இணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது?

inஇணையத்திற்கு இது கொஞ்சம் சோதனையான காலம் தான். ஏற்கனவே ஃபேக் நியூஸ் எனப்படும் பொய்ச்செய்திகள் இணையத்தை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், பேஸ்புக் அனலிடிகா பிரச்சனை வடிவில் பிரைவஸி அச்சம் பெரிதாக வெடித்துள்ளது. இன்னொரு பக்கம் பார்த்தால் டிவிட்டரில் பாட்கள் எனப்படும் இயந்திர கணக்குகளின் ஆதிக்கம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவைத்தவிர பாஸ்வேர்டு திருட்டு, ஹேக்கர்களின் தாக்குதல் போன்ற பிரச்சனைகளும் இல்லாமல் இல்லை.

இந்த பின்னணியில் இணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள உதவும் ஆய்வறிக்கையை மொசில்லா பவுண்டேஷன் வெளியிட்டுள்ளது. இணையத்தில் என்ன பிரச்சனை, நாம் எவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பது போன்ற விஷயங்களை இந்த அறிக்கை தெளிவாக உணர்த்துகிறது.

இணைய உலகம் நன்கறிந்த பிரவுசர்களில் ஒன்றான பயர்பாக்ஸ் பின்னே இருக்கும் அமைப்பாக மொசில்லா பவுண்டேஷன் விளங்குவது உங்களுக்குத்தெரிந்திருக்கலாம். ஓபன் சோர்ஸ் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட இந்த அமைப்பு, இணையம் எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்கான முயற்சியாக இணைய ஆரோக்கிய அறிக்கை திட்டத்தை கடந்த ஓராண்டுக்கு முன் துவங்கியது. இணையவாசிகள் பங்களிப்போது இணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை அறிய முற்படும் இந்த திட்டத்தின் முதல் முழு அறிக்கையை மொசில்லா அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ளது.

பிரைவஸி மற்றும் பாதுகாப்பு, திறந்தவெளித்தன்மை, டிஜிட்டல் வாய்ப்புகள், இணைய விழிப்புணர்வு மற்றும் மையமற்ற விரிவாக்கம் ஆகிய ஐந்து அம்சங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாராகியுள்ளது. இந்த அறிக்கை உண்மையில் இணையத்தில் மனித வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருப்பதாக மொசில்லா அமைப்பின் செயல் இயக்குனர் மார்க் சுர்மன் கூறியுள்ளார்.

இணையத்தின் ஆரோக்கியம் ஒட்டுமொத்த நோக்கில் அத்தனை மோசமில்லை ஆனால் கவலைத்தரும் பல அம்சங்கள் இருக்கின்றன என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக பேஸ்புக் சர்ச்சை பின்னணியில் இந்த அறிக்கை சுட்டிக்காட்டும் பிரச்சனைக்குறிய அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சிக்கலான அம்சங்களை பார்ப்பதற்கு முன், முதலில் இணையத்தில் வரவேற்க கூடிய அம்சங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளவற்றை பார்க்கலாம். அதிக எண்ணிக்கையிலான மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர், ஸ்மார்ட்போன்கள் எழுச்சியால் இணையத்தை அணுகுவது செலவு குறைந்ததாகி இருக்கிறது மற்றும் தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்படுவது அதிகரித்திருக்கிறது ஆகிய அம்சங்கள் பாசிட்டிவாக அமைவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இனி நெகட்டிவாக அமைந்துள்ள விஷயங்களை கவனிக்கலாம். இணையத்தில் அரசு தணிக்கை அதிகரித்திருக்கிறது, டிரால்களின் தொல்லை தீவிரமாகி இருக்கிறது மற்றும் இணையத்தில் குறிப்பிட்ட மெகா நிறுவனங்களின் ஆதிக்கம் வலுப்பெறுவது கவலை அளிக்கும் அம்சங்கள் என அறிக்கை தெரிவிக்கிறது.

ஆப்பிள், பேஸ்புக், கூகுள் மற்றும் அமேசான் ஆகிய மெகா நிறுவனங்கள் ஏகபோக அந்தஸ்துடன் ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொய்ச்செய்திகள் பிரச்சனை பற்றியும் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட கவலை அளிக்கும் விஷயமாக, இணையத்தின் வருவாய் மாதிரி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பயனாளிகளிடம் இருந்து முடிந்த அளவு தகவல்களை அறுவடை செய்து அவற்றை விளம்பரதாரர்களுக்கு விற்பதாக இந்த மாதிரி இருக்கிறது. பேஸ்புக்கும், கூகுளும் இந்த மாதிரையை அடிப்படையாக கொண்டு தான் வருவாய் ஈட்டுகின்றன.

