மிட்ஜர்னி உன்னை மறந்தேன்…

மிட்ஜர்னி எஐ சேவை பற்றி இதுவரை நான் எதுவும் எழுதவில்லை. சாட்ஜிபிடி தொடர்பான தொடர்களில், ஆக்கத்திறன் ஏஐ சேவை பற்றி விவரிக்கும் போது, மிட்ஜர்னியை உதாரணமாக குறிப்பட்டதோடு சரி. மிட்ஜர்னி பற்றி எழுதவில்லையேத்தவிர, மிட்ஜர்னி பத்தோடு பதினொன்னாக அமைக்கூடிய ஏஐ சேவை அல்ல என்று தெரியும். அது மட்டும் அல்ல, ஏஐ அலையால் உண்டாகியிருக்கும் நகல் ஏஐ சேவைகளில் ஒன்று அல்ல என்பதும் தெரியும்.

உண்மையில், மிட்ஜர்னி ஆக்கத்திறன் ஏஐ அலையை உண்டாக்கிய முன்னோடி ஏஐ சேவைகளில் ஒன்று. சாட்ஜிபிடி கதைகளையும், கவிதைகளையும் எழுதி வியக்க வைத்துக்கொண்டிருந்த போது, மிட்ஜர்னி ஓவியங்களையும், மனித வடிவங்களையும் உருவாக்கி வியக்க வைத்துக்கொண்டிருந்தது.

மிட்ஜர்னிக்கு நிகராக சாட்ஜிபிடியின் சகோதர சேவை ’டேல்- இ’ மற்றும் ஸ்டெபிலிட்டி ஏஐ நிறுவனத்தின் ஸ்டேபிள் டிப்யூஷன் ஆகிய சேவைகள் இருக்கின்றன.

பயனாளிகளின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற உருவங்களை உருவாக்கித்தரும் ஆற்றலை இந்த மென்பொருள்கள் பெற்றுள்ளன. செயற்கை படைப்பூக்கம் பற்றிய வியப்பை ஏற்படுத்தியிருக்கும் சேவைகள் இவை.

மிட்ஜர்னி கதை பற்றி தனியே பார்க்கலாம். இப்போது இந்த சேவையை குறிப்பிட காரணம், மிட்ஜர்னியின் மகத்துவத்தை ஏஐ சேவைகள் அறியாமல் இருப்பதை சுட்டிக்காட்ட தான்.

’ஓபன்பீடியா’ என்று ஒரு தளம் இருக்கிறது. ஏஐ சேவைகளை பட்டியலிடும் சமகால இணைய கையேடுகள் வரிசையில் வரும் இந்த தளம், ஏஐ மென்பொருள்களையும், சேவைகளையும் பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தி பட்டியலிடுகிறது. அந்த வகையில் ’லியானார்டோ.ஏஐ’ எனும் சேவையையும் அறிமுகம் செய்துள்ளது.

எந்தவித கலை அனுபவமும் இல்லாத பயனாளிகள், எழுத்து மூலமாக உருவனங்கள், கலை ஆக்கங்களை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது என இந்த மென்பொருள் பற்றி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை தொடர்பான மற்ற அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இறுதியில் தொடர்புடைய சேவைகள் பட்டியலை பார்த்தால், மிட்ஜர்னி இடம்பெற்றுள்ளது.

ஆர்வத்தோடு, மிட்ஜர்னிக்கான அறிமுகத்தை கிளிக் செய்து பார்த்தால், ’ஏஐ மற்றும் வடிவமைப்பு கொண்டு மனித படைப்பூக்கத்தை மேம்படுத்தும் சுயேட்சையான ஆய்வுக்கூடம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மிட்ஜர்னி சேவை பற்றி இதைவிட தட்டையாக, சுவாரஸ்யமற்ற, செயற்கையான அறிமுகம் செய்ய முடியாது. நிற்க, இந்த வாசகங்கள், மிட்ஜர்னி தளத்தின் சுய அறிமுகம் என்பதை மீறி, இந்த இடத்தில் உணர்வற்ற அறிமுகமாகவே தோன்றுகிறது. ஏனெனில், கலைப்படைப்புகளை உருவாக்க கூடிய ஆக்கத்திறன் சேவைகளின் அறிமுகம் என வரும் போது, மிட்ஜர்னியை முன்னோடி சேவையை குறிப்பிடுவதும், மற்ற சேவைகளை அறிமுகம் செய்யும் போது மிட்ஜர்னியை ஒரு அளவுகோளாக குறிப்பிடுவதும் அவசியம்.

இல்லை எனில் மிட்ஜர்னியையும், லியானார்டோ.ஏஐ சேவையையும் ஒன்றாக சேர்த்து குழப்பிக்கொள்ள வேண்டும்.

நிற்க, இதன் மூலம் மன்னவனுக்கு நான் கூற வரும் நீதி என்னவென்றால் (!) மிட்ஜர்னி போன்ற சேவையை அறிமுகம் செய்ய முயலும் ஒரு மனித எழுத்தாளர் அல்லது இன்னும் குறிப்பாக இதழாளர் இத்தகைய தட்டையான அறிமுகத்தை எழுத மாட்டார். ஏஐ சேவைகளை பயன்படுத்தும் போது ஏற்படும் குறை இது.

ஏஐ சேவையை நம்பி எழுதும் போது அல்லது ஏஐ சேவை மூலம் இணையத்தில் இருந்து உருவி எடுத்து எழுதும் போது இப்படி தான் இருக்கும்.

ஓபன்பீடியா ஏஐ சேவை கையேடு, ஏஐ சேவைகளை பட்டியலிட்டு, அதன் அறிமுகம், பயன்பாடுகளை மிக செயற்கையாக எழுதுகிறது. அநேகமாக ஏஐ கொண்டு உருவியிருக்கலாம். எனவே தான் சாட்ஜிபிடி கொண்டு எழுதாதீர்கள் என்று உரக்க கத்த தோன்றுகிறது.

இது பற்றி உங்கள் கருத்துக்களை பகிரவும்!

தொடர்புடைய பதிவு;

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.