிட் செய்வது என்பது போல டிவிட்டரில் உங்களை வெளிப்ப‌டுத்திக்கொண்டே இருக்கலாம்.

உங்களைப்பற்றி தினம் ஒரு நூறு டிவிட்டர் செய்திகளை கூட பதிவு செய்து கொண்டேயிருக்கலாம்.டிவிட்டர் இலக்கணப்படி காபி சாப்பிடுவதில் துவங்கி ,அலுவலகத்திற்கு போனது ,புதிய நாவல் படித்தது என எல்லாவற்றையும் பதிவு செய்யலாம்.

இந்த பதிவுகளை எல்லாம் அப்படியே தொகுத்து புத்தக வடிவில் சுயசரிதையாகவும் வெளியிட்டு விடலாம்.140 எழுத்துக்க‌ளாக‌ உருவான‌ குறும்ப‌திவு சுய‌ ச‌ரிதை.

சுய‌ சரிதை வெளியிடும் அள‌வுக்கு நான் என்ன‌ பெரிய‌ ஆளா என்றெல்லாம் கேட்காதீர்க‌ள்.அத‌ற்கான‌ வாய்ப்பு மிக‌வும் சுல‌ப‌மாகியிருக்கிற‌து என்ப‌தே விஷ‌ய‌ம்.’140பயோ’ என்னும் இணைய‌த‌ள‌ம் இந்த‌ சேவையை வ‌ழ‌ங்குகிற‌து.

இண்டெர்நெட் ஏற்க‌ன‌வே ப‌திப்பிக்கும் வாய்ப்பை சாம‌ன்ய‌ர்க‌ளின் கைக‌ளுக்கு கொண்டு வ‌ந்துவிட்ட‌து.வ‌லைப்ப‌திவுக‌ள் இந்த‌ சுத‌ந்திர‌த்தை மேலும் ப‌ர‌வ‌லாக்கிய‌ நிலையில் குறும் வ‌லைப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ர் புதிய‌தொரு வாயிலை திற‌ந்து விட்டுள்ள‌து.

வ‌லைப்ப‌திவு செய்வ‌த‌ற்காவ‌து கொஞ்ச‌ம் எழுத‌ தெரிய‌ வேண்டும், ஆனால் டிவிட்ட‌ரில் க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்ய‌ எந்த‌ த‌டையும் இல்லை.நினைத்ததை, ந‌ட‌ந்ததை.பார்த்ததை , படித்ததை எதையும் ப‌திவு செய்ய‌லாம்.

எல்லாவ‌ற்றையும் ப‌திவு செய்து என்ன‌ செய்ய‌ப்போகிறோம் என்று கேட்க‌கூடிய‌வ‌ர்க‌ளுக்கு ப‌தில் அளிக்கும் வ‌கையில் டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை தொகுத்து பேப்ப‌ர் பேக் புத்த‌க‌மாக‌ வெளியிடும் வ‌ச‌தியை 140ப‌யோ இணைய‌த‌ள‌ம் வ‌ழ‌ங்குவ‌தாக‌ அறிவித்துள்ள‌து.

டிவிட்ட‌ரில் நீங்க‌ள் வெளியிடும் க‌ருத்துக்க‌ள் உங்க‌ளைப்ப‌ற்றி ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்த‌க்கூடிய‌வை என்று சொல்லும் இந்த‌ த‌ள‌ம் உங்க‌ள் டீவிட்க‌ளை தொகுத்து உங்க‌ள் சுய‌ச‌ரிதையாக‌ வெளியிட்டுக்கொள்ளுங்க‌ள் என்று அழைப்பு விடுக்கிற‌து.

இத‌னை குறும் ப‌திவு சுய‌ ச‌ரிதை என‌ வ‌ர்ணிக்கும் இந்த‌ த‌ள‌ம் லேஅவுட் ம‌ற்றும் புத்த‌க‌ அட்டையை தேர்வு செய்து கொள்ளும் வ‌ச‌தியையும் த‌ருகிற‌து.இந்த‌ த‌ள‌த்தின் உத‌வியோடு 20 டால‌ரில் சுய‌ச‌ரிதையை த‌யார் செய்து விட‌லாம்.

140 எழுத்துக்க‌ளில் ப‌திவுக‌ளை வெளியிட‌ உத‌வும் டிவிட்ட‌ர் சேவையை ப‌ய‌ன்ப‌டுத்த‌ எத்த‌னையோ கார‌ண‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌.அவ‌ற்றோடு இப்போது டிவுட்ட‌ர் சுய‌ச‌ரிதையும் சேர்ந்திருக்கிற‌து.
———–
link;
http://140bio.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “140 எழுத்துகளில் சுயசரிதை

  1. rudhran

    thanks for the idea

    Reply
    1. cybersimman

Leave a Comment to rudhran Cancel Reply

Your email address will not be published.