என்ன வாங்கலாம்;ஆலோசனை சொல்லும் இணையதளம்.

வாட் கேன் யூ பை இணையதளத்தை கொஞ்சம் ஜாலியான ஆலோசனை தளம் என்று சொல்லலாம்.

இந்த தளம் ஆலோசனை வழங்குவது என்ன பொருட்களை வாங்கலாம் என்னும் கேள்விக்கான பதிலை தான்.இல்லை பதில்களை!

சில நேரங்களில் எந்த பொருட்களை வாங்குவது என்ற குழப்பம் ஏர்படும் அல்லவா?இது போன்ற நேரங்களில் ஆலோசனை சொல்லும் ஷாப்பிங் தளங்கள் இருக்கின்றன.பொருட்களின் விலை,பல்வேறு சிறப்பமசங்கள் உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்து இணையவாசிகளின் தேவைக்கேற்ற பரிந்துரைகளை இந்த வகை தளங்கள் வழங்குகின்றன.

ஆனால் இவை எல்லாம் கொஞ்சம் சிரியசானவை.அதாவது உண்மைலேயே ஒரு பொருளை வாங்க விரும்பும் போது எந்த நிறுவனத்தின் பொருளை வாங்குவது என்று தெரியாமல் தவிக்கும் போது இந்த தளங்கள் உதவுகின்றன.

ஆனால் வாட் கேன் யூ பை இணையதளம் இவ்வாறு இல்லை.இந்த தளத்தில் நீங்கள் பொதுவாக குறிப்பிட்ட தொகைக்கு (டாலர்களுக்கு) என்ன வாங்கலாம் என்று கேட்கலாம்.இதற்கான தேடியந்திர கட்டம் போல உள்ள பகுதியில் உங்கள் மனதில் உள்ள தொகையை மட்டும் குறிப்பிட்டால் போதும்,அந்த தொகைக்கு என்ன பொருட்களை எல்லாம் வாங்கலாம் என்று இந்த தளம் பரிந்துரை செய்கிறது.

இந்த பரிந்துரைகள் உண்மையிலேயே சுவாரஸ்யமாக இருக்கின்றன.குறிப்பிட்ட டாலர்களில் என்ன எல்லாம் வாங்கலாம் என்று முன்வைக்கப்படும் பரிந்துரைகள் பலவிதமானதாக இருக்கின்றன.அவை வாங்ககூடிய பொருட்களாக மட்டும் இல்லாமல் செய்யக்கூடிய செய்ல்களாகவும் இருக்கின்றன.சில சுவாரஸ்யமானவை.சில பயனுள்ளவை.சில விளையாட்டானவை.

உதாரணத்திற்கு 3 டாலர்களுக்கு என்ன வாங்கலாம் என்று கேட்டால் முதல் பதிலாக 3 நாளிதழ்களை வாங்கி நண்பர்களுக்கு தொப்பி செய்து பரிசளியுங்கள் என்று சொல்கிறது.

அடுத்த பதில் 3 மரக்கன்றுகளை நடுங்கள் என்று சொல்லி அதற்கான இணையதள முகவரியையும் தருகிறது.

நீர்குமுழி பாட்டிலை வாங்கி கொண்டு நண்பர்களை அழைத்து கொண்டு பூங்காவிறகு சென்று சிறுவனை போல விளையாடி மகிழுங்கள் என்பது மூன்றாவது பரிந்துரை.

ஐஸ்லாந்தின் நாணயமான கூரோனாவில் 347 குரோனாவிற்கு மாற்றி கொள்ளுங்கள் மற்றும் ஹாங்காங்கில் 0.0004 சதுர அடி நிலத்தை வாங்கி கொள்ளுங்கள் என்னும் அடுத்த இரண்டு பரிந்திரைகள் சுவாரஸ்யமாக இருப்பதோடு புதிய தகவல்களை தெரிவிப்பதாகவும் இருக்கின்றன.

ஆக மூன்று டாலருக்கு வாங்க கூடிய பொருட்களை பட்டியலிடமால் மூன்று டாலரில் சாதியமாக கூடிய விஷயங்களை முன் வைப்பது தான் இந்த தளத்தின் சுவாரஸ்யமே.

இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த பட்டியலை பார்த்தவுடன் தேவை என்றால் இன்னொரு பட்டியல் தேவை என்று சொல்லலாம்.அப்போது 3 டாலருக்கு இந்தியாவில் சினிமா டிக்கெட் வாங்கலாம்,வியட்னாம் நாணயத்தில் 58824ம் டாங்குகள் பெறலாம் ,ஏழைகளுக்கு கொடுத்து விடலாம் என்பது உட்பட புதிய பரிந்துரைகள் வந்து நிறகின்றன.

மீண்டும் கிளிக் செய்தால் மற்றொரு பட்டியல் வருகிறது.

திகையை 5 டாலர் என்று மாற்றிப்பார்த்தால் ஐப்போனுக்கான செயலிகள் 5 வாங்கலாம்,நியூயார்க நகரில் 0.00008 சதுர அடி நிலம் வாங்கலாம்,இந்தொநேசிய நானயத்தில் எவ்வளவு பெறலாம் போன்ற பரிந்துரைகள் அளிக்கப்படுகின்றன.

இதெல்லாம் தேவையா என்று தோன்றலாம்.ஆனால் பலருக்கு இவை சுவாரஸ்யம் அளிக்கலாம்.ஒருவிதத்தில் பார்க்கப்போனால் நுகர்வு கலாச்சாரம் மிதான நகைச்சுவையான விமர்சனமாக கூட இதனை கருதலாம்.எல்லாவற்றையுமே பணத்தையும் அதற்கான மதிப்பையும் கொண்டு தான் பார்க்க வேண்டுமா என்ன?

குறிப்பிட்ட தொகைக்கு என்ன என்ன பரிந்துரைகள் வருகின்ற என்று பார்த்துவிட்டு அதனிபிறகு மனதில் நினைக்கும் பல்வேறு தொகைகளுக்கு என்ன எல்லாம் பரிந்துரை வருகின்றன என்று அலசிப்பார்க்கலாம்.

வாழ்கையில் எல்லாமே பயனுள்ளதாக தான் இருக்க வேண்டுமா என்ற எண்ணத்தையும் இந்த தளம் ஏற்படுத்தக்கூடும்.சும்மா ஜாலியாக செய்யக்கூடிய விஷயங்கள் வாழ்க்கையில் இல்லைய என்ன?அப்படி நினைத்தால் இந்த தளம் மனதை லேசாக்கிவிடலாம்.

இணையவாசிகள் தங்கள் பங்கிறகான யொசனைகளையும் இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.

இணையதள முகவரி;http://whatcanyoubuy.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *