ஜிபிடியிடம் இருந்து எதிர்பார்க்க கூடிய நேர்மையான பதில்கள்

செய்யறிவு துறையில் நுட்பங்களை விட அறமே முக்கிய அம்சாக அமைகிறது. அதாவது ஏஐ நுட்பங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதும், அதை விட முக்கியமாக ஏஐ நுட்பங்களை நிறுவனங்கள் எப்படி உருவாக்குகின்றன என்பதும் முக்கியம். இதில் பயனாளிகளாகிய நம் பங்கும், விழிப்புணர்வும் மிகவும் அவசியன். ஏன் எப்படி என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.

’இந்த மனிதர் உலகில் இல்லை’ எனும் பாணி இணையதளங்கள் அநேகம் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இல்லை எனில் அறிந்து கொள்ளுங்கள்.

ஏஐ நுட்பம் கொண்டு, நிஜ உலகில் இல்லாதவற்றை உருவாக்கும் நுட்பத்திற்கான உதாரணமாக இந்த தளங்கள் அமைகின்றன. இதற்கு மூல உதாரணம், ’திஸ் பர்சன் டஸ் நாட் எக்சிஸ்ட்’ இணையதளம்.

இதே போல, இந்த ஓவியம் இல்லை, இந்த பூனை இல்லை என்பது போன்ற தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தளங்களை விநோதமானவை என்று மட்டும் கருதுவதற்கில்லை.

நிற்க, இதே பாணியில்,இந்த கலை மேற்கோற்கள் நிஜத்தில் இல்லை’ எனும் பொருள் தரும் ஒரு இணைய பதிவை காண முடிகிறது.

டெரிக் ஏயூ எனும் டிஜிட்டல் கலைஞர் தனது இணையதளத்தில் (https://derekau.net ) இது பற்றி எழுதியிருக்கிறார். கலை தொடர்பாக ஊக்கம் தரும் மேற்கோள்களை ஜிபிடி-3 சாட்பாட்டிடம் சமர்பித்து அதே போன்ற கலை மேற்கோள்களை உருவாக்கித்தருமாறு கேட்டிருக்கிறார். சாட்பாட்டும் இல்லாத மேற்கோள்களை உருவாக்கித்தந்திருக்கிறது. இப்படி உருவாக்கப்பட்ட 40 க்கும் மேற்ப கலை மேற்கோள்களை பரிசீலித்து அவற்றில் சிறந்த மூன்றை தனது தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஏஐ உருவாக்கிய மேற்கோள்கள் கூகுளில் இருந்து நகலெடுக்கப்பட்டவை அல்ல என்பதை உறுதி செய்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார். இப்படி அவர் அலசி ஆராய்ந்து தேர்வு செய்த மேற்கோள்களில் ஓவிய மேதை பிகாசோ மேற்கோள் வசீகரமாகவே இருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவெனில், இது பிகாசோ சொல்லாத மேற்கோள்.

ஏற்கனவே இணையத்தில், பிழை செய்திகளும், பொய் தகவல்களும் மலிந்திருக்கும் நிலையில் பிகாசோ சொல்லாத ஒரு மேற்கோள் அவரது பெயரில் உலா வருவதற்கான வாய்ப்பை இது உண்டாக்குவதை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

இது போன்ற அபாயங்களை தவிர்ப்பது எப்படி?

இந்த கேள்விக்கு பதிலாக தான் ஏஐ அறம் வருகிறது. அதாவது, பிகாசோ சொல்வது போன்ற மேற்கோளை உருவாக்கவும் எனும் கோரிக்கை வைக்கப்பட்டால், சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்கள், மன்னிக்கவும், மேதைகள் பெயரில் அவர்கள் சொல்லாத மேற்கோள்களை உருவாக்க எனக்கு அனுமதி இல்லை என பதில் அளிக்க வேண்டும். அந்த வகையில் அவற்றுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

இது தேவையா, சாத்தியமா என கேட்கலாம், தேவை தான். சாத்தியம் தான்.

தேவை, இணையத்தில் மேலும் பொய்த்தகவல் உருவாவதை தடுப்பது. சாட்ஜிபிடி போன்ற மென்பொருள்களை மனம் போன போக்கில் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. சாத்தியமா என கேட்டால், சாத்தியமே. சாட்ஜிபிடி சர்ச்சைக்குறிய விஷயங்களை சொல்லாமல் இருக்க இப்படி தான் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, திருட்டு அல்லது கொள்ளை வழி பற்றி கேட்டால், மன்னிக்கவும் இவை சட்டவிரோதம் என சொல்ல பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.

இல்லாத அந்த பிகாசோ மேற்கோளை இந்த பதிவில் குறிப்பிடுவதை தவிர்த்திருக்கிறேன். புரிதலுக்காக இணைப்பு இதோ: https://www.derekau.net/this-vessel-does-not-exist/2020/8/2/inspirational-art-quotes

மாறாக உண்மையான பிகாசோ மேற்கோள்கள்: https://www.brainyquote.com/authors/pablo-picasso-quotes

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.