குவோரா இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி?

குவோரா இணையதளம் தொடர்பாக பலரும் தவறவிடும் முக்கிய அம்சம் ஒன்று இருக்கிறது. குவோரா குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சமாகவும் அது அமைகிறது. அதோடு, குவோராவின் ஆதார அம்சங்களிலும் ஒன்று.

அழையா விருந்தாளிகளை கொண்டு வந்து நிறுத்தும் தன்மை தான் அது!

அதாவது, வரவேற்க கூடிய அழையா விருந்தாளிகள்!

பொதுவாக அழையா விருந்தாளிகள் என்பதை எதிர்மறை அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறோம் என்றாலும், சில நேரங்களில் அழையா விருந்தாளிகள், கும்பிட போன தெய்வமாகவும் இருக்கலாம். குவோராவில் இதை பல தருணங்களில் உணரலாம்.

குவோராவை பொருத்தவரை கும்பிட போன தெய்வம் என்பது, பயனாளிகள் எதிர்பார்க்கும் அல்லது எதிர்பார்க்காத துறை சார் வல்லுனர்கள் என்று புரிந்து கொள்ளலாம். அல்லது நேரடி தொடர்பு உடையவர்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இந்த இடத்தில் குவோரா பற்றி சிறு அறிமுகம். குவோரா, பலரும் அறிந்திருக்க கூடியது போல கேள்வி பதில் சேவை. இணையத்தில் எண்ணற்ற கேள்வி பதில் இணையதளங்கள் உண்டு என்றாலும் குவோரா அளவுக்கு வெற்றி பெற்ற தளத்தை காண்பது அரிது.

குவோராவின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பல நேரங்களில், அந்த கேள்வியுடன் நேரடியாக தொடர்பு உடையவர்களே பதில் அளிக்கும் வாய்ப்பு இருப்பது தான். இதற்கான காரணம், குவோரா கேள்வி பதிலுக்கான இணைய சமூகமாக உருவாகி இருப்பதே.

அடிப்படையில் குவோராவும், விக்கிபீடியா போன்ற பயனாளி பங்கேற்பு தளம் தான். குவோராவில் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், அந்த கேள்விக்கு யார் வேண்டுமானாலும் பதில் அளிக்கலாம். எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்காது என்றாலும், எல்லோருக்கும் ஏதேனும் ஒன்றேனும் தெரிந்திருக்கும் என்பதால், அவரவர்கள் தங்களுக்கு தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, கூட்டு அறிவின் தொகுப்பாக அமையும். குவோரா இத்தகைய இணைய சமூகமாக விளங்குகிறது.

கேள்விகள், துணை கேள்விகள், தொடர்புடைய கேள்விகள் போன்ற அம்சங்களை கொண்ட குவோராவில், ஆர்வம் உள்ள எவரும் பதில் அளிக்கலாம். ஆனால், குவோராவின் துடிப்பான சமூக உணர்வு காரணமாக, பல நேரங்களில் கேட்கப்படும் கேள்வியின் மையமாக இருப்பவரே அதற்கு பதில் அளிக்கலாம்.

உதாரணத்திற்கு ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடர்பான கேள்வி எனில், அந்த ஸ்டார்ட் அப்பை உருவாக்கியவரே பதில் அளிக்கலாம். ஆக, குவோரா பதில்கள் நேரடியானதாக அமையலாம். குவோரா பதில்களின் இத்தகைய பயனுள்ள தன்மை காரணமாக, பயனாளிகள் இந்த தளத்தை நாடி வருவதோடு வல்லுனர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் அனுபவத்தையும், அறிவையும் பகிர்ந்து கொள்ள குவோராவில் பதில் அளிப்பதுண்டு.

இந்த தன்மை காரணமாகவே, பலரும் குவோராவை விளம்பர நோக்கிலும் பயன்படுத்துகின்றனர். அதாவது தங்களது துறைசார் அனுபவத்தை வெளிப்படுத்திக்கொள்ள குவோரா கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்கின்றனர். குவோராவை மார்க்கெட்டிங் நோக்கில் பயன்படுத்திக்கொள்வதற்கான ஒரு வழியாகவும் இது முன்வைக்கப்படுகிறது.

ஆனால், குவோராவில் பதில் அளிக்கும் போது விளம்பர நெடி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

நம்மூரில் சமூக ஊடக மார்க்கெட்டிங் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள், டிவிட்டர், பேஸ்புக் என்று தான் ஜல்லியடித்து கொண்டிருக்கின்றனரேத்தவிர இன்னமும் குவோராவுக்கு எல்லாம் வரவில்லை. ஒருவிதத்தில் இது நல்லது தான்.

நீங்களும் கூட, குவோராவை உங்கள் நிபுணத்துவத்தையும், பட்டறிவையும் வெளிப்படுத்திக்கொள்ள பயன்படுத்தலாம்.

நிற்க, இந்த பதிவை எழுத துவங்கியதற்கான முக்கிய தகவலை இன்னமும் சுட்டிக்காட்டவில்லை. குவோராவில், நேரடி தொடர்புடையவர்களின் பதிலை பெறலாம் என்பதற்கான அருமையான உதாரணத்தை அண்மையில் எதிர்கொள்ள நேர்ந்தது.

இன்போகிராபிக்கை உருவாக்குவதற்கான இணைய சாதனங்கள் என்ன? எனும் கேள்விக்கு, விஸ்மி (Visme ) நிறுவனர் விரிவாக பதில் அளித்திருந்தார். இன்போகிராபிக் எனும் தகவல் வரைபடங்களை உருவாக்குவதற்கான வழிகளை குறிப்பிட்டிருந்தவர், இது தொடர்பாக விஸ்மி உருவாக்கியிருந்த ஒப்பீடு இன்போகிராபிக்கை குறிப்பிட்டிருந்தார். – https://www.quora.com/What-are-the-softwares-used-to-make-infographics-like-visual-capitalist-infographics

ஆனால், மறக்காமல் தான் விஸ்மியின் நிறுவனர் எனும் தகவலையும் தெரிவித்திருந்தார். விஸ்மி இன்போகிராபிக்கை உருவாக்க பயன்படும் முக்கிய சேவைகளில் ஒன்று என்பதால், பயனாளிகளுக்கும் நல்ல தகவலாக அமைவதோடு, அவருக்கும் இயல்பான விளம்பரம்.

குவோரா தளத்தை இப்படி தான் பயன்படுத்த வேண்டும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.