எளிதாக திட்டமிட உதவும் இணையதளம்.

தினசரி வேலைகளை திட்டமிட்டு திறன்பட செயல்பட உதவும் இணைய சேவைகளில் எளிதினும் எளிதானது என்று டூ சிம்ப்ளி டூ இணையதளத்தை சொல்லலாம்.

திட்டமிடுவதற்காக அதிகம் திட்டமிடு தேவையில்லாமல் மிக எளிமையாக இந்த தளத்தை பயன்படுத்தலாம்.உறுப்பினராக பதிவு செய்வதில் இரூந்தே இந்த எளிமை துவங்கி விடுகிறது.இமெயில் முகவரியையும் கடவுச்சொல்லையும் தெரிவித்தாலே போதும் புதிய கண்க்கை துவக்கிவிடலாம்.

அதன் பிறகு இமெயிலில் அழைப்பு வரும் .அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்தால் திட்டமிடுவதற்கான பக்கம் தயாராக நிற்கும்.

இந்த பக்கத்தில் பெரிய அட்டவனையோ கட்டங்களோ நாட்காட்டியோ எல்லாம் கிடையாது.நடு நாயகமாக ஒரே ஒரு கட்டம் இருக்கும்.அதில் அன்று செய்ய நினைக்கும் வேலைகளை குறித்து வைத்து கொள்ள வேன்டும்.அவ்வளவு தான்.எத்தனை வேலைகளை முடிக்க வேண்டுமொ அவற்றை குறித்து வைத்து கொள்ளலாம்.

ஒவ்வொரு வேலையையும் டைப் செய்த பின் ‘சேர்க்க’ என அருகே உள்ள பகுதியை கிளிக் செய்தால் பொதும் புதிய வேலைகள் சேமிக்கப்பட்டுவிடும்.

எப்போது தேவையோ இந்த பட்டியலை பார்த்து செய்ய வேண்டிய வேலையை நினைவு படுத்தி கொள்ளலாம்.வேலையை செய்து முடித்து விட்டால் அதில் கிளிக் செய்தால் அந்த வேலை செய்து முடித்த பட்டியலில் சேர்ந்துவிடும்.

இதை பார்த்தே எந்த எந்த வேலைகளை செய்து முடித்துள்ளோம் என்று தெரிந்து கொள்ளலாம்.தேவைப்பட்டால் இமெயில் மூலம் தினசரியோ வாரம் ஒருமுறையோ மாதம் ஒரு முறையோ பணிகளுக்கான நினைவூட்டலை பெறலாம்.

இப்படியாக எல்லாவற்றையும் ஒரே இடத்தில் இருந்து திறம்பட நிர்வகித்து கொள்ளலாம்.திட்டமிடல் தேவையில்லை என நினைத்தால் இஅந்த சேவையின் கணக்கை முடித்து கொள்வதும் மிகவும் சுலபமானது.

இணையதள முகவரி;http://tosimplydo.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “எளிதாக திட்டமிட உதவும் இணையதளம்.

  1. பயனுள்ள தளம், நன்றி நன்பரே..

    Reply

Leave a Comment

Your email address will not be published.