அசத்தலான ஷாப்பிங் தேடியந்திரம்.

இ காமர்ஸ் தள‌‌ங்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி விட்டன.பொருட்கள் பற்றிய விவரங்களை பட்டியலிட்டு தேவையானதை வாங்கி கொள்ளுங்கள் என்று ஒதுங்கி கொண்ட நிலை மாறி நுகர்வோரின் தேவையையும் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்டு அவர்கலுக்கு ஏற்ற பொருளை பரிந்துரை செய்யும் புத்திசாலி ஷாப்பிங் தளங்கள் இப்போது உதயமாகி வருகின்றன.

அதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அந்த பொருள் தொடர்பான சகலவிதமான அமசங்களையும் அலசி ஆராய்ந்து சரியான பொருளை தேர்வு செய்ய உதவும் புத்திசாலி ஷாப்பிங் தேடியந்திரங்களாக இவை அமைந்துள்ளன.

இந்த வகையில் புதிய அறிமுகம் ஹைடென்டிபை.

கட்டளையிடுங்கள் தலைவா கத்திருக்கிறேன் என்று சொல்லும் விசுவாசமான தொண்டனை போல ‘தேவையை சொல்லுங்கள்,உங்களுக்கான சரியான பொருளை பரிந்துரை செய்கிறோம் என்கிற‌து இந்த தளம்.சொல்வது போலவே நுகர்வோர் தேவைக்கேற்ற பொருளை பரிந்துரைக்கவும் செய்கிற‌து.

என்ன பொருள் தேவை என்று தெரிவித்தால் போதும் இந்த தளம் பொருத்தமான பொருளை பட்டியலிடுகிறது.அதுவும் சும்மாயில்லை,நுகர்வோர் சார்பில் விரிவான ஆய்வு மேற்கொண்டு அதனடிப்படையில் பொருத்தமான பொருட்களை பட்டியலிடுகிறது.

விருப்பமான பொருளை வாங்கும் போது,கண்ணை முடிக்கொண்டு வாங்கிவிட முடியுமா?எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் அதில் உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.விலை குறைவாக இருக்கிறதா என்றும் தெரிந்து கொள்ள வேண்டும்.தரமானதா,செய்லதிற மிக்கதா என்றெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கொஞ்சம் மெனக்கெட்டால் இண்டெர்நெட்டிலேயே பொருட்களின் பல்வேறு அம்சங்களை அலசி ஆராய்ந்து விடலாம் தான்.இதற்கு உதவக்கூடிய விலை ஒப்பீட்டு இணையதளங்கள் ,பொருட்களின் ச‌கலவிதமான விவரங்களையு தரும் விக்கி பாணி தளங்கள்,பொருட்களை பயன்படுத்திய நுகர்வோர் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய தளங்கள் உள்ளிட்ட தளங்களுக்கு சென்று தேடிப்பார்த்து விவரங்களை சேகரித்து முடிவெடுக்க வேண்டும்.

இப்படி கஷ்டப்படாமலேயே ஆனால் இத்தகையை ஆய்வின் மூலம் பெறக்கூடிய பலனை பெற முடிந்தால் எப்படி இருக்கும்?அதை தான் ஹைடன்டிபை செய்கிற‌து.அதாவது நுகர்வோர் சார்பில் இந்த தளமே விரிவான் ஆய்வை மேற்கொண்டு வாங்கக்கூடிய‌ பொருளை பரிந்துரைக்கிற‌து.

நுகர்வோர் செய்ய வேண்டியதெல்லாம் தங்கள் தேவை என்ன என்பதை தெளிவாக குறிப்பிடுவது மட்டுமே.உதாரணமாக லேப்டாப் வாங்குவதாக இருந்தால்,அலுவலக பயன்பட்டிற்கான,நீடித்த பேட்டரி கொண்ட,விலை மலிவான,சேமிப்பு திறன் மிக்க லேப்டாப் தேவை என்று குறிப்பிட்டால் போதும்,இந்த‌ அம்சங்களை பூர்த்தி செய்யும் லேப்டாப்பை பட்டியலிடுகிற‌து.

கூகுல் போன்ற தேடியந்திரத்தில் உள்ள தேடல் கட்டம் போன்ற கட்டத்தில் நுகர்வோர் தாங்கள் எதிர்பார்க்கும் அம்சங்களை டைப் செய்து தேடிக்கொள்லாம்.

இதே போல கம்புயூட்டர்,லேப்டாப்,ஐபாட்,டிஜிட்டல் காமிரா,ஸ்மார்ட் போன்கள்,டிவிக்கள் போன்ற சாதன வகையை சேர்ந்த எந்த பொருளையும் வாங்க‌ இந்த தளத்தை பயன்ப‌டுத்தி கொள்ள‌லாம்.

தொழில்நுட்ப அம்சங்களை அலசி ஆராய்ந்து,விலைகளை ஒப்பிட்டு பார்த்து தான் சரியான் பொருளை வாங்க முடியும் என்றாலும்,அதற்கு சுலபமான வழி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தளம் உருவாக்கப்ப்பட்டுள்ளது.நண்பர்களிடம் தேவையையும் எதிர்பார்ப்படையும் சொல்லி ஆலோசனை கேட்பது போலவே இந்த தளமும் நுகர்வோர் தெரிவிக்கும் தகவல்களில் இருந்து நெத்தியடி போல பரிந்துரை வழங்குகிற‌து.

நுகர்வோர் தனக்கு என்ன விதமான பொருள் தேவை என்று தீர்மானித்து விட்டால் அதனை அடையாளம் காட்டி விடுவதாக இந்த தளம் உறுதி அளிக்கிறது.

முகப்பு பக்கத்தில் சக‌ நுகர்வோர் தேடிய பொருட்கள் பற்றிய‌ தகவல்களும் இடம் பெறுகின்றன.அவற்றையும் நுகர்வோர் தங்களுக்கான வழிகாட்டுதலாக எடுத்து கொள்ளலாம்.நேரடியாக‌ இந்த தளத்தில் இருந்தே பொருட்கலை விற்பனை செய்யும் தளத்திற்கான இணைப்பும் தரப்படுகிறது. விலை குறைப்பு சலுகை பற்றிய‌ தகவலும் முகப்பு பக்கத்திலேயே இடம் பெறுகிறது.

இதே போல ஷாப்பிங் செய்ய கைகொடுக்கும் சேவை ஐஷாப்பர் தளமும் வழங்குகிற‌து.

இணையதள முகவரிhttp://www.hidentify.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “அசத்தலான ஷாப்பிங் தேடியந்திரம்.

  1. k r sekar

  2. k r sekar

Leave a Comment to k r sekar Cancel Reply

Your email address will not be published.