பேஸ்புக் பயனாளிகள் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்ட பிரச்சனையில் இந்த வருவாய் வழி தான் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது எனும் நிலையில் மொசில்லா அறிக்கை இது குறித்து அழுதந்திருத்தமாக எச்சரிக்கிறது. தகவல்களை திரட்டும் வருவாய் மாதிரியில், அந்த தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளார்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழுத்த தகவல்கள் சார்ந்த பொருளாதாரத்தில் நாம் இருப்பதாக தெரிவிக்கும் அறிக்கை, அதிக அளவில் தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவை ஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தப்படும் போது இறுதியில் நச்சுத்தன்மையோ பயன்படுத்தும் நிலை உருவாகும் என குறிப்பிடுகிறது.

நிறுவனங்கள் இந்த அளவுக்கு தரவுகளை சேகரிப்பது சாத்தியமாவதற்கான பயனாளிகளின் அறியாமை ஒரு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு தகவல் சேகரிப்பு நடைபெறுகிறது என்பதை அறியாதவர்களாக நெட்டிசன்கள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஸ்மார்ட்போன்கள் மூலம் இணையத்தில் அடியெடுத்து வைக்கும் புதிய பயனாளிகள் பற்றியும் கவலையோடு குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இணைய உலகில் நுழைபவர்கள், கண்களில் மண்ணைத்தூவும் பொய்ச்செய்திகள், மோசடி வலை, மயக்கும் விளம்பரங்கள், தவறான தகவல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் மூலம் இணையத்தை அணுகுவது எளிதாகி இருந்தாலும், இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பரவலாக இல்லாததே இதற்கு காரணமாக அமைகிறது.

இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த டிஜிட்டல் கல்வியில் கவனம் செலுத்துவது அவசியம் என்பதையும் அறிக்கை உணர்த்துகிறது. மொசில்லா அறிக்கை, இணையம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடவில்லை, இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வரும் தன்நபர்களையும் அவர்களது பங்களிப்பையும் அடையாளம் காட்டியுள்ளது.

இணையத்தில் ஆங்கிலம் அல்லாத பிராந்திய மொழிகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் இந்தியாவின் சந்தோஷ் தோட்டிங்கல், சைபர் சிவில் உரிமைகள் அமைப்பை உருவாக்கியுள்ள ஹாலி ஜேக்கப்ஸ் ஆகியோர் பற்றியும் விஷேசமாக குறிப்பிடப்பட்டுள்ளன. இணைய ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் மொசில்லா அமைப்பின் முழு அறிக்கையை இங்கே (https://internethealthreport.org/ ) வாசிக்கலாம். அது மட்டும் அல்ல, இணைய ஆரோக்கியத்தை காக்கும் முயற்சியிலும் பங்கேற்கலாம். இந்த அறிக்கை திறவு மூலத்தன்மை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது இணைய பயனாளிகளின் பங்களிப்புடன் தயாராகியுள்ளது. இந்த அறிக்கை தொடர்பான கருத்துக்களையும், மொசில்லா கோரியுள்ளது. இணையவாசிகள் தங்கள் கருத்துக்களை சமர்பிக்கலாம். மேலும் இணைய பிரச்சாரம் முதல் இணையத்தில் இணைக்கப்பட்ட பொருட்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கான பெலோஷிப்பையும் இணையவாசிகளுக்காக வழங்குகிறது.

இதனிடையே மொசில்லா அமைப்பு, பேஸ்புக் பயனாளிகள் இந்த சேவையால் இணையத்தில் பின் தொடரப்படுவதை தடுக்கும் பிரவுசர் நீட்டிப்புச்சேவையையும் அறிமுகம் செய்துள்ளது.; https://blog.mozilla.org/blog/2018/03/27/facebook-container-add-on/  பேஸ்புக் சேவையை பயன்படுத்தாத போது, பயனாளிகள் இணையத்தை பயன்படுத்தும் விதம் தொடர்பாக பேஸ்புக் தகவல்களை சேகரிப்பதை இந்த நீட்டிப்பு சேவை தடுக்கிறது. மேலும் பேஸ்புக்கின் பிரைவஸி கொள்கையில் மாற்றம் தேவை எனும் இணைய மனு பிரச்சாரத்தையும் சேஞ்ச்.அர்க் தளத்தில் துவங்கியிருக்கிறது.

இணையமே நீ நலமா?

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *