கூகுலின் கொள்ளு தாத்தா!: ஒரு ஆச்சர்ய மனிதரின் கதை.

alan

ஆல‌ன் எம்டேஜ் ஆச்சர்யமான மனிதர்.அவரது இணைய தளமே அதற்கு உதாரணம். அந்த இணையதளம் அழகான வடிவமைப்புக்கு சரியான உதாரனம் என்பதை விட்டுத்தள்ளுங்கள்.அழகான புகைப்படத்தோடு வரவேற்கும் அந்த தளம் அவரைப்பற்றி சொல்லாமல் சொல்லும் செய்திகள் அதிகம்.
அந்த தளத்தை பார்த்ததும் எம்டேஜை ஒரு புகைப்பட கலைஞர் என்று நினைக்கத்தோன்றும்.முகப்பு பக்கமே கிட்டத்தட்ட ஒரு புகைப்படமாக தான இருக்கிறது.ஆனால் எம்டேஜ் புகைப்ப கலைஞர் அல்ல.அதில் ஆர்வம் மிக்கவர்.அவரது மற்றொரு ஆர்வம் பயணிப்ப‌து.தனது பயணக்களின் பதிவை தான் இந்த தளத்தில் புகைப்படங்களாக பகிர்ந்து கொள்கிறார்.
அழகான இணையதளம்.
அவரது ஒவ்வொரு புகைப்படமும் மெய்மறக்க வைக்கிறது.ஆனால் அவர் புகைப்படங்கள் மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள முடிவு செய்தது தான் ஆச்சர்யமானது.அதை விட ஆச்சர்யம்,இந்த தளத்தில் அவர் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் விதம்:’25 ஆண்டு காலமாக இணையத்தில் செயல்பட்டு வந்தாலும் என்னைப்பற்றி புதிதாக சொல்ல எதுவும் இல்லாமல் சொந்த இணையதளத்தை அமைக்க வேண்டியதில்லை என்று நினைத்து கொண்டிருந்ததேன்’ அவர் குறிப்பிடுகிறார்.பயணம் மற்றும் புகைப்படங்களை புதிய விஷயங்களாக கண்டு கொண்டதால் இந்த தளத்தை அமைத்திருப்பதாக குறிப்பிடும் எம்டேஜ் தான் பயணம் செய்ய தேர்வு செய்யும் இடங்கள் மற்றும் எடுக்கும் படங்கள் மூலம் தன்னைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ளலாம் என்கிறார்.
இவ்வளவு தான் அவரது சுய அறிமுகம்!.
இதை விட ஒருவர் தன்னடக்கமாக தன்னை வெளிப்படுத்தி கொள்ள முடியாது.இப்போது நீங்கள் பொறுமை இழந்து போய், யார் இந்த எம்டேஜ் ?அவர் அப்படி என்ன செய்து விட்டார்? எதற்கு இத்தனை பில்ட் அப் என்று அலுத்துக்கொள்ளாம்.alan1
அடக்கமான மனிதர்!.
எம்டேஜின் இணைய சாதனையை ஒற்றை வரியில் சொல்லி விடலாம்.ஆனால் அடைமொழிகளை விரும்பாத மனிதராக இருப்பதால் அவரது சாதனையை சொல்லாமல் அதை அவர் சொல்லிக்கொள்ளமல் இருப்பதை பெரிதாக சொல்ல வேண்டியிருக்கிற‌து.
25 ஆண்டுகளாக இணையத்தில் செயல்பட்டு வருவதாக குறிப்பிடும் இடத்தில் அடைப்புக்குறியில் ஆர்ச்சி,ஐஈடிஎப்,ஐஎஸ்ஒசி ஆகியற்றை குறிப்பிட்டு மேலும் விவரங்களுக்கு விக்கிபீடியாவை பார்த்து கொள்ளுங்கள் என்று ஒதுங்கிகொள்கிறார்.ஆர்ச்சி என அவர்  குறிப்பிடுவது சாதாரணமான விஷயம் அல்ல. இந்த ஆர்ச்சி தான் கூகுலுக்கும் கூகுல் போன்ற தேடியந்திரங்களுக்கும் கொள்ளு தாத்தா!.அதாவது உலகின் முதல் தேடியந்திரம்.
முதல் தேடியந்திரம்!.
உலக தேடியந்திர வரலாறு ஆர்ச்சியில் இருந்து தான் துவங்குகிறது.எம்டேஜ் பிறந்தது கரிபியத்தீவுகளில் ஒன்றான பார்படாசில்.பின்னர் கன்டாவில் மேற்படிப்பு படித்தார். கம்ப்யூட்டர் அறிவியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற எம்டேஜ்,மாணவராக இருக்கும் போதே மான்ட்ரியேல் நகரில் உள்ள கம்ப்யூட்டர் அறிவியல் பள்ளியில் கம்ப்யூட்டர் நிர்வாகியாக பணியாற்றினார்.அப்போது தான் இணையத்தில் எப்டிபி கோப்பு வடிவில் இருக்கும் தகவல்களை தேடி எடுப்பதற்கான ஆர்ச்சி புரோகிராமை அவர் உருவாக்கினார்.நன்ராக நினைவில் கொள்ளுங்கள் ஆர்ச்சியை அவர் உருவாக்கியது 1989 ல்!. அப்போது கூகுலும் கிடையாது.தேடியந்திரம் என்ற கருத்தாக்கமும் கிடையாது. தேடியந்திரங்களை சாத்தியமாக்கும் வைய விரிவு வலையும் கிடையாது.
இணையத்தில் கோப்புகளை தேடி எடுக்க அவர் உருவாக்கிய வழியையே பின்னாளில் உதயமான அல்டாவிஸ்டா,ல
ைகோஸ் …கூகுல் போன்ற தேடியந்திரங்கள் பயன்படுத்தின. இன்று வரை தேடியந்திரங்கள் செயல்படும் அடிப்படை ஆர்ச்சியில் இருந்து மாறிவிடவில்லை.<br alan3/>காசு தூசு!.
ஆனால் என்ன, ஆர்ச்சிக்கான காப்புரிமையை அவர் பெறவில்லை. தேடல் என்பது பின்னாளில் இணையத்தை ஆளும் சக்தியாக இருக்கும் என்றோ, தேடல் கோடிகளை அள்ளித்தரும் வர்த்தகமாக உருவாகும் என்றோ அவர் அறிந்திருக்கவில்லை.எனவே உலகின் முதல் தேடியந்திரத்தை உருவாக்கியும் கூட தேடலால் இணையத்தில் புரளும் கோடிகளுக்கு அவர் அதிபதியாகிவிடவில்லை.
இருந்தும் அவரிடம் இது குறித்த முறையீடோ வருத்தமோ கிடையாது.நான் தான் தேடியந்திர பிரம்மா என்றெல்லாம் அவர் மார்தட்டிக்கொள்வதில்லை.என் கண்டுபிடிப்பை கோடிகளாக மாற்ற முடியாமல் போனதே என்று புலம்பியதும் இல்லை.இணைய தள அறிமுகத்தில் கூட ஆர்ச்சியில் பணியாற்றியிருக்கிறேன் என்று மட்டுமே கூறிக்கொள்கிறார்.பெரிய விஷ‌யம் தான் இல்லையா?
கவலையில்லா மனம்!.Google1998
உலகின் முதல் தேடியந்திரத்தை உருவாக்கியும் கூட அதன் பொருளாதார பலனை அனுபவிக்காமல் இருப்பதில் அவருக்கு வருத்தமே இல்லையா? ‘ நான் ஒரு சின்ன நிரலியை எழுதினேன்.அது பல கோடி வர்த்தக துறைக்கான விதயாக அமைந்த்து.இதன் மூலம் எனக்கு எந்த பணமும் கிடைக்கவில்லை. ஆனால் இதனால் ஒரு மாற்றமும் இல்லை’ என்று பேட்டி ஒன்றில் அவர் குறியிருக்கிறார்.’தாங்களே தேடலை மேற்கொள்ள வழிவகுக்கும் எளிமையான நிரலை நாங்கள் எழுதினோம்’ என்று அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளவர்,அந்த கால கட்டத்தில் இணையத்தில் யாரும் பணம் பற்றி நினைக்கவில்லை,எனவே நாங்கள் அதற்கு காப்புரிமை பெறவில்லை என்கிறார்.
 காப்புரிமை இருந்திருந்தால் பணமாக கொட்டியிருக்கும் என்பவர்,தற்போதைய தேடியதிரங்கள் பயன்படுத்தும் அதே யுக்தியை தான் ஆர்ச்சி பயன்படுத்தியது,அந்டஹ் வகியில் கூகுல்களுக்கு அது கொள்ளு தாத்தா என்று கூறியுள்ளார்.
இன்று தேடல் என்பது ஆண்டுக்கு 78,000 கோடி டாலர் புரளும் தொழிலாகி இருக்கிறது.இதில் ஒரு டாலர் கூட தனது கைக்கு வராதது குறித்து அவரிடம் துளியும் வருத்தம் இல்லை.
‘என்னை தேடியந்திரத்தின் தந்தை என்றெல்லாம் நினைத்து கொள்வதில்லை என்று கூறும் எம்டேஜ் எப்போதாவது ,மற்றவர்களிடம் பேசும் போது நான் யார் தெரியுமா, தேடியந்திரத்தை கண்டுபிடித்தவன் என்று தனக்குள்ளேயே கூறிக்கொள்வேன் என்கிறார். இப்படி அவர் சொல்லும் போது அவர் முகத்தில் புன்னகையை காணலாம்.

இப்போது சொல்லுங்கள் எம்டேஜ் இணையதளம் அவர் எத்தனை பெரிய மனிதர் என்று சொல்லாமல் சொல்கிறது தானே!.

எம்டேஜ் இணையதளம்;http://www.alanemtage.com/iowa/home/index.html

எல்டேஜ் நேர்க்கானல் காணொலி:http://www.huffingtonpost.com/2013/04/01/alan-emtage-search-engine_n_2994090.html

உலகின் முதல் தேடியந்திரம்: http://cybersimman.wordpress.com/2013/06/29/search-48/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுலின் கொள்ளு தாத்தா!: ஒரு ஆச்சர்ய மனிதரின் கதை.

  1. அன்பின் சிம்மன் – அழகான அருமையான பதிவு – ஆலன் எம்டேஜின் அழகான தளத்தினை அறிமுகப் படுத்தியது நன்று.. சென்று பார்த்தேன் – ஹோம் காட்டிய வண்ண வண்ணப் படங்கள் – ட்ராவெல் காட்டிய பிரமிக்க வைக்கும் பயணம் செய்த படங்கள் – போர்ட் ஃபோலியோ காட்டும் 62 அற்புதமான படங்கள் – மிகச் சிறிய பையோ – ந்ன்று நன்று – தேடியந்திரத்தைக் கண்டு பிடித்தும் காப்புரிமை பெறத் தோன்றாததினால் இன்று கோடிகளில் புழங்கும் வர்த்தகத்தின் பலனை அனுபவிக்க இயலவில்லை.

    சிம்மன் – எப்படித்தான் தேடித் தேடி இவ்வளவு அரிய பதிவுகளைத் தருகிறீர்களோ தெரியவில்லை. பாராட்டுகள் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      நன்றி நண்பரே. எல்லா தகவல்களும் இணைய தேடலில் கிடைப்பது தான்.என்ன செய்தியை தாண்டி பின்னணியை தேடிச்செல்ல வேண்டும்.

      அன்புடன் சிம்மன்

      Reply

Leave a Comment

Your email address will not be published.