புதுமையான புக்மார்கிங் இணைய‌தளம்.

நீங்கள் நினைத்தால் அறிவியலுக்கோ  தொழில்நுட்பத்திற்கோ அதிபதியாக முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிற‌தா?அதே போல் கூகுல் அல்லது அன்ட்ராய்டுக்கோ கூட நீங்கள் சொந்தக்காரராக ஆகலாம்.ஆப்பிலுக்கோ ஐபோனுக்கோ கூட நீங்கள் அதிபதியகலாம்.

அதாவ‌து இந்த குறிச்சொற்களுக்கெல்லாம் நீங்கள் சொந்தக்காரராகலாம்.புதிய புக்மார்கிங் சேவை தளமான நேப்டேக் தான் இப்படி குறிச்சொற்களை உங்களுக்கு சொந்தக்காரர்களாக ஆக்குகிறது.

படித்ததில் பிடித்தது என்று சொல்வதை போல இணையத்தில் பார்த்ததில் பிடித்த இணைப்புகளை புக்மார்கிங் தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.மற்ற இணையவாசிகல் புதிய சுவையான தளங்களை தெரிந்து கொள்ள இது உதவும் என்பதோடு ப்கிர்ந்து கொள்பவ‌ருகே கூட தாங்கள் பார்த்து ரசித்த இணையதளங்களின் சேமிப்பாகவும் இவை அமையும்.

இந்த வகை புக்மார்கிங் சேவைகள் அநேகம் உள்ளன.அடிப்படையில் எல்லாமே இணைப்புகளை பகிர்ந்து கொள்வதற்கானவை தான்.

ஏற்கன‌வே டெலிசியஸ் அல்லது டிக் போன்ற புக்மார்கிங் சேவைகளை பயன்படுத்திக்கொண்டிருப்பவர்களுக்கு புதிய புக்மார்கிங் சேவை என்றதுமே அலட்சியம் உண்டாகலாம்.ஆனாலுக் கூட புதிய புக்மார்கிங் தளங்களில் சில சிறியதாகவேனும் புதுமையான  அம்சங்களோடு அறிமுகமாகி இணையவாசிகளை திரும்பி பார்க்க வைக்கின்றன.

அந்த வகையில் நேப்டேக் தளம் குறிச்சொற்களை உரிமையாக்கி தருவதாக கூறி கவர்கிறது.

எல்லா புக்மார்கிங் தளங்களை போலவே இதிலும் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு உங்களுக்கு பிடித்தமான இணைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.அந்த இணைப்புகள் தொடர்பான குறிச்சொற்களையும் இணைத்து விடலாம்.இதுவும் மற்ற புக்மார்கிங் தளங்களில் உள்ள அம்சம் தான்.

ஆனால் இதன் பிற‌கு தான் நேப்டேக் சின்னதாக ஒரு அற்புத‌த்ததை செய்கிறது.

புக்மார்கிங் செய்யும் பொது உங்களுக்கென ஒரு ரசனையும் பகிர்ந்து கொள்ளப்படும் தளங்களில் ஒரு பொது தன்மையும் இருக்கும் அல்லவா?இந்த பொதுதன்மையை குறிச்சொற்களாக நீங்கள் குறிப்பிடலாம்.குறிப்பிட்ட அந்த இணைப்பு எந்த வகையை சேர்ந்தது என்பதை இந்த குறிச்சொல் உணர்த்தும்.

உதாரணமாக தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரை என்றால் தொழில்நுட்பம் என்று குறிச்சொல் மூல அதனை அடையாளம் காட்டலாம்.அதே போல சினிமா செய்தி என்றால் திரைப்படம் என்று அடையாளம் காட்டலாம்.

நேப்டேக் தளத்தில் இப்படி குறிச்சொற்களை சேர்க்கும் போது அந்த குறிச்சொற்கள் உங்களுக்கு உரியதாக கருதப்படுகிறது.அதாவது ஒரே குறிச்சொல் தொடர்பான அதிக இணைப்புகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் போது அவை உங்களுக்கு சொந்தமாகி விடுகிறது.

மற்ற பயனாளிகள் அந்த குறிச்சொல்லை பயன்படுத்தும் போது அதற்கான புள்ளியும் தரப்படும்.ஆனால் குறிச்சொல் உரிமையை தக்க வைத்து கொள்ள தொடர்ந்து தரமான இணைப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த தளத்தை பொருத்தவரை அந்த குறிச்சொல்லுக்கு நீங்கள் சொந்தகாரார் மட்டும் அல்ல அதற்கான குருவும் தான்.அந்த குறிச்சொல் தொடர்பான இணைப்புகளுக்கு நீங்கள் தான் அனுபவமும் நிபுணத்துவமும் உள்ளவர் என்று பொருள்.

முகப்பு பக்கத்தில் வரிசையாக இணப்புகள் இடம்பெறுகின்றன.அவற்றின் கீழ் பொருத்தமான குறிச்சொற்கள் இருக்கின்றன.அதே போல வலது பக்கத்தில் குறிச்சொற்கள் வகைமேகங்களாக கொடுக்கப்படுள்ளன.

குறிச்சொற்களை கிளிக் செய்தால் தொடர்புடைய இணைப்புகள் தோன்றுவதோடு அதன் உரிமைதார்களின் குறிப்பும் இடம்பெறுகிற‌து.

இப்படி குறிச்சொல்லுக்கு அதிபதியாவதால் என்ன பயன் என்று தெரியவில்லை.ஆனால் இது சுவாரஸ்யமாக உள்ளது.புகமார்கிங் தனமையில் புதிய அம்சமாகவும் இருக்கிற‌து.

மேலும் புக்மார்கிங் சேவைகள் இண்டெர்நெட்டை ஜனநாயகமயமாக்கிய‌தாக கருதப்படுகின்றன.அதாவது குறிப்பிட்ட ஆசிரியர் குழு தேர்வு செய்து தரும் செய்திகளையும் இணைப்புகளையும் மட்டுமே படிக்க கூடிய நிலைக்கு மாறாக இணையவாசிகல் தங்களை கவர்ந்த இணைப்புகளை பகிர்ந்து கொள்ள புக்மார்கிங் தளங்கள் வழி செய்தன.

இதன் அடுத்த கட்டமாக நேப்டேக் குறிச்சொற்களை இணையவாசிகளுக்கே சொந்தமாக்குகிறது.

இணையதள முகவரி;http://nabtag.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “புதுமையான புக்மார்கிங் இணைய‌தளம்.

  1. useful and interesting…..
    thanks…

    Reply
  2. sadha

    நண்பர் சிம்மன்,
    நேப்டேக் பற்றிய உங்கள் கட்டுரை சுவையாக, பயனுள்ளதாக இருந்தது. உடனே நேப்டேக் தளத்திற்கு சென்று பார்த்தேன். இனி நான் அடிக்கடி செல்லும் தளங்களுள் அதுவும் ஒன்றாக இருக்கும்.

    ஒரு சந்தேகம். நீங்கள் ஸ்டம்பிள்அப்ஆன் (stumbleupon.com) என்ற தளத்தை அறிமுகப்படுத்திவிட்டீர்களா? (அனேகமாக உங்கள் கூரிய பார்வைக்கு அது தப்பியிருக்காதுதான். உங்கள் வலைப்பூ தேடுபொறியில் அதைக் கண்டறிய முடியவில்லை.)
    ஸ்டம்பிள்அப்ஆன் புதுப்புது தளங்களை பிற இணையவாசிகளின் உதவியுடன் தரவகைப்படுத்தித் தரும் ஒரு அற்புதமான தளம். முதலில் உங்கள் ஆர்வங்கள், ரசனைகள் எந்தத் துறைகளில் இருக்கின்றன என்பதை ஸ்டம்பிள் அப் ஆன் கேட்டு வாங்கிக்கொள்கிறது. பிறகு அந்தத் தளத்தை பயன்படுத்தப் பயன்படுத்த அது உங்களுக்கு ஏற்ற தளங்களைப் பிடித்துக்கொண்டு வந்து காட்டுகிறது.
    பல சர்ப்ரைஸ்களை இந்தத் தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகம்.

    அன்புடன்
    சதா

    Reply
    1. cybersimman

      நன்றி நண்பரே.புக்மார்கிங் பற்றீய இந்த பதிவையும் பார்க்கவும்.http://cybersimman.wordpress.com/2011/03/20/bookmark-3/

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *