உச்சரிக்க கற்றுத்தரும் தளம்

கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் சுப்பிரமணிய சிவா நீதிமன்றத்தில் வாதிடும் காட்சி ஒன்று வரும். அந்த காட்சியில் தனது பெயரை தவறõக உச்சரித்த நீதிபதியை பார்த்து, எனது பெயர் சவம் இல்லை ஐய்யா, சிவம் என்று சுப்பிரமணிய சிவா ஆவேசமா கூறுவார்.
.
பெயர்களை தவறாக உச்சரிப்பதில் ஏற்படும் பிரச்சனைக்கான உதாரணமாக இந்த சம்பவத்தை கொள்ளலாம். ஆங்கிலேயர்கள் இந்தியப்பெயர்களை படுகொலை செய்ததை சுதந்திரப்போராட்டம் தொடர்பான எல்லாத் திரைப்படங்களிலும் தவறாமல் பார்க்கலாம்.

என்றாலும் இப்படி பெயர்படுகொலை செய்தது அந்த கால ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல. இன்றளவும் அழகான தமிழ்ப்பெயர்களை ஆங்கிலச் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் நிருபர்கள் பச்சை படுகொலை செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.நாமும் கூட, ஆங்கிலம் மற்றும் பிறமொழி பெயர்களை நம்மை அறியாமல் பந்தாடிக் கொண்டுதான் இருக்கிறோம். உச்சரிப்பில் ஏற்படும் பிழைகள் பல நேரங்களில் அறியாமல் செய்த தவறாக அமைகிறது.

சில நேரங்களில் அதிகார, நிறத்திமிர் காரணமாக திட்டமிட்டே செய்யப்படுவதும் உண்டு. அதிலும் மிகவும் அபூர்வமான பெயர்களை கொண்டவர்கள் அல்லது இத்தகைய பெயர்களை கொண்டவர்களை வாழ்க்கை துணையாக பெற்றவர்கள் பிறர் இந்த பெயர்களை தப்பு தப்பாக உச்சரிப்பதை கேட்டு  தினம் தினம் நொந்துபோக நேரிடலாம்.கலாச்சாரங்கள் கலக்கும் நகரங்களில் இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கலாம்.

அமெரிக்கா போன்ற குடியேறியவர்களின் நாட்டிலும் இந்தியா போன்ற பலமொழி பேசும் தேசத்திலும் வசிப்பவர்கள் பெயர்ப்பிரச்சனையை நாள்தோறும் எதிர்கொள்ள நேர்கிறது.இந்தப்பிரச்சனையை நீங்கள் உணர்ந்திருக்கும் பட்சத்தில், அதைவிட தவறை திருத்திக்கொண்டு பெயர்களை அதற்குரிய சரியான ஒலி நயத்தோடு உச்சரிக்கும் விருப்பம் கொண்டிருந்தால் உங்களுக்கு கை கொடுக்கக்கூடிய அருமையான இணைய தளம் ஒன்று இருக்கிறது.

ஹியர் நேம்ஸ் என்பது அந்த இணையதளதின் முகவரி.பொதுவாக அகராதிகளில் குறிப்பிட்ட சில பெயர் அல்லது பதங்கள் அருகே அவற்றை உச்சரிக்க வேண்டிய விதம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த குறிப்பு ஓரளவுக்கு கை கொடுக்குமே தவிர துல்லியமான உச்சரிப்புக்கு தடுமாறவே வேண்டியிருக்கும். என்னதான் இருந்தாலும் உச்சரிப்பை கேட்கும்போது கிடைக்கக்கூடிய துல்லியத்திற்கு ஈடு இணை கிடையாதுதான். அதைத்தான் இந்த தளம் செய்கிறது.

அதõவது இந்த தளம் ஒவ்வொரு பெயரையும் எப்படி சரியாக உச்சரிக்க வேண்டும் என்று ஒலி வடிவில் உணர்த்துகிறது.
இந்த தளத்தில் முகப்புப்பக்கத்தில் உள்ள கட்டத்தில், நாம் தெளிவு பெற விரும்பும் பெயரை சமர்ப்பித்து
கிளிக் செய்தால் அதன் உச்சரிப்புக்குரிய ஒலியை கேட்க முடியும்.

அந்த பெயர் தொடர்பான மேலும் விவரங்களையும் தேடித்தரும் வசதி உண்டு. பெயர்கள் மீது பற்று கொண்டவர்களுக்கு உண்மையிலேயே பயனுள்ள தளம் இது.தினந்தோறும் விநோதமான பெயர்களின் உச்சரிப்பு குறிப்புகள் இடம்பெறுவதோடு, உலகில் உள்ள பல்வேறு மொழிகளில்  பெயர்கள் பற்றிய விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

இவற்றைத்தவிர பெயர்களுக்கான அர்த்தம் மற்றும் பிண்னணி விவரங்களையும் தேடிப்பார்க்கும் வசதி உள்ளது. பெயர்க் காரணங்கள், சரித்திர குறிப்புகள் ஆகியவை தொடர்பான விஷேச இணைப்புகளும் இந்த தளத்தை மேலும் பயனுள்ளதாக ஆக்குகிறது. (www.HearNames.com)

——

http://www.hearnames.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “உச்சரிக்க கற்றுத்தரும் தளம்

  1. அருமையான பதிவு.. இன்னும் நிறைய இந்திய பெயர்கள் இந்த தளத்தில் சேர்க்கப்படவேண்டும் என நினைக்கிறேன்.

    Reply
  2. Pingback: Tweets that mention உச்சரிக்க கற்றுத்தரும் தளம் « Cybersimman's Blog -- Topsy.com

  3. சிறந்த தகவல் நன்றி நண்பரே…

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *