Tag Archives: writer

ஒரு இளம் எழுத்தாளரின் இணையதளம்.

1b

தற்செயலாக கண்ணில் பட்டது அந்த இணையதளம்: புத்தன் பேஜ்ஸ்.காம்.இணையத்தில் உலாவும் போது இப்படி இடறி நிற்கும் இணையதளங்கள் கவனிக்க வைக்கும்.இந்த தளமும் அப்படி தான். ஒரு நல்ல இணையதளத்துக்கு என்று சில அம்சங்கள் இருக்கின்றன.முகப்பு பக்கம் எளிமையாக இருக்க வேண்டும்.ஆனால் அதன் உள்ள‌டக்கம் ப‌ளிச்சென கவனத்தை ஈர்க்கும் வகையில் நேர்த்தியாக இருக்க வேண்டும்.முதல் பார்வையிலேயே அந்த தளத்தில் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்ற புரிதலை ஏற்படுத்தி விட வேண்டும். இந்த புரிதல் தளத்தினுள் மேற்கொண்டு பயனிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும். புத்தன் பேஜ்ஸ் இப்படி தான் இருக்கிறது. ஒரு நல்ல மனிதரை பார்த்ததும் பேசமால் செல்ல முடியாதது போல இந்த தளமும் உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறது. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சுந்தர்புத்தனின் இணைய பக்கம் இது.என்னனைப்பற்றி பகுதியில் தன்னைப்பற்றி சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்கிறார்.எனக்கு ஊர் தான் முக்கியமாக இருந்தது என துவங்கும் அந்த அறிமுகத்தில் தனது ஊர் பற்றி தான் அதிகம் சொல்கிறார். இன்னமும் அவ்ருக்குள்ளேயே இருக்கும் ஊரை விட்டு சென்னைக்கு பத்திரிகையாளனாக வந்த அனுபவத்தின் விவரிப்பில் தன்முனைப்பின் சாயல் கூட இல்லை. எல்லாம் தகவலாக தான் இருக்கின்றது. பத்திரிகையாளராக இருந்து கொண்டே புத்தன் புத்தகங்களை எழுதியிருக்கிறார்.ஆனால் எழுதிய புத்தகங்கள் பற்றி பக்கம் பக்கமாக பெருமை பேசும் குறிப்புகள் இல்லை. புத்தகங்களின் முக‌ப்பு பக்கம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன.இவையும் தக‌வலுக்காக தான். ஓவியர்கள் பற்றியும் கிராமம் பற்றியும் அதிகம் எழுதியிருக்கிறார். புத்தன் எழுதிய சமீபத்திய  பதிவுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன.சென்னை வந்த போது தங்கிய மேன்ஷன் முதல் பாலுமகேந்திராவிடம் கட்டுரை வாங்கிய அனுபவம் ,அதிகாலை பொழுது என மனதும் இயற்கையும் சார்ந்த விஷ‌யங்களை நண்பர்களிடம் பேசுவது போல எழுதியிருக்கிறார். எளிமையான நடை. ஆனால் செறிவாக இருக்கிறது. சிலர் எழுத்துக்களை படிக்கும் போது இன்னும் எழுத மாட்டார்களா என இருக்கும். புத்தன் பதிவுகள் அந்த எண்ணத்தை தான் ஏற்படுத்துகின்றன. மாநகர‌த்தில் திரும்பிய திசையெல்லாம் என கிராமத்தையே முதுகில் சுமந்து கொண்டு அலைகிறேன் என கூறும் புத்தன் எழுதுவது தான் என் நம்பிக்கை என்கிறார்.அந்த நம்பிக்கை அவரது இணையதளத்தில் வெளிப்படுகிற‌து. நான் இணையதளங்களின் ரசிகன்.எழுத்தாளர்களுக்கு என்று சொந்தமாக இணையதளம் வேண்டும் என்பது எனது நம்பிக்கை. எழுத்தாளர்கள் இணையதளம் மூலம் வாசக்ர்களை நேரடியாக சென்ற‌டையலாம்.புதிய வாசகர்களை தேடிக்கொள்ளலாம். எழுத்தாளர்களின் செயல்பாடு பற்றியும் புத்தகங்கள் பற்றியும் தகவல் தரும் நல்ல தளம் போல இணைய யுகத்தில் வாசகனுக்கு விருந்து வேறில்லை. எழுத்தாளன் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதமாகவும் அவர்கள் சொந்த்த இணையதளத்தை கருதலாம். பல எழுத்தாளர்களின் தளங்களை கண்டு நான் வியந்திருக்கிறேன். புத்தனின் தளமும் அதன் எளிமையால் கவர்கிறது.அதே நேரத்தில் ஒரு எழுத்தாளனாக அவரை சரியாக அறிமுகம் செய்கிறது. எழுத்தாளர்களுக்கான நல்ல இணையதளத்திற்கான அழகான உதாரணம் இந்த தளம்.வடிவமைத்த பர்பில்ரெயின் நிறுவனம் பாராட்டுக்குறியது. இணையதள முகவரி: http://www.buddhanpages.com/ ( பி.கு: சுந்தர புத்தன் எனது நண்பர். ஆனால் இந்த பதிவை எழுத அது காரணம் அல்ல. நட்பை மீறி இந்த தளத்தைன் அமைப்பும் உள்ளடக்கமுமே எழுத தூண்டியது. அன்புடன் சிம்மன்

]] >

இளம் எழுத்தாளர்களுக்கான பேஸ்புக்.

எழுத்தாளராவதற்கு தான் எத்தனை தடைகள்!

முதலில் எழுத வேண்டும்.எழுதியதை திருத்தி செப்பனிட்டு புத்தகத்தை வெளியிட வேண்டும்.அதன் பிறகு வாசகர்கள் கிடைக்க வேண்டும்.

இதற்கு மாறாக எழுதும் போதே வெளியிடுவதற்கான வாய்ப்பும் படிப்பதற்கான வாசகர்கள் கிடைத்தால் எப்படி இருக்கும்?

விட்புக் இணையதளம் இந்த அற்புதத்தை தான் சாத்தியமாக்குகிறது.

எழுத்தார்வம் கொண்டவர்களுக்கான பேஸ்புக் போன்ற வலைப்பின்னல் தளமாக இந்த விட்புக் உருவாக்கப்பட்டுள்ளது.

எழுதுங்கள்,படியுங்கள்,பகிருங்கள்! என அழைக்கும் இந்த வலைப்பின்னல் எழுத்தாளராக தேவையான எல்லாவற்றையும் வழங்குகிறது.

இதற்கு இந்த தளத்தில் உறுப்பினரானால் போதுமானது.(பேஸ்புக் பயனாளிகள் நேராக நுழைந்து விடலாம்).

உறுப்பினராகும் போதே எழுத்தில் நீங்கள் விரும்பும் வகைகளை (தொழில்நுட்பம்,இலக்கியம்,வரலாறு…)போன்றவற்றை குறிப்பிட்டு படித்த பள்ளி போன்ற அடிப்படையான விவரங்களையும் குறிப்பிடலாம்.

நிங்கள் குறிப்பிடும் எழுத்து வகைக்கேற்ப உங்களுக்காக புத்தகங்கள் சில பரிந்துரைக்கப்படும்.அவற்றை பிறகு பார்ப்போம்.இப்போது எழுதுவதை கவனிக்கலாம்.அதற்கு முன்பாக விட்புக்கில் உங்கள் பேஸ்புக் நண்பர்கள் யாராவது இருக்கின்றனரா என்று பார்த்து அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் எழுத்து திட்டத்தை தெரிவிக்கலாம்.

புதிதாக நாவல் எழுதப்போகிறேன் என்றோ அல்லது கம்புயூட்டர் பயன்பாடு அனுபவ குறுப்புகளை எழுதப்போகிறேன் என்றோ தெரிவிக்கலாம்.அதன் பிறகு எழுத துவங்கலாம்.எழுதும் போது ஏற்படும் எண்ணங்களையும் அனுபவங்களையும் பேஸ்புக் அப்டேட் போலவே பகிர்ந்து கொள்ளலாம்.

இனி எழுத ஆரம்பிக்கலாம்.

‘புதிய புத்தகத்தை உருவாக்க’என உள்ள பகுதியை கிளிக் செய்தால் எழுதுவதற்கான புத்தக பக்கங்கள் வந்து நிற்கின்றன.அதற்கு முன்பாக புத்தகத்தின் தலைப்பு,துணை தலைப்பு மற்றும் புத்தகம் பற்றிய விளக்கத்தையும் குறிப்பிட்டு புத்தகத்திற்கான அறிமுகத்தை அளிக்கலாம்.வலைப்பின்னல் தளம் என்பதால் புத்தகத்தில் மற்றவர்கள் பங்களிப்பு மற்றும் பின்னூட்டம் வடிவில் கருத்துக்களை அனுமதிக்க விருப்பமா என்றும் தெரிவிக்கலாம்.

இனி எழுத எந்த தடையும் இல்லை.சும்மா சொல்லகூடாது திரையில் தோன்றும் இணைய குறிப்பேட்டை பார்த்தாலே எழுத ஆர்வம் ஊற்றெடுக்கும்.அந்த அளவுக்கு சகல வசதிகளோடு சிறப்பாக இருக்கிறது குறிப்பேடு.

ஒவ்வொரு அத்தியாயமாக பெயரிட்டு எழுதி கொண்டே போகலாம்.எழுதியதை சேமித்து விட்டு அடுத்ததாக எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போதுஎழுதலாம்.எழுதியதை எப்போது வேண்டுமானாலும் திருத்தி கொள்ளலாம்.

எழுதுவதற்கான இணைய குறிப்பேடு கிட்டத்தட்ட இபுக்கிற்கான அனைத்து வசதிகளுடனும் இருப்பதால் எழுதி முடித்தவுடன் முழு புத்தகமாக உருவாக்கி விடலாம்.

எழுதி முடித்த புத்தகத்தை இந்த தளத்திலேயே வெளியிடலாம்.அதாவது நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.அவர்களும் அதை படித்து விட்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இவ்வளவு ஏன் புத்தகத்தை எழுதும் நிலையிலேயே கூட ஒவ்வொரு அத்தியாயத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.விரும்பினால் சக உறுப்பினர்கள் திருத்தங்களை தெரிவிக்கவும் அனுமதிக்கலாம்.அல்லது அவர்கள் கருத்துக்களை அறிந்து அதற்கேற்ப மேம்படுத்திக்கொள்ளலாம்.இன்னுமொரு பட மேலே போய் ஒத்த கருத்துள்ள உறுப்பினர்களை சேர்ந்து எழுதவும் அனுமதிக்கலாம்.

இந்த கருத்து பரிமாற்றமே விட்புக் வலைப்பின்னலை தனித்துவம் மிக்கதாக ஆக்குகிறது.

ஒரு படைப்பை உருவாக்கும் போதே அது பற்றி நண்பர்களோடும் இலக்கிய நிபுனர்களோடும் விவாதித்து அவர்கள் கருத்துக்களை அறிந்து அதற்கேற்ப அந்த படைப்பை பட்டை தீட்டிக்கொள்ளும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்து விடாது.ஆனால் இந்த வாய்ப்பை ஆர்வம் உள்ள எல்லா இளம் எழுத்தாளர்களுக்கும் சாத்தியமாக்குகிறது விட்புக்.

எழுதும் போதே வாசகர்களை பெற வழி செய்வதோடு எழுத்து சார்ந்த நட்பை தேடிக்கொள்ளவும் வாய்ப்பு தருகிறது இந்த வலைப்பின்னல்.

நீங்களும் கூட மற்ற இளம் எழுத்தாளர்கள் எழுதுவதை படித்து கருது தெரிவித்து ஊக்குவிக்கலாம்.மற்ற எழுத்தாளர்களுக்கு நேரிடியாக செய்தி அனுப்பி தொடர்பு கொள்ளலாம்.அவர்களோடு உரையாடலாம்.எல்லாமே எழுத்து சார்ந்த உறவை வளர்க்கும்.

எழுத்தாளர்கள் தங்கள் பக்கத்தில் எழுதிய புத்தகத்தை இடம் பெற செய்வதோடு புத்தக அலமாரி,செய்தி பரிமாற்ற அறை,கூட்டு முயற்சி அரங்கு ஆகியவற்றையும் அமைத்து கொள்ளலாம்.

இவ்வளவுக்கும் இடையே தினமும் எழுத்தின் முன்னேற்றத்தை பகிர்ந்து கொள்ளலாம்.எழுத்தாளராக விரும்புகிற்வர்களுக்கு இது கிட்டத்தட்ட இணைய சொர்கம் தான்.

இணையதள முகவரி;http://www.widbook.com/home

டிவிட்டருக்கு எழுத்தாளரின் பாராட்டு!

டிவிட்டருக்கு இனியும் அறிமுகம் தேவையில்லை.இமெயில் போல எஸ் எம் எஸ் போல, பேஸ்புக் போல பெயர் சொன்னாலே எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு டிவிட்டர் பரவலாகவும்,பிரபலமாகவும் ஆகிவிட்டது.

டிவிட்டருக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் நற்சான்றிதழ்கள் தான்.

காரனம் டிவிட்டர் பிரபலமான அளவிற்கு அதன் தேவையும் பயன்பாடும் புரிந்து கொள்ளப்பட்டிருப்பதக தெரியவில்லை.

மேலும் டிவிட்டர் ஒரு வேண்டாத கவனச்சிதறலாக,நேரத்தை வீணடிக்கும் முயற்சி என்ற கருத்தும் பலருக்கு இருக்கிறது.140 எழுத்துக்கள் என்னும் அதன் வரம்பும்,அதனால் தேவைப்படும் நவீன சுருக்கெழுத்து முறைகளும் மொழி அறிவை பதம் பார்ப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.

டிவிட்டர் குறும்பதிவுகள் இலக்கணத்திற்கு எதிரானவை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

எனவே தான் டிவிட்டருக்கு அதன் சிறப்புகளுக்கு சான்று தேவைப்படுகிறது.

எழுத்தாளரான மார்கரெட் அட்வுட் இத்தகைய சான்றிதழை அளித்துள்ளார்.

கனடாவில் நடைபெற்ற நெக்ஸ்ட் மீடியா என்னும் தொழில்நுடப் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அட்வுட் ,டிவிட்டரின் பகழ் பாடியதோடு இதுவரை டிவிட்டர் பற்றி பரவலாக கவனிக்கப்படாத ஒரு விஷயத்தையும் சுட்டிக்காட்டனார்.

டிவிட்டர் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் வாசிக்கும் பழக்கத்தையும் ,எழுதும் பழக்கத்தையும் அதிகரித்திருப்பதாக அட்வுட் கூறியுள்ளார்.

தந்தியை போல,அதற்கு முன்னர் புகை மூலம் செய்கை செய்வதை போல,சுவரெழுத்துக்கள் போல்,மரத்தில் பெயர் எழுதுவது போலவே டிவிட்டரும் என்று குறிபிட்ட அட்வுட் இந்த சிறிய வெளியீட்டு வடிவை புதுமைஆயன் முறையில் பலரும் பயனப்டுத்தி வருவதாகவும் ஸ்லாகித்துள்ளார்.

டிவிடரில் சிறுகதை எழுதுபவர்களையும் கவனித்துள்ளதாக குறிப்பிடும் அவர் ஹைகூ கவிதையும் உரைநடையும் இணைந்த கலவை என்று டிவிட்டரை வர்ணித்துள்ளார்.

இண்டெர்நெட் மற்றும் சமூக மீடியாவின் வளர்ச்சியின் பயனாக வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ள அட்வுட் ,எஸ் எம் எஸ் மற்றும் போன்றவை தொலைபேசி உரையாடலை குறைத்திருப்பதே இதற்கு காராணம் என்றும் கூறியுள்ளார்.

இண்டெர்நெட்ட்டை பய்னப்டுத்த வேண்டும் என்றாலே எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷ்யம் என்பது அட்வுட்டின் கருத்து.சிறார்கள் மத்தியில் இண்டெர்நெட் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதும் அவரது நம்பிக்கை.

அட்வுட் சுட்டிகாட்டும் மற்றொரு விஷயமும் கவனிக்கத்தக்கது.படிப்பது என்பது பாட்டு கேட்பது போல அல்ல.அது ஒரு செயல்.அதற்கு ஒரு ஈடுபாடு தேவை.ஆனால் பாட்டு கேட்பது என்பது ஒரு நிகழ்வு மட்டுமே ஆகும் என்கிறார் அட்வுட்.

ஆகே தான் டிவிட்டர் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துகிறது என்கிறார்.டிவிட்டர் குறும்பதிவுகள் மாபெரும் இலக்கியங்களாக இல்லாமல் போகலாம்.ஆனால் அடிப்படையில் அவை படிக்க வைக்கினறன.குரும்பதிவுகளில் சுட்டிக்காட்டப்படும் இனைப்புகள் மேலும் படிக்க வைகின்றன.எனவே டிவிட்ட்டருக்கு ஜே என்கிறார் அட்வுட்.

பொதுவாக் டிவிட்டர் மொழியையும் குறிப்பாக இலக்கணத்தையும் பாழடிப்பதாக பரவலாக கருதப்படும் நிலையில் வார்த்தைகளின் மூலம் தன்னை வெளிப்படுத்தி கொள்பவரான அட்வுட் டிவிட்டருக்கு இந்த நற்சான்றிதழ் வழங்கியிருப்பது டிவிட்டர் பிரியர்களை மகிழ வைக்கும்.மற்ர்வர்களுக்கு டிவிட்டரை புரிய வைக்கும்.

(முந்தைய பதிவில் டிவிட்டரில் வாசிப்பு குழுவை துவக்கியுள்ள பென்குவின் பதிப்பக முயற்சியை எழுத்தாளர் மார்கரெட் அட்வுட் வரவேற்பார் என்று குறிப்பிட்டிருந்தேன்.இந்த வாசிப்பு குழு புத்தக வாசிப்பை மேலும் ஊக்குவிக்கும் வாய்ப்பு உள்ளது.டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதாக அட்வுட் கருதுவதால் இந்த முயற்சி அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தானே.)

basu1

டிவிட்டரில் சிறுகதைகள் எழுதி புகழ் பெற்ற எழுத்தாள‌ர்.

அர்ஜுன் பாசுவை டிவிட்டர் யுகத்தின் ஹெமிங்வே என்று சொல்லலாம்.ஹெமிங்க்வே எழுத்துலக மன்னன் என்றால் பாசு சிறுகதைகளின் மன்னன்.

சிறுகதைகள் என்றால் உண்மையிலேயே சிறிய சிறுகதைகள்.அவற்றின் நீளம் அகலம் ஆழம் எல்லாம் 140 எழுத்துக்கள் தான்.பாசு தனக்காக வகுத்து கொண்டிருக்கும் இலக்கணமும் இதுதான்.எல்லாம் 140 எழுத்துகளுக்குள் அடங்கிவிட வேண்டும்.அதாவது ஒரு எந்த ஒரு சிறுகதையும் ஒரு டிவிட்டில் துவங்கி,அதே டிவிட்டில் வளர்ந்து அந்த டிவிட்டிலேயே முடிந்துவிட வேண்டும்.

டிவிட்டரிலேயே எழுதப்படும் இந்த சின்ன சின்ன சிறுகதைகளை பாசு டிவிஸ்டர்ஸ் என்று அழைக்கிறார்.இது அவரே சூட்டிய பெயர்.மற்றவர்கள் குறுங்கதைகள்,குறும் புனைவு,உடனடி கதைகள் என்றெல்லாம் சொல்கின்றனர்.

இந்த வகையான கதைகளை எழுதும் முயற்சியில் பலரும் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் டிவிட்டரின் வரம்புக்கு உடபட்டு டிவிட்டர் சிறுகதைகளை முதன் முதலில் எழுத்த துவங்கியவர்களில் பாசு ஒருவர்.

140 எழுத்துகளுக்குள் என்ன செய்துவிட முடியுமென்ற கேள்வி பலரது மனதில் இருந்த டிவிட்டரின் ஆரம்ப காலத்திலேயே பாசு டிவிட்டரில் சிறுகதை எழுத துவங்கிவிட்டார்.அதாவது 2009 ம் ஆண்டிலேயே!

அர்ஜுன் பாசு அடிப்படையில் எழுத்தாளர்.கன்டாவின் மான்ட்ரியலில் பிறந்து வளர்ந்தவர்.சிறுகதை தொகுப்பு ஒன்றையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.நாவல் எழுத வேண்டும் என்ற திட்டம் எல்லாம் அவரது மனதில் இருந்தது.அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.

இந்த கால கட்டத்தில் தான் 2009 ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் குறும்பதிவு சேவையான டிவிட்டர் பற்றி கேள்விப்பட்டு அதனை பயன்படுத்த துவங்கினார்.

டிவிட்டரை பயன்படுத்தும் எழுத்தாளர்கள் பொதுவாக தங்கள் எழுத்துக்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள டிவிட்டரை பயன்படுத்துவதுண்டு.பாசுவே டிவிட்டரிலேயே எழுதலாம் என தீர்மானித்தார்.

அப்படி எழுத துவங்கியது தான் டிவிட்டர் சிறுகதைகள்.ஆனால் இந்த எண்ணம் தோன்றியது மிகவும் தற்செயலானது என்கிறார் பாசு.ஆரம்பத்தில் டிவிட்டர் என்றால் என்ன என்று சரியாக புரியாமல் எதை எதையோ எழுதி கொண்டிருந்ததாகவும் திடிரென ஒரு நாள் உள்ளத்தில் ஒரு தெளிவான சித்திரம் தோன்றியதாகவும் அதனை அப்படியே சிறுகதையாக டிவிட்டரில் பகிர்ந்து கொண்டதாகவும் பாசு தனது டிவிஸ்டர்ஸ் பிறந்த விதம் பற்றி குறிப்பிடுகிறார்.

மிகவும் தற்செயலாக அந்த கதை மிகசரியாக 140 எழுத்துக்கள் கொண்டதாக இருந்தது.ஒரு எழுத்து அதைக இல்லை;ஒரு எழுத்து குரைவு இல்லை.அதன் பிறகு அவர் தொடர்ந்து டிவிட்டர் சிறுகதைகளை எழுத துவங்கினார்.எல்லாமே சரியாக 140 எழுத்துக்கள் கொண்டவை.

அவரது இந்த கதைகள் குறும்பதிவுகளாக வெளியாயின.

டிவிட்டர் பதிவாக ஒரு கதையை சொல்வதே சவாலானது.அதிலும் மிகச்சிரியாக 140 எழுத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்றால் திண்டாட்டம் தானே.ஆனால் பாசுவோ இந்த சவால் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறுகிறார்.டிவிட்டரில் சிறுகதை எழுதுவது என்று முடிவு செய்த பின் அதன் விதிகளுக்கும் வரம்பிறகும் உடபடுவதே சரியாக இருக்கும் என்பதால் 140 எழுத்துக்கள் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் பாசு சொல்கிறார்.

முதல் நாள் அன்று பாசு மூன்று சிறுகதைகளை எழுதி டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து எழுத துவங்கினார்.ஒரு நாளுக்கு நானுக் அல்லது ஐந்து கதைகளை எழுதி விடுகிறார்.இது வரை 500க்கும் மேற்பட்ட டிவிட்டர் சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் இருந்த அவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதன் பிறகு ஆயிரக்கணக்கில் வளரத்துவங்கிவிட்டது.

இதை படித்து கொண்டிருக்கும் போதே 140 எழுத்துகளுக்குள் எப்படி கதை சொல்ல முடியும் என்ற சந்தேகமும் வாட்டிக்கொண்டிருக்கலாம்.

ஆசுவின் கதைகளை படித்தால் இந்த சந்தேகம் தீர்ந்துவிடும்.140 எழுத்துகளுக்குள் அவர் ஒரு கதையை சொல்லி முடித்து விடுகிறார்.அதற்குள்ளாகவே மூன்று நான்கு வரிகள் வந்து விடுகின்றன.

உதாரணத்திற்கு சில கதைகளை பார்ப்போம்.

‘அந்த திருமணம் தேனிலவு வரை கூட தாங்கவில்லை;அவர்கள் தங்கள் தவறின் மகத்துவத்தை ஒப்புக்கொண்டனர்.ஆனால் ஒன்றாக இருந்தனர்.காரணம் பரிசுகள்’.

‘அவள் பத்திரிகையை எடுத்து அவனைப்பார்த்து என்ன என்று கேட்டாள்.அவன் என்ன?என்றான்.அவள் என்ன?என்றால்,அவன் என்ன என்ன என்ன என்றான்.அவள் அலுப்பில் இறந்து போனாள்’.

‘அவள் கணவன் எடுத்த முடிவுகளால் ஏமாற்றம் அடைந்தாள்,ஆனால் ,நாயின் வாயில் சிக்கிய துணி போல அல்லாமல் தன்னால் இதிலிருந்து மீள முடியும் என நம்பினாள்’

‘குழந்தைகள் கத்த துவங்கின.அவன் காபியை கூட குடிக்க துவங்கவில்லை.அவன் வேண்டாம்,வேண்டாம்,வேண்டாம் என்றான்,குழந்தைகள் மேலும் சத்தமாக கத்ததுவங்கின’.

இப்படி பாசு எழுதி தள்ளியிருக்கிறார்.சில கதைகள் குழப்பும்,சில சிரிக்க வைக்கும்,சில சிந்திக்க வைக்கும்.

பாசு கதைகள் அவற்றின் வரம்பை மீறி பலவகப்ப்பட்டதாக இருப்பதும் பல வித உணர்வுகளை முன்வைப்பதும் உண்மையிலேயே ஆச்சர்யமானது தான்.

இந்த கதைகளில் அர்த்தம் உண்டா ?அது அவரவர் புரிந்து கொள்ளும் விதத்தில் உள்ளது.இவற்றில் இலக்கியத்தரம் உண்டா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.அதற்கு டிவிட்டர் சிறுகதைகளுக்காக அளவுகோள் முதலில் உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால் பாசு டிவிட்டர் சிறுகதைகள் மூலம் டிவிட்டர் உலகில் அதற்குறிய கவனத்தை பெற்றிருகிறார்.ஷார்ட்டி விருதினையும் வென்றுள்ளார்.இணையதளங்களுக்காக வழங்கப்படும் வெப்பி விருதுகள் போல டிவிட்டர் உலகிறகாக ஷார்ட்டி விருதுகள் வழங்கப்படுகின்றன.

நாவல்களை அடிப்படையாக கொண்டு திரைப்படங்கள் எடுக்கப்படுவது போல அவரது குறுங்கதையை கொண்டு ஒரு நிமிட திரைப்படம் எடுக்கப்பட்டு சர்வதேச ஒரு நிமிட திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.

பாசு தொடர்ந்து டிவிட்டர் சிறுகதைகளை எழுதி வருகிறார்.டிவிட்டரில் எழுதும் போது வாசக்ர்களிடம் இருந்து கிடைக்கும் உடனடி எதிர்வினைக்கு எதுவும் ஈடில்லை என்பது பாசுவின் கருத்து.நாவல் அல்லது சிறுகதையை எழுதிவிட்டு வாசகர் கருத்தை அறிய மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.ஆனால் டிவிட்டரில் குறும்பதிவாக கதை வெளியானவுடன் பின் தொடர்பாளர்கள் உடனே படித்து விட்டு கருத்து சொல்வது எழுத்தாளன் என்ற முறையில் அளவில்லா மகிழ்ச்சி தருகிறது என்கிறார் அவர்.

இந்த பதிவின் துவக்கத்தில் பாசுவை ஹெமிங்வேயுடன் ஒப்பிட்டதற்கு ஒரு காரணம் உள்ளது.கடலும் கிழவனும்,போரே நீ போ உள்ளிட்ட காலத்தை வென்ற நாவல்களையும் முத்திரை சிறுகதைகளையும் எழுதிய ஹெமிங்வே ஒரு முறை ஒரே வரியில் ஒரு சின்னஞ்சிறிய கதை ஒன்றை எழுதினார்.

தனது மிகச்சிறந்த படைப்பு என்று ஹெமிங்வே குறிப்பிட்ட அந்த கதை இது தான்.

“விற்பனைக்கு;குழந்தைகள் ஷூ;இது வரை அணியப்படாதது.”

பாசுவின் கதைகளுக்கு இதனை முனோடியாக சொல்லலாம்!

—————–

http://twitter.com/arjunbasu

http://arjunbasu.com/twisters