Archives for: July 2015

ஆன் –லைன் விற்பனையில் வீடு வாங்கலாமா?

இணையம் மூலம் பொருட்களை வாங்கும் மின்வணிகம் இந்தியாவில் பிரபலமாகி பட்டி தொட்டியெல்லாம் அறிமுகமாகி இருக்கிறது. மின் வணிகம் மூலம் பொருட்களை வாங்கும் பழக்கம் அதிகரித்திருப்பதோடு,மின் வணிகம் மூலம் வாங்கக்கூடிய பொருட்களின் பட்டியலில் விரிவடைந்திருக்கிறது. இந்த பட்டியலில் இப்போது ரியல் எஸ்டேட்டும் சேர்ந்திருக்கிறது. ஆம், லட்சக்கணக்கில் மதிப்பு உள்ள வீடுகளையும் இப்போது மவுஸ் கிளிக்கில் வாங்கும் நிலை வந்திருக்கிறது.ஸ்மார்ட்போன்களுக்கும் ,ஆடைகளுக்கும் ஆன் –லைனில் தள்ளுபடி விற்பனை செய்யப்படுவது போல வீடுகளும் ஆன் –லைன் மூலம் அதிரடியாக விற்கப்படுகிறது. கடந்த […]

இணையம் மூலம் பொருட்களை வாங்கும் மின்வணிகம் இந்தியாவில் பிரபலமாகி பட்டி தொட்டியெல்லாம் அறிமுகமாகி இருக்கிறது. மின் வணிகம்...

Read More »

கண்ணை நம்பாதே! இணையம் ஏமாற்றும்

இணைய ஆற்றலின் மீது அபார நம்பிக்கை கொண்டவன் நான். இணையத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடு பற்றியும் அதன் வீச்சு பற்றியும் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.இணையம் பயன்படும் விதம் பற்றியும் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால் இணையத்தில் எச்சர்க்கையாகவும் இருக்க வேண்டும். மோசடி வலைகளும் மால்வேர்களும் இணையத்தில் அதிகம் என்பது மட்டும் அல்ல, கண்ணால் காண்பதும் பொய் என உணர்த்தும் தருணங்களும் உண்டு. இவை பற்றிய எச்சரிக்கையாக தான் இந்த பதிவு. இணையம் தகவல் சுரங்கம் தான். […]

இணைய ஆற்றலின் மீது அபார நம்பிக்கை கொண்டவன் நான். இணையத்தின் ஆக்கப்பூர்வமான பயன்பாடு பற்றியும் அதன் வீச்சு பற்றியும் பதிவ...

Read More »

இணையத்தை கலக்கும் எக்ஸ்குலிசிவ் இணையதளம்

ஒரு இணையதளத்தை பயன்படுத்திப்பார்க்க ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இணைய உலகை இப்போது கலக்கி கொண்டிருக்கும் மோஸ்ட் எக்ஸ்குலிசிவ் வெப்சைட் எனும் இணையதளத்தின் உள்ளே நுழையும் அனுமதிக்காக தான் இப்படி ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நீங்களும் அந்த தளத்தை பயன்படுத்திப்பார்க்க விரும்பினால் அதில் அனுமதி சீட்டு வாங்கி இணைய வரிசையில் நின்றாக வேண்டும். ஆச்சர்யமாக இருக்கலாம்.அப்படி அந்த இணையதளத்தில் என்ன பிரமாதமாக இருக்கிறது என்று வியப்புடன் கேட்கலாம். ஆனால் அந்த இணையதளத்தில் ஒன்றுமே கிடையாது […]

ஒரு இணையதளத்தை பயன்படுத்திப்பார்க்க ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இ...

Read More »

கூகுள் குரோமில் ஒலி வடிவில் இணைய பக்கங்களை பகிரும் வசதி

இணையத்தில் எதையும் பகிர்ந்து கொள்வது எளிதானது தான். இணையதளங்களின் முகவரியாக இருந்தாலும் சரி, வீடியோ கோப்பாகவும் சரி, அவற்றை பகிர்ந்து கொள்ள இமெயிலில் துவங்கி பேஸ்புக், வாட்ஸ் அப் என பலவழிகள் இருக்கின்றன. இவற்றோடு இன்னும் ஒரு சுவாரஸ்யமான வழியை கூகுள் குரோம் பிரவுசருக்கான நீட்டிப்பு சேவையாக அறிமுகம் செய்துள்ளது. கூகுள் டோன் எனும் பெரியரிலான இந்த சேவை மூலம் ஆடியோவாக அதாவது ஒலி வடிவில் கோப்புகளை பகிர்ந்து கொள்ளலாம். இந்த சேவையை பயன்படுத்த முதலில் கூகுள் […]

இணையத்தில் எதையும் பகிர்ந்து கொள்வது எளிதானது தான். இணையதளங்களின் முகவரியாக இருந்தாலும் சரி, வீடியோ கோப்பாகவும் சரி, அவற...

Read More »

உலகம் அறியாத வார்த்தை! இது இணைய விநோதம்

இணையம் மூலம் மட்டும் சாத்தியமாக கூடிய கதைகளில் இதுவும் ஒன்று; கொஞ்சம் விநோதமானது தான்; ஆனால் இணையத்திற்கே உரித்தானது. அது என்ன என்று கேட்கிறீர்களா? உலகம் அறியாத வார்த்தை பற்றிய கதை இது. அந்த வார்த்தைக்காக இணையதளம் ஒன்றை அமைத்திருக்கும் இளம் பெண் அதை தன்னைத்தவிர வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என வேண்டுகோளும் விடுத்துள்ளார். ஆங்கில மொழியில் பலரும் அறிந்திராத பல வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் யாருமே அறிந்திராத ஒரு ஆங்கில வார்த்தை இருப்பது சாத்தியமா? அமெரிக்கவின் […]

இணையம் மூலம் மட்டும் சாத்தியமாக கூடிய கதைகளில் இதுவும் ஒன்று; கொஞ்சம் விநோதமானது தான்; ஆனால் இணையத்திற்கே உரித்தானது. அத...

Read More »