பிரபலங்கள் போலவே டிவிட்டர் செய்ய ஒரு இணையதளம்.

டிவீட்போர்ஜரை டிவிட்டரில் மோசடி செய்வதற்கான சேவை என்று சொல்லலாம்.மோசடி என்றவுடன்  ஏதோ பெரிய அளவிலான ஏமாற்று வேலை என்றெல்லாம் நினைத்துவிட வேண்டாம்.

இது டிவிட்டரை வைத்துக்கொண்டு சின்னதாக சுவாரஸ்யத்தை தேடிக்கொள்வதற்கான சேவை.ஆபத்தில்லாதது என்றும் சொல்லலாம்.

சமயங்களில் நண்பர்களை விளையாட்டாக பீதிக்குள்ளாக்க குரலை மாற்றி பேசுவது,இன்னொருவர் போல நடிப்பது போன்ற சேட்டைகளில் எல்லாம் ஈடுபடுவோம் அல்லவா?அதே போலவே பிரபலங்கள் பெயரில் டிவிட்டர் பதிவுகளை வெளியிட உதவுகிறது இந்த சேவை.

பிரபலங்கள் பெயரில் டிவிட்டர் கணக்குகளை வைத்திருக்கும் பழக்கம் ஏற்கனவே டிவிட்டர் வெளியில் பரவலாக இருக்கிறது.பிரபல நட்சத்திரம் ஒருவரின் பெயரில் ரசிகர் யாராவது டிவிட்டர் கணக்கை துவக்கி அவரை போலவே பதிவுகளை வெளியிடுவதையும்,ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட நட்சத்திரம் அந்த டிவிட்டர் கணக்கு த‌ன்னுடையது அல்ல போலியானது என்று விளக்கம் தருவதையும் இணையவாசிகள் அடிக்கடி பார்த்திருக்கலாம்.

ரசிகர்கள் நட்சத்திரங்கள் மீதான அபிமானத்தின் காரணமாக அல்லது சுவாரஸ்யம் கருதி இப்படி பிரபலங்களின் பெயரில் டிவிட்டர் செய்வதாக கொள்ளலாம்.இன்னும் சிலர் பிரபலங்களின் நட்சத்திர முகவரிகள் டிவிட்டரில் கேட்பாரற்று கிடப்பதை பயன்படுத்து கொள்ளும் நோக்கில் அல்லது பிரபலங்களின் டிவிட்டர் அறியாமையை கண்டிக்கும் வகையில் இவ்வாறு செய்வதாக கொள்ளலாம்.

எது எப்படியோ டிவிட்டர்  இதனை கட்டுப்படுத்துவதற்காக பிரபலங்களுக்கான சரிபார்க்கப்பட்ட சேவை வசதியை வழங்கி வருகிற‌து.சரி பார்க்கப்பட்ட சேவை என்னும் அடையாளம் இருந்தால் அந்த கணக்கு குறிப்பிட்ட நட்சத்திரத்தினுடையது தான் என்பதற்கான உறுதியாகவும் அமைகிறது.அதே போல போலியாக யாராவது பதிவுகளை வெளியிடுவது தெரிந்தால் அது பற்றி முறையிட்டு நடவடிக்கை எடுக்க கோரலாம்.

எனவே காலப்போக்கில் டிவிட்டரில் உள்ள பிரபலங்களின் கணக்கெல்லாம் பெரும்பாலும் உண்மையானதாகவே இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் ஏதோ ஒரு காரண‌த்திற்காக நீங்கள் யாராவது பிரபலத்தின் பெயரில் டிவிட்டர் பதிவை வெளியிட விரும்பினீர்கள் என்றால் ட்விட்போர்ஜர் இணையதளம் அதனை மிக சுலபமாக சாத்தியமாக்குகிறது.

யாருடை பெயரில் பதிவுட விருப்பமோ அவரது பெயரை டைப் செய்து விட்டு அதற்கு கீழே உள்ள கட்டத்தில் பதிவுக்கான தகவலை டைப் செய்து சமர்பித்தால் போதும் அந்த பிரபலம் வெலியிட்டது போலவே டிவிட்டர் பதிவு வெளியாகிவிடும்.அவளவு தான்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவில் துவங்கி ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜ‌‌லீனா ஜோலி,பாலிவுட் நடிகர் ஷாருக் கான் ,கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் என் யாருடைய பெயரில் வேண்டுமானாலும் இப்படி பொய் டிவிட்டர் செய்தியை வெளியிடலாம்.

இதனால் என்ன பயன்? அல்லது என்ன பாதிப்பு?

பயனோ பாதிப்போ பெரிய அளவில் இல்லை என்றே சொல்லவேண்டும்.காரணம் இந்த போலி டிவிட்டர் பதிவு யாருடைய டிவிட்டர் கணக்கிலும் தோன்றாது.இணையத்திலும் இந்த பதிவுகளை காண முடியாது.டிவீட்போர்ஜர் தளத்தில் ஒரு பக்கமாக மட்டுமே இது இருக்கும்.

இதனை பகிர்ந்து கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட அந்த பக்கத்தின் இணையமுகவரியை பகிர்ந்து கொண்டால் மட்டுமே சாத்தியம்.பேஸ்புக்கிலோ அல்லது வலைப்பதிவிலோ இப்படி பகிர்ந்து கொள்ளலாம்.விளையாட்டுக்காகவோ சுவாரஸ்யத்திற்காகவோ இதனை பயன்படுத்தலாம்.

பிரபலங்கள் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் விஷயத்தையோ அல்லது சொன்னால் எப்படி இருக்கும் என்று நினைக்கும் கருத்தையோ இப்படி வெளியிடலாம்.சில நேரங்களில் விமர்சனமாக‌வோ கண்டனமாகவோ கூட கருத்துக்களை வெளியிடலாம்.

இந்த தள‌த்தில் உள்ள நல்ல விஷயம்.உங்கள் பெயரில் போலி பதிவுகள் வெளியாவதை விரும்பாவிட்டால் உங்கள் பெயரை சமர்பித்துஅத்தகைய முயற்சியை தடுத்து கொள்ள‌லாம்.

முட்டாள்கள் தினமான ஏப்ரல் முதல் தேதியன்று இந்த தளம் அறிமுகம் செய்யப்பட்டது.அன்றைய தினம் உற்சாகத்தோடு இந்த சேவை பலரால் பயன்படுத்தப்பட்டது.

முட்டாள்கள் தினத்தன்று ஏமாற்ற பயன்படுத்தப்பட்டாலும் உண்மையில் இந்த சேவையின் நோக்கம் ஏமாற்றுவது அல்ல.மாறாக‌ ஏமாறாதீர்கள் என்று எச்சரிப்பது .அதாவது இணையத்தில் ஒருவார் பார்க்கும் தகவல் எல்லாம் உண்மையானதல்ல என்னும் எண்ணத்தை பதிய செய்வத‌ற்கான கலாப்பூர்வ‌மான முயற்சி என்று இந்த தளம் தனது நோக்கம் பற்றி குறிப்பிடுகிறது.

இணைய யுகத்தில் இணையத்தில் பார்க்கும் தகவல்களை எல்லாம் உண்மை என்று நம்பிவிடும் மனப்போக்கு பரவலாக உள்ள நிலையில் அந்த எண்ணத்தை மாற்றுவதற்கான விழிப்புணர்வை இந்த சேவை ஏற்படுத்தும் என்றும் குறுப்பிடப்பட்டுள்ள‌து.

இண்டெர்நெட்டின் ஜனநாயகத்தன்மை காரணமாக யார் வேண்டுமானாலும் எதையும் வெளியிடும் நிலை உள்ளது.இப்படியிருக்க நட்சத்திரத்திடம் இருந்து ஒருவருக்கு டிவிட்டர் செய்தி வந்தால் அதை ஒருவர் எப்படி எதிர்கொள்வார்?உண்மை என்று நம்பி விடுவாரா>அல்லது சந்தேகம் கொள்வரா போன்ற கேள்விகளை எல்லாம் இந்த சேவை எழுப்ப விரும்புகிறது.டிவிட்டரை உதாரணமாக‌  கொண்டு  விக்கிபீடியா,பேஸ்புக், போன்ர தளங்களில் நிகழ வாய்ப்புள்ள பொய்களின் ஆதிக்கத்தை இந்த‌ சேவை சுட்டிக்காட்ட விரும்புகிற‌து.

இணையதள முக‌வரி;http://tweetforger.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பிரபலங்கள் போலவே டிவிட்டர் செய்ய ஒரு இணையதளம்.

  1. …சுவாரசியமான தகவல் தான்…

    Reply
  2. Nice one, good one to do April one pranks 🙂

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *