பிட்காயினுக்கும் நாம் கொடுக்கும் விலை என்னத்தெரியுமா?

_107727090_bitcoin1பிட்காயின் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள சுவாரஸ்மான இணையதளம், அதன் செயல்பாடு தொடர்பான திடுக்கிடும் தகவலையும் சொல்வதாக அமைந்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அமைத்துள்ள அந்த இணையதளம், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து பயன்படுத்தும் அளவிலான மின்சாரத்தை பிட்காயின் அமைப்பு பயன்படுத்துகிறது என்று தெரிவிக்கிறது.

உண்மையில், திகைக்க வைக்கும் செய்தி தான் இது. பிட்காயினை உருவாக்க மின்சாரம் தேவை என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் அதற்கான மின்சார பயன்பாடு, ஒரு தேசத்தின் மின் பயன்பாட்டிற்கு நிகரானது என சொல்லப்படுவது கவலை அளிக்கும் விஷயம் தானே.

இந்த செய்தியின் தீவிரத்தை புரிந்து கொள்ள பிட்காயினை உருவாக்க பயன்படுத்தப்படும் மைங்கி நுட்பம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். கிரிப்டோ நாணய வகையைச்சேர்ந்த பிட்காயின் அதன் மதிப்பு எக்கச்சக்கமாக ஏறி இறங்குவதற்காக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிட்காயின் வைத்திருப்பவர்களில் பலர் திடீர் கோடீஸ்வரரர்களான கதைகள் இதன் மீதான கவர்ச்சியை அதிகமாக்கியுள்ளது. இத்தகையை வெற்றிக்கதைகள் எல்லோருக்கும் சாத்தியமா? எனும் கேள்வி ஒரு பக்கம் இருக்க, புதிய பிட்காயின்களை உருவாக்க முடிந்தால் நாமும் காசு பார்க்கலாம் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. இவர்களில் சிலர் இதற்கான முயற்சியிலும் ஈடுபடுவதுண்டு.

அதாவது, பிட்காயின் மைனிங்கில் ஈடுபடுகின்றனர். இந்த மைனிங் தான் உலக மின்சக்தி ஆற்றலுக்கு வேட்டு வைத்துக்கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.

பிட்காயின் மைனிங் என்றால் பிட்காயினை அகழ்வு செய்து எடுப்பது என புரிந்து கொள்ளலாம். அதாவது தோண்டி எடுப்பது அல்ல. புதிய பிட்காயின்களை உருவாக்குவது.

டிஜிட்டல் நாணயம் என்று சொல்லப்படும், பிட்காயின் கொஞ்சம் சிக்கலானது. மற்ற உலக நாணயங்கள் போல பிட்காயின் எந்த ஒரு நாட்டின் மைய வங்கியால் வெளியிடப்படுவதில்லை. அந்த விஷயத்தில் பிட்காயின் சுயம்பு நாணயம். அதனால் தான் பிட்காயின் கட்டுப்படுத்தப்படாததாக இருக்கிறது. மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லாமல், பயனாளிகள் தங்களுக்குள் நேரடியாக பரிமாறிக்கொள்ளக்கூடியது என்று இந்த அம்சம் வர்ணிக்கப்படுகிறது.

எல்லாம் சரி, பிட்காட்யினை எந்த ஒரு மைய அமைப்பும் வெளியிடவில்லை எனில், பிட்காயின்கள் எப்படி உருவாகின்றன.? இந்த கேள்விக்கு பதிலாக தான் பிட்காயின் மைனிங் வருகிறது. மைனிங் செய்வதன் மூலம் புதிய பிட்காயின்களை உருவாக்கலாம். மைனிங் என்பது உண்மையில், டிஜிட்டல் புதிர்களை விடுவிப்பது. யார் புதிரை விடுவிக்கின்றனரோ அவர்களுக்கு, புதிதாக உருவாகும் பிட்காயின்களில் கொஞ்சம் பரிசாக கிடைக்கும்.

டிஜிட்டல் புதிர்களை விடுவிக்க கம்ப்யூட்டர்கள் தேவை. ஆரம்ப காலத்தில் பிட்காயின் புதிர்கள் எளிமையாக இருந்தன. ஆனால், அவை காலப்போக்கில் சிக்கலானவையாக மாறக்கூடியவையாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் தற்போது பிட்காயின்களை உருவாக்குவதற்கு மிகவும் சிக்கலான டிஜிட்டல் புதிர்களை விடுவித்தாக வேண்டும். இதற்காக நாம் ஒன்றும் மெனக்கெட வேண்டாம் என்றாலும், கம்ப்யூட்டர்கள் அதிகம் உழைத்தாக வேண்டும்.

ஆக ஆரம்ப் காலத்தில் ஒரு சாதாரண கம்ப்யூட்டரில் பிட்காயின் புதிர்களை விடுவிக்க முடிந்தது என்றால் பின்னர் இதற்கென தனியே பிரத்யேக கம்ப்யூட்டர்களை தேவைப்பட்டன. இப்போது, நிலைமை இன்னும் மோசமாகி பல கம்ப்யூட்டர்களை இணைத்து இன்னும் ஆற்றல் கொண்ட கம்ப்யூட்டர் அமைப்பை உருவாக்க வேண்டியிருக்கிறது.

இந்த கம்ப்யூட்டர்கள் சும்மா செயல்பட முடியுமா? இவற்றை இயக்க மின்சாரம் தேவை அல்லவா? இந்த மின்சார பயன்பாடு திகைக்க வைக்கும் வகையில் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. அண்மையில் கூட, ஈரான் நாட்டில் திடிரென ஒரு பகுதியில் மின்சக்தி பயன்பாடு அதிகமானதால், அதற்கு காரணமாக அமைந்த 1,000 ரகசிய பிட்காயின் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இப்படி பிட்காயின் மைனிங் கம்ப்யூட்டர்கள் மின்சாரத்தை குடிக்கும் இயந்திரங்களாகவும் இருப்பதன் பாதகமான அம்சங்கள் பற்றி பலரும் கவலைப்பட்டு வருகின்றனர்.

இந்த பின்னணியில் தான், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், பிட்காயின் மைங்கிற்கான மின்சக்தி பயன்பாட்டை கணக்கிடுவதற்காக என்றே ஒரு ஆன்லைன் டூலை உருவாக்கி இது தொடர்பான தகவல் அளிக்க ஒரு இணையதளமும் அமைத்துள்ளது.

இந்த தளத்தில் ( https://www.cbeci.org/ ) பிட்காயின் வலைப்பின்னல் பயன்படுத்தும் மின்சக்தியின் அளவு தொடர்ந்து அப்டேட் செய்யப்படுகிறது. மின்சக்தி கிகாவாட்டாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கிகாவாட் என குறிப்பிடும் போது நமக்கு அதன் தீவிரம் தெரியாமல் போகலாம் என்பதால், மின்சக்தி பயன்பாடு அளவை உருவகமாகவும் கணக்கிட்டு சொல்லியிருக்கின்றனர்.

பிட்காயினை உருவாக்க, 64 கிகாவாட் மின்சக்தி தேவைப்படுவதால், இது சுவிட்சர்லாந்து நாட்டின் ஆண்டு மின்சக்தி பயன்பாடு என்று கூறியுள்ளனர். ஆக, பிட்காயினை அகழ்ந்தெடுக்க ஒரு தேசம் பயன்படுத்தும் மின்சகதி தேவைப்படுகிறது. நாளை இது இன்னும் அதிகரிக்கலாம். அதனால் தான் பிட்காயின் மைனிங் பாதிப்பு பற்றி வல்லுனர்கள் கவலைப்படத்துவங்கியுள்ளனர்.

இந்த கணக்குகளும், அளவுகளும் உத்தேசமானவை என்றாலும் பிரச்சனை என்னவோ தீவிரமானது என்பது உண்மை.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *