பாஸ்வேர்டு குணாதியங்கள்.1

pass

ஒரு நல்ல பாஸ்வேர்டு எப்படி இருக்க வேண்டும்? நல்ல பாஸ்வேர்டு என்றால் பாதுகாப்பானது.கம்ப்யூட்டர் தாக்காளர்களுக்கு தண்ணி காட்டி வெளியேற்றக்கூடியது.

பாதுகாப்பான,எவராலும் யூகித்து உடைக்க முடியாத பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ள சில அடிப்படையான விதிகள் இருக்கின்றன.

முதலில்,அந்த நீங்கள் பாஸ்வேர்டாக தேர்வு செய்யும் கடவுச்சொல் அகராதிகளில் கண்டெடுக்க கூடியதாக‌ இருக்க கூடாது.

இரண்டாதுவது விதி பரவலாக பலரும் அறிந்திருக்க கூடியது. பாஸ்வேர்டில் எண்கள் மற்றும் சிறப்பு எழுத்துக்கள் இருக்க வேண்டும்.

மூன்றாவது விதியும் இரண்டாவது விதியை போன்றது தான்.பாஸ்வேர்டில் லோவர் கேஸ் மற்றும் அப்பர் கேஸ் எழுத்துகளை பயன்படுத்துங்கள்.

நான்காவதாக பாஸ்வேர்டுக்கு தசாவதார தன்மை இருக்க வேன்டும்.அதாவடு குறைந்தது பத்து எழுத்துக்களாவது இருக்க வேன்டும்.

இப்படி உருவாக்கப்பட்ட பாஸ்வேர்ட் எளிதில் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேன்டும்.அதாவது உங்கள் தனிப்பட்ட விவரங்களான பெயர் ,பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றை கொண்டு எழுத்துக்களை மாற்றி போட்டு பார்த்தால் வரக்கூடியதாக பாஸ்வேர்டு இருக்க கூடாது.பெருமபாலும் பலரும் இப்படி தனிப்பட்ட விவரங்களை கொண்டே பாஸ்வேர்டு அமைக்கின்றனர். இவை நினைவு படுத்தலில் உதவும் தான்.ஆனால் தாக்காளர்கள் இதே வழியில் உங்கள் பாஸ்வேர்டை யூகித்து விடலாம்.எச்சரிக்கை.

பி.கு: பாதுகாப்பான பாஸ்வேர்டுக்கு வழிகாட்ட இணையத்தில் பல குறிப்புகள் உள்ளன.அவற்றை எல்லாம் தொடர்ந்து எழுதலாம் என்னும் விருப்பத்தின் முதல் படியே இந்த பதிவு: பாச்வேர்டை பாதுகாக்க தொடர்ந்து வாருங்கள்...

One thought on “பாஸ்வேர்டு குணாதியங்கள்.1”

  1. அன்பின் சிம்மன் – அரிய தகவல் – இன்னும் கடவுச் சொல்லைப் பற்றிய பல தகவல்கள் தொடர்ந்து வரப் போகிறது என்பது மகிழ்ச்சியினைத் தருகிறது.- நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *