வெற்றிக்கு வழி வகுக்கும் 6 செயல்களும், அதற்கு வழிகாட்டும் செயலியும்

ivyஐவி லீக்’ எனும் பதத்தை அடிக்கடி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அமெரிக்காவில் உயர்கல்விக்காக அறியப்படும் 8 தனியார் பல்கலைக்கழகங்களை இது குறிக்கிறது. ஐவி லீக்கில் படித்தால் அதன் மதிப்பே தனி என்பது பரவலான கருத்து. இது ஒரு பக்கம் இருக்கட்டும், ’ஐவி லீ’ எனும் பெயரில் ஒருவர் இருந்திருக்கிறார் என்பது தெரியுமா? அவரது பெயரில் அருமையான ஐபோன் செயலி ஒன்று அறிமுகமாகியிருக்கிறது.

சோம்பலை வென்று செயல்திறனை அதிகரிக்க வழிகாட்டும் இணையதளங்களும், செயலிகளும் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. ஐவிலீ செயலியும் இந்த ரகத்தைச்சேர்ந்தது எனாலும், இது கொஞ்சம் விஷேசமானது. ஏனெனில், இந்த செயலி ஐவி லீ முறையில் தனிநபர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ள வழி காட்டுகிறது.

இதற்கு முக்கிய காரணம், ஐவிலீ முறை விஷேசமாக கருதப்படுவது தான். அதில் அப்படி என்ன சிறப்பு என பார்ப்பதற்கு முன், ஒரு சின்ன முன்கதையை பார்க்கலாம்.

சார்லெஸ் ஸ்வாப் (Charles Schwab) என்பவர் பெரும் கோடீஸ்வரர் ஒருவர் இருந்தார். ராக்பெல்லர், ஆண்ட்ரூ கார்னகி வரிசையில் வந்த மாபெரும் தொழிலதிபர்களில் இவரும் ஒருவர். கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் உலகின் முன்னணி கோடீஸ்வரரர்களில் ஒருவராக இருந்த எஃகு மகாராஜாவான சார்லஸ் ஸ்வாப் , அப்போது துடிப்புடன் இருந்த பொருளாதாரத்திற்கு ஏற்ப தனது நிறுவன செயல்திறனை மேம்படுத்த விரும்பினார்.

இதற்காக அவர் ஐவி லீயை நாடினார். ஐவி லீயும் அப்போது ஒரு தொழிலதிபராக வெற்றிக்கொடி நாட்டியிருந்தார். தொழில் ஆலோசகராகவும் இருந்தார்.

அவரிடம், சார்லஸ் ஸ்வாப் , எங்கள் செயல்திறனை அதிகரிக்கவும், என்று ஒற்றை வரியில் கோரிக்கை வைத்தார். ஐவி லீ, நிச்சயம் என ஒரே வார்த்தையில் பதில் அளித்திருக்கிறார்.

அதன் பிறகு, வெப் நிறுவன அதிகாரிகளிடம் சில நிமிடங்கள் பேச அனுமதி கேட்டிருக்கிறார். அதற்கு ஒப்புக்கொண்ட ஸ்வாப் , உங்கள் ஆலோசனை கட்டணம் எவ்வளவு என கேட்டிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தை கட்டணத்தை ஏற்க மறுத்த லீ, மூன்று மாதங்கள் தனது வழிமுறையை பின்பற்றி பார்த்துவிட்டு, அப்போது என்ன தோன்றுகிறதோ அதை கொடுக்கவும் என கூறியிருக்கிறார்.

அதன் பின் மூன்று மாதங்கள் கழித்து லீயை அழைத்த வெப் மிகுந்த மகிழ்ச்சியோடு, 25 ஆயிரம் டாலர்களுக்கான காசோலையை அளித்திருக்கிறார். இன்றைய மதிப்பு படி இது 5 லட்சம் டாலருக்கு சமம் என வைத்துக்கொள்ளலாம். ஏனெனில், இடைப்பட்ட அந்த மூன்று மாத காலத்தில் ஸ்வாப் நிறுவன செயல்திறன் அந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது.

வர்த்தக உலகில் ஊக்கமளிக்கும் உதாரணமாக மேற்கோள் காட்டப்படும், டானிக் கதை இது.

எல்லாம் சரி, அந்த மூன்று மாதங்களில் லீ அப்படி என்ன மாற்றத்தை கொண்டு வந்தார்? பெரிதாக ஒன்றும் இல்லை, நிறுவன அதிகாரிகளுக்கு அவர் ஆறு செயல் மகத்துவத்தை கற்றுக்கொடுத்தார். அதை பின்பற்றியதும் அவர்கள் செயல்திறன் மேம்பட்டது.

unnamedஅது என்ன ஆறு செயல் மகத்துவம்?

ஒவ்வொரு நாள் இறுதியிலும், மறுநாள் செய்ய வேண்டிய ஆறு செயல்களை பட்டியலிட வேண்டும். ஆறு செயல்கள் தான்  அதற்கு மேல் வேண்டாம்.

மறுநாள் காலையில், அந்த ஆறு செயல்களில் முன்னுரிமை அடிப்படையில் ஒரு செயலை தேர்வு செய்து அதை முதலில் செய்ய வேண்டும். அதன் பிறகு மற்ற செயல்களை செய்ய வேண்டும். அன்றைய தின முடிவில், செய்துள்ள செயல்களை ஆய்வு செய்து, செய்யாமல் இருப்பவற்றை மறுநாளுக்கான ஆறு செயல் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான், இந்த வழிமுறையை தினந்தோறும் பின்பற்றினால் போதும், செயல்திறன் மேம்பட்டுவிடும்.

இதுவே ஐவி லீ முன்வைத்த ஆறு செயல் முறை.

செயல்திறன் மேம்பாட்டிற்கு, டு டூ லிஸ்ட் எனும்,செய்ய வேண்டிய செயல்களை தினமும் பட்டியலிட்டு கொள்ளும் முறையே பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. இதற்கு வழிகாட்டும் இணைய சேவைகளும் இருக்கின்றன. செயல்திறன் மிக்க வழி தான் என்றாலும், இதை செயல்படுத்துவதில் சிக்கல் இல்லாமல் இல்லை. பலரும், செய்ய வேண்டிய செயல்களை பட்டியல் மட்டும் போட்டுவிட்டு அவற்றை செய்து முடிக்க வழி தெரியாமல் திண்டாடுவது உண்டு. அல்லது சோம்பல் அவர்களை வென்று விடுவது உண்டு.

இந்த சிக்கலுக்கு தீர்வு காண வழிகள் இல்லாமல் இல்லை. அவற்றில் ஒன்றாக தான், நூற்றாண்டு பழமையான ஐவி லீ முறையை இப்போது ஸ்டார்ட் அப் ஒன்று செயலி வடிவில் தந்திருக்கிறது.

செயல்திறன் மேம்பாட்டை நாடுபவர்கள், இந்த செயலி மூலம் தினமும், மறுநாள் செய்ய வேண்டிய ஆறு செயல்களை பட்டியல் போட்டுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் முன்னுரிமை அடிப்படையில் இந்த செயல்களை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

இந்த முறை நிச்சயம் பலன் அளிக்கும் என்கிறது ஐவி லீ செயலி. ஏனெனில், பெரிதாக செய் பட்டியல்கள் போடாமல், தினமும் ஆறு செயல்கள் என சுருக்கி கொள்வது பின்பற்ற எளிதாக இருக்கும் என்கிறது.

ஐவி லீ முன்வைத்த முறையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, இணைய யுகத்தின் அம்சங்களை இதில் இணைத்திருக்கிறது. ஆறு செயல்களை இதிலே பட்டியலிட்டுக்கொள்ளலாம். முடித்த செயல்களை இதிலேயே குறித்து வைக்கலாம். புதிதாக ஒரு செயல் மனதில் தோன்றினால் அதையும் செயலியில் குறித்து வைத்து பின்னர் தேவைப்படும் போது தேர்வு செய்து கொள்ளலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, செயல்திறன் பயணத்தில் எந்த அளவு முன்னேறியிருக்கிறோம் என்று பார்த்துக்கொள்ளலாம்.

இப்படி நவீன அம்சங்களுடன், பழமையான ஐவீ லீ செயல்திறன் முறையை கலந்து வழங்குகிறது இந்த செயலி. ஐபோன் வைத்திருப்பவர்கள் முயன்று பார்க்கலாம்.

செயலியை நாட: https://getivy.co/

ஆண்ட்ராய்டு பிரியர்கள் கவலைப்பட வேண்டாம். வேறு ஒரு நிறுவனம் ஆண்ட்ராய்டு போன்களுக்கான ஆறு செயல் முறை செயலியை அளிக்கிறது: https://play.google.com/store/apps/details?id=com.finddifference.util.ivylee&hl=en_IN

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *