பயனில்லாத இணையதளங்களை பார்க்க ஒரு இணையதளம்.

இணையதளங்கள் என்றதும் பொதுவாக பயனுள்ள இணையதளங்களையே நினைக்கத்தோன்றும்.அதற்கேற்ப கோடிக்கணக்கான இணையதளங்களில் இருந்து பயன் மிகுந்த நல் முத்துக்களையும் மாணிக்கங்களையும் தேடி பட்டியலிடும் இணைய சேவைகளும் பல இருக்கின்றன.

இப்படி பரிந்துரைக்கப்படாத இணையதளங்களை கண்டு கொள்ளாமலே விட்டு விடலாம்.அவை பெரும்பாலும் விளம்பரம் மூலம் வருவாய் ஈட்டும் நோக்கத்தோடு தகவல்கள் என்ற போர்வையில் ஏதாவது குப்பைகளின் தொகுப்பாக இருக்கும்.

இந்த வகை தளங்களை பயனில்லாத தளங்கள் என்று குறிப்பிடலாம் என்றாலும் பயனில்லாத தளங்களிலேயே இன்னொரு சுவாரஸ்யமான வகை இருக்கின்றன.

இவை பயனில்லாத தளங்கள் என்ற போதிலும் பார்க்க தேவையில்லாத தளங்கள் என்று புறக்கணித்து விட முடியாதவை.எந்த வித பயனை அளிக்ககூடியதாக இல்லாமால் இருந்தாலும் இவை ஏதோ ஒரு சின்ன நோக்கம் அல்லது விஷயத்தை அடிப்படையாக கொண்டிருக்கும்.

அந்த நோக்கமே இந்த தளங்களை சுவாரஸ்யம் மிக்கதாக மாற்றிவிடுகிறது.

இந்த வகை தளங்களுக்கு அழகாக உதாரணம் தேவை என்றால் டக்ஸார்திபெஸ்ட் என்று ஒரு தளம் இருக்கிறது.இந்த தளத்தில் நுழைந்தால் அழகான மஞ்சள் நிற வாத்துகள் ஒரு கோடு போல வரிசையாக தோன்றுகின்றன.வாத்துக்கள் வரிசையின் சித்திரம் லேசாக மாறிக்கொண்டே இருக்கும்.அவ்வளவு தான் இந்த தளம்.

இதே போல கேட் பவுன்ஸ் என்றொரு தளம் இருக்கிறது.பெயருக்கேறப இந்த தளத்தில் பல வித பூனைகள் குத்திப்பதை பார்த்து கொண்டே இருக்கலாம்.அவ்வளவு தான்!

மேலும் கார்ட்டூன் நாயகனான ஹீமேன் சிரிப்பை காண்பதற்கென்றே ஒரு இணையதளம் இருக்கிறது.ஹேயாயாயாயா என்று விநோதாமாக அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

பாலிங்பாலிங் என்று இன்னொரு தளம் இருக்கிறது.இதில் நுழைந்தால் திரையில் பல வண்ண வடிவங்கள் சரிந்து விழுந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டே இருக்கலாம்.வண்ணங்கள் மாறி வடிவங்கள் மாறி அவை விழுந்து கொண்டே இருப்பது லேசான மயக்கத்தை தரலாம் என்றாலும் சுவாரஸ்யமான அனுபவம் தான்.

இப்படி குறிப்பிட்ட எந்த பலனும் இல்லாத ஆனாலும் சுவாரஸ்யமாக விளங்ககூடிய இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன.

இந்த தளங்களை எல்லாம் பட்டியலிடுவதற்கு என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.அந்த தளத்தின் பெயரே பனில்லாத வலை என்பது தான்.ஆங்கிலத்தில் தி யூஸ்லஸ் வெப்.

இந்த தளத்தின் உள்ளடக்கமும் எளிமையாக சுவாரஸ்யமாகவே இருக்கிறது.இதில் எந்த பட்டியலும் கிடையாது.முகப்பு பக்கத்தில் ‘தயவு செய்து பயனில்லாத தளத்திற்கு அழைத்து செல்லவும்’ என்ற கோரிக்கை வாசகம் வரவேற்கிறது.அந்த வாசகத்தில் கிளிக் செய்தால் ஏதாவது ஒரு பயனில்லாத தளத்திற்கு அழைத்து செல்கிறது.

மாறி மாறி கிளிக் செய்து கொண்டிருந்தால் வரிசையாக பயனில்லாத தளங்களாக பார்த்து கொண்டே இருக்கலாம்.

பயனில்லாத தளங்களை இணையவாசிகளும் சமர்பிக்கலாம்.

டிம் ஹால்மன் என்பவர் இந்த தளத்தை உருவாக்கியுள்ளார்.

இணையதள முகவரி;http://www.theuselessweb.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பயனில்லாத இணையதளங்களை பார்க்க ஒரு இணையதளம்.

    1. cybersimman

  1. அன்பின் சிம்மன் – டைம் பாஸிங் – அருமையான தளம் – சென்று பார்த்து இரசித்து மகிழ்ந்தேன் – எப்பை இவ்வளவு தளங்களைத் தேடிப் பிடித்து பதிவிடுகிறீர்கள் – திறமை பொறுமை அனைத்துமே பாராட்டுக்குரிய்து – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      அன்பு நண்பருக்கு உற்சாகம் தரும் வார்த்தைகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

      Reply

Leave a Comment to cybersimman Cancel Reply

Your email address will not be published.