ஆபாச விளம்பரமும், ரெயில்வே தளத்தின் பதிலடியும்!

ty1கடந்த வாரம் இணையத்தில் நடைபெற்ற கொஞ்சம் சுவாரஸ்யமும்,கிளுகிளுப்பும் கலந்த ஒரு செய்தியை பார்க்கலாம். இந்த செய்தி இணையவாசிகளுக்கான பாடத்தையும் கொண்டிருக்கிறது.

ரெயில் பயணத்திற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்வது உள்ளிட்ட வசதிகளை இந்திய ரெயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் வழங்கி வருகிறது. இதன் செயலி வடிவமும் இருக்கிறது. இந்திய ரெயில்வே போலவே, ஐஆர்சிடிசி தளம் மீது இணையவாசிகளுக்கு பலவிதமான புகார்கள் உண்டு.

அண்மையில் இணையவாசி ஒருவர் , ஐஆர்சிடிசி மீது விநோதமான புகாரை தெரிவித்திருந்தார். ஐஆர்சிடிசி செயலியை பயன்படுத்திய போது, ஆபாசமான இணையதளங்கள் தோன்றியதாக தெரிவித்த அந்த இணையவாசி, ஆபாச விளம்பரங்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்தும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஐஆர்சிடிசி செயலியில் ஆபாச விளம்பரங்கள் தோன்றுவது சங்கடமாக இருப்பதாக கூறியவர், ரெயில்வே அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

உண்மையிலேயே சங்கடமான விஷயம் தான் இது. ரெயிலே செயலியில் ஆபாச விளம்பரங்கள் தோன்றுவதை எப்படி அனுமதிக்க முடியும்? சரியான கேள்வி தான்!. ஆனால், இந்த கேள்விக்கு ரெயில்வே அளித்த பதிலில் தான் சுவாரஸ்யமான திருப்பமே இருக்கிறது.

ஐஆர்சிடிசி, கூகுள் விளம்பரங்கள் வாயிலாக விளம்பரங்களை வெளியிடுகிறது. இந்த விளம்பரங்கள் குக்கீஸை ( உளவு மென்பொருள்கள்) பயன்படுத்துகின்றன. பயனாளிகள் இணைய வரலாறு அடிப்படையில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்படுவதால், உங்கள் பிரவுசரில் உள்ள குக்கீசை நீக்குங்கள், இணைய வரலாற்றை சரி செய்யுங்கள் என ரெயில்வே நாசுக்காக பதில் அளித்தது.

அதாவது, குறிப்பிட்ட அந்த பயனாளியின் இணைய வரலாறு அடிப்படையில் தான் ஆபாச விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன, இதில் ரெயில்வே தவறு எதுவும் இல்லை என்பதாக அந்த விளக்கம் அமைந்திருந்தது.

ரெயில்வேயின் இந்த நாசுக்கான பதிலடி, டிவிட்டர் பயனாளிகளின் பாராட்டை பெற்றது ஒரு பக்கம் என்றாலும், இன்னொரு பக்கத்தில் முக்கியமான விஷயத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.

இணையத்தில் நாம் பின் தொடரப்படுகிறோம். நம் ஒவ்வொரு இணைய நடவடிக்கையும் கண்காணிக்கப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் விளம்பர வலை விரிக்கப்படுகின்றன. எனவே இணையத்தில் விஜயம் செய்யும் தளங்களில் எச்சரிக்கையாக இருப்பதோடு, நம் இணைய சுவடுகளை பாதுகாப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

இமெயிலில் வரும் இணையதளம்

ரெட்டிட் இணையதளத்தை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. இணையத்தின் முகப்பு பக்கம் என வர்ணிக்கப்படும் ரெட்டிட், இணைப்புகளை பகிர்ந்து கொள்ளவும் அவை தொடர்பான உரையாடல்களுக்கான தளமாகவும் இருக்கிறது. அந்த வகையில் ரெட்டிட் தளத்தை மாபெரும் இணைய சமூகம் என்று தான் சொல்ல வேண்டும். ரெட்டிட்டில் உறுப்பினராக இருந்து அதன் விவாதங்களில் தீவிரமாக பங்கேற்பவர்கள் ரெட்டிட்காரர்கள் என உரிமையுடன் குறிப்பிடப்படுகின்றனர். ரெட்டிட்டில் எண்ணற்ற குழுக்களும், அவற்றுக்கு கீழ் மேலும் எண்ணற்ற துணை குழுக்களும் இருக்கின்றன. நீங்கள் விரும்பினால், எந்த குழுவிலும் இணைந்து புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரெட்டிட் தளத்தில் பகிரப்படும் அருமையான விஷயங்களை தெரிந்து கொள்ள இன்னொரு எளிதான வழியும் இருக்கிறது. ரெட்டிட்பைஇமெயில் (https://redditbyemail.com/ ) எனும் இணையதளம் ரெட்டிட் தகவல்கள் அனைத்தையும் உங்களுக்கு இமெயிலில் அனுப்பி வைக்கிறது. தொழில்நுட்பம், வர்த்தகம், உளவியல் என உங்களுக்கு பிடித்தமான தலைப்புகளில் ரெட்டிட் தகவல்களை இந்த தளம் மூலம் இமெயிலில் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தலைப்புகளில் சுவாரஸ்யமான கருத்துக்களை இந்த தளத்தின் முகப்பு பக்கத்திலும் பார்க்க முடிகிறது. ஆக, ரெட்டிட் விவாதங்களை பின் தொடர விரும்பினால், இந்த தளத்தில் உங்கள் இமெயில் முகவரியை பதிவு செய்து கொள்ளுங்கள்!.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.