இணைய தளங்களை குறித்து வைக்க ஒரு இணையதளம்.

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது என்று சொல்வதை போல இணையத்தில் உலா வரும் போது கும்பிட நினைக்காத தெய்வங்களையும் அடிக்கடி தரிசிக்கலாம்.அதாவது நாம் தேடிச்செல்லாத தகவல்கள்,ஆனால் நமக்கு சுவாரஸ்யத்தையும் பயனையும் தரக்கூடிய தகவல்களையோ கட்டுரையையோ பார்க்கலாம்.

இந்த கட்டுரைகள் என்ன தான் சுவாரஸ்யமாக இருந்தாலும் அப்போதே படித்து முடிப்பது கொஞ்சம் கடினம் தான்.அப்படியே படிக்க உட்கார்ந்தால் வேலை கெட்டு போகலாம்.

இது போன்ற நேரங்களில் செய்யக்கூடிய உத்தமமான காரியம் அந்த கட்டுரைக்கான இணைப்பை குறித்து வைத்து கொண்டு நேரம் கிடைக்கும் போது படித்து பார்க்க வேண்டியது தான்.இப்படி அருமையான இணைப்புகளை யாரும் ஒரு காகித்தைலோ டைரியிலோ குறித்து வைப்பதில்லை.

அதற்காக என்று தான் புக்மார்கிங் சேவை இருக்கிறதே.புக்மார்கிங்கிறகாக தனி இணையதளங்கள் இருக்கின்றன.இல்லை என்றால் பிரவுசரிலேயே அதற்கான வசதி உண்டு.

எல்லாம் சரி எத்தனை பேர் இப்படி பிறகு படித்து கொள்ளலாம் என்று செமித்து வைத்த இணைப்புகளை பொறுப்புடன் பிற்கு படிக்கிறோம் என்பது வேறு விஷயம்.வீட்டில் பரண் மேல் தூக்கி போடப்பட்ட பழைய பொருட்கள் போல இந்த இணைப்புகளும் இணைய பரணில் சேர்ந்து கிடக்கலாம்.

ஒரு வேளை புக்மார்கிங் செய்யப்படுவதாலயே மறந்து போகிறோமோ என்னவோ.

அதனால் இணைய உலாவின் போது தற்செயலாக பார்க்கும் பயனுள்ள கட்டுரைகளை பின்னர் படிக்கலாம் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு தளத்தில் இவற்றை போட்டு வைத்தால் அவற்றை நேரம் கிடைக்கும் போது படிப்பதற்கான வாய்ப்பு அதிகம் அல்லவா?

இந்த கருத்து மெய்யோ பொய்யோ தெரியாது ஆனால் இந்த சேவையை வழங்க பல தளங்கள் இருக்கின்றன.இந்த‌ பட்டியலில் சமீபத்திய வரவு ரீட்மியோ.

இணையத்தில் எப்போதெல்லாம் பிறகு படித்துகொள்ளலாம் என்று தோன்றக்கூடிய கட்டுரைகளை பார்க்கிறீர்களோ அப்போதெல்லாம் அந்த இணைப்பை இங்கு சேமித்து வைத்து கொள்ளலாம்.அதன் பிற‌கு இந்த தளத்தில் நுழைந்தால் நீங்கள் சேமித்த இணைப்புகள் இருக்கும்.

ஆனால் அதற்கு முன்பாக் இங்கு உறுப்பினராக வேண்டும்.உறுப்பினரான பின் இணைப்புகளை அப்படியே காபி செய்து இங்கே ஒட்டி விடலாம்.தேவை என்றால் அவற்றுடன் குறிப்பெழுதியும் வைக்கலாம்.கூடுதல் முக்கியத்துவம் கருதி நட்சத்திர குறியிடலாம்.

இணைப்புகளை வரிசப்ப‌டுத்தி வைப்பது என பல வசதிகள் உள்ளன.பல்வேறு தலைப்புகளி வகைப்படுத்து கொள்ளலாம்.எல்லாவற்றுக்கும் மேல் இணைப்புகளின் பக்கம் எளிமையாக குழ‌ப்பம் இல்லாமல் மிக அழகாக உள்ளது.

உறுப்பினரான பின் இந்த தளத்திற்கு வருகை தர வேண்டும் என்றில்லை.பிரவுசரில் இருந்தே இணைப்புகளை சேமித்து விடலாம்.அதே போல் டிவிட்டரில் இருந்தும் இங்கே சேமிக்கலாம். செல் போனில் இருந்தும் சேமிக்கலாம்.

இணையத்தில் அடிக்கடி உலாவுபவர்கள் ரீட்மியோவில் உறுப்பினரானால் பயனனுள்ளதாகவே இருக்கும்.

———-

https://readmeo.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இணைய தளங்களை குறித்து வைக்க ஒரு இணையதளம்.

  1. பயனுள்ள தகவல்!
    ஆனால் தாங்கள் இணைப்பு(லிங்க்) தரவில்லையே!

    Reply
    1. cybersimman

      இப்போது இணைப்பு கொடுத்து விட்டேன் நண்பரே.

      Reply
      1. மிக்க நன்றி!

        Reply
  2. அருமையான தளங்களை தேடிப்பிடித்து அறிமுகம் செய்வதற்கு வாழ்த்துக்கள். நன்றி நண்பரே.

    Reply
  3. பயனுள்ள தகவல் நண்பா.. இப்படி ஒரு சேவை கூகிளிலிலும் இருக்கின்றது என்று நினைக்கிறேன்..

    Reply
    1. cybersimman

      ஆம்.இருப்பினும் இவை பிரத்யேக‌ சேவைகள்.

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *