ஒரு இளம் எழுத்தாளரின் இணையதளம்.

1b

தற்செயலாக கண்ணில் பட்டது அந்த இணையதளம்: புத்தன் பேஜ்ஸ்.காம்.இணையத்தில் உலாவும் போது இப்படி இடறி நிற்கும் இணையதளங்கள் கவனிக்க வைக்கும்.இந்த தளமும் அப்படி தான். ஒரு நல்ல இணையதளத்துக்கு என்று சில அம்சங்கள் இருக்கின்றன.முகப்பு பக்கம் எளிமையாக இருக்க வேண்டும்.ஆனால் அதன் உள்ள‌டக்கம் ப‌ளிச்சென கவனத்தை ஈர்க்கும் வகையில் நேர்த்தியாக இருக்க வேண்டும்.முதல் பார்வையிலேயே அந்த தளத்தில் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்ற புரிதலை ஏற்படுத்தி விட வேண்டும். இந்த புரிதல் தளத்தினுள் மேற்கொண்டு பயனிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும். புத்தன் பேஜ்ஸ் இப்படி தான் இருக்கிறது. ஒரு நல்ல மனிதரை பார்த்ததும் பேசமால் செல்ல முடியாதது போல இந்த தளமும் உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறது. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சுந்தர்புத்தனின் இணைய பக்கம் இது.என்னனைப்பற்றி பகுதியில் தன்னைப்பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்கிறார்.எனக்கு ஊர் தான் முக்கியமாக இருந்தது என துவங்கும் அந்த அறிமுகத்தில் தனது ஊர் பற்றி தான் அதிகம் சொல்கிறார். இன்னமும் அவ்ருக்குள்ளேயே இருக்கும் ஊரை விட்டு சென்னைக்கு பத்திரிகையாளனாக வந்த அனுபவத்தின் விவரிப்பில் தன்முனைப்பின் சாயல் கூட இல்லை. எல்லாம் தகவலாக தான் இருக்கின்றது. பத்திரிகையாளராக இருந்து கொண்டே புத்தன் புத்தகங்களை எழுதியிருக்கிறார்.ஆனால் எழுதிய புத்தகங்கள் பற்றி பக்கம் பக்கமாக பெருமை பேசும் குறிப்புகள் இல்லை. புத்தகங்களின் முக‌ப்பு பக்கம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.இவையும் தக‌வலுக்காக தான். ஓவியர்கள் பற்றியும் கிராமம் பற்றியும் அதிகம் எழுதியிருக்கிறார். புத்தன் எழுதிய சமீபத்திய  பதிவுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.சென்னை வந்த போது தங்கிய மேன்ஷன் முதல் பாலுமகேந்திராவிடம் கட்டுரை வாங்கிய அனுபவம் ,அதிகாலை பொழுது என மனதும் இயற்கையும் சார்ந்த விஷ‌யங்களை நண்பர்களிடம் பேசுவது போல எழுதியிருக்கிறார். எளிமையான நடை. ஆனால் செறிவாக இருக்கிறது. சிலர் எழுத்துக்களை படிக்கும் போது இன்னும் எழுத மாட்டார்களா என இருக்கும். புத்தன் பதிவுகள் அந்த எண்ணத்தை தான் ஏற்படுத்துகின்றன. மாநகர‌த்தில் திரும்பிய திசையெல்லாம் என கிராமத்தையே முதுகில் சுமந்து கொண்டு அலைகிறேன் என கூறும் புத்தன் எழுதுவது தான் என் நம்பிக்கை என்கிறார்.அந்த நம்பிக்கை அவரது இணையதளத்தில் வெளிப்படுகிற‌து. நான் இணையதளங்களின் ரசிகன்.எழுத்தாளர்களுக்கு என்று சொந்தமாக இணையதளம் வேண்டும் என்பது எனது நம்பிக்கை. எழுத்தாளர்கள் இணையதளம் மூலம் வாசக்ர்களை நேரடியாக சென்ற‌டையலாம்.புதிய வாசகர்களை தேடிக்கொள்ளலாம். எழுத்தாளர்களின் செயல்பாடு பற்றியும் புத்தகங்கள் பற்றியும் தகவல் தரும் நல்ல தளம் போல இணைய யுகத்தில் வாசகனுக்கு விருந்து வேறில்லை. எழுத்தாளன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதமாகவும் அவர்கள் சொந்த்த இணையதளத்தை கருதலாம். பல எழுத்தாளர்களின் தளங்களை கண்டு நான் வியந்திருக்கிறேன். புத்தனின் தளமும் அதன் எளிமையால் கவர்கிறது.அதே நேரத்தில் ஒரு எழுத்தாளனாக அவரை சரியாக அறிமுகம் செய்கிறது. எழுத்தாளர்களுக்கான நல்ல இணையதளத்திற்கான அழகான உதாரணம் இந்த தளம்.வடிவமைத்த பர்பில்ரெயின் நிறுவனம் பாராட்டுக்குறியது. இணையதள முகவரி: http://www.buddhanpages.com/ ( பி.கு: சுந்தர புத்தன் எனது நண்பர். ஆனால் இந்த பதிவை எழுத அது காரணம் அல்ல. நட்பை மீறி இந்த தளத்தைன் அமைப்பும் உள்ளடக்கமுமே எழுத தூண்டியது. அன்புடன் சிம்மன்

]] >

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

9 Comments on “ஒரு இளம் எழுத்தாளரின் இணையதளம்.

  1. gpm palanisami

    1. cybersimman

  2. அன்பின் சிம்மன் – அரிய தகவல் – பகிர்வினிற்கு நன்றி – சுந்தர புத்த்னின் தளத்திற்க்குச் சென்று பார்த்தேன் – படித்தேன் – மகிழ்ந்தேன் –

    Reply
    1. cybersimman

      நன்றி நண்பரே.

      அன்புடன் சிம்மன்

      Reply
      1. அன்பின் சிம்மன் – மேலே உள்ள மறுமொழி பாதியில் “பின்னூட்டத்தை அளி” தட்டப்பட்டதால் பாதி மறுமொழி பிரசுரம் ஆகி விட்டது

        மறுபடி சுந்தர் புத்தனை அனைத்துப் பக்கங்களையும் படித்து மகிழ்ந்து நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட தொரு மறுமொழியும் இட்டு – பிழை திருத்தம் செய்து கொண்டிருந்த வேளையில் கணினி தகறாறு செய்து அம்மறுமொழியினைக் காணாமல் போகச் செயது விட்டது. .

        ஒரு மணி நேர உழைப்பு பாழாகி விட்டது – சுந்தர் புத்தனின் அனைத்துப் பக்கங்களையும் படித்து7 மகிழ்ந்து மறுமொழி இட்டு – பிரசுரிக்க இயலாது போய் விட்டது – என்ன செய்வது..

        மறுபடி முயல்கிறேன் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

        Reply
        1. cybersimman

          நன்றி நண்பரே.

          அன்புடன் சிம்மன்

          Reply
        2. cybersimman

          என்னவென்று சொல்வது நண்ப‌ரே. இதற்கு நான் டைப் செய்த பதிலும் பாதியில் டெலிட் ஆகிவிட்டது.உண்மையில்; இது சங்கடமானது தான்.இணையத்தில் தமிழில் டைப் செய்வதில் உள்ள சங்கடம் இது. இந்த சங்கம் நீங்க நல்ல தீர்வு தேவை.

          புத்தனின் இணையதளாம் தங்களூக்கு பிரித்திருப்பது ம‌கிழ்ச்சி.மீண்டும் முயன்றால் எழுதுங்கள்.

          அன்புடன் சிம்மன்

          Reply
  3. நன்றி. உங்கள் பல நல்ல பதிவை டிவிட்டரில் ஷேர் செய்ய இயலவில்லை. அதற்குரிய டிவிட்டர் பட்டன் இல்லை

    Reply
    1. cybersimman

      விரைவில் பொறுத்துகிறேன்.

      Reply

Leave a Comment to cybersimman Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *