கொரோனா விழிப்புணர்வுக்கு வழிகாட்டும் இணையதளம்

5e66c08a14f36.imageகொரோனா வைரஸ் ( COVID-19 ) தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரம், அதன் அவசியத்தை மீறி, எந்த அளவு வெறுப்பையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இடைவிடாமல் கேட்கும் இருமல் சத்தமும், போன் பேசுவதற்கு முன் நீளமாக தொடரும் வாசகங்களும், அதன் உச்சரிப்பும் எரிச்சல் தருவதாகவே இருக்கிறது என பலரும் புலம்புகின்றனர்.

இந்த பின்னணியில், கொரோனா தொடர்பான விழிப்புணர்வு செய்தியை எப்படி சுவாரஸ்யமாக, கச்சிதமாக சொல்லலாம் என்பதற்கான அருமையான உதாரணமாக வாஷ்யுவர்லிரிக்ஸ் (https://washyourlyrics.com/) எனும் இணையதளம் அமைந்துள்ளது.

இந்த தளம் என்ன செய்கிறது என்றால், கொரோனா வைரசுக்கான தற்காப்பை சுவை மிகுந்த செயலாக்குகிறது. அதாவது உங்களுக்கு பிடித்தமான பாடலை பாடியபடி, கை கழுவ வைக்கிறது.

கொரோனா வைரசை தடுப்பதற்கான வழிகளில் முக்கியமானதாக மருத்துவர்களால் வலியுறுத்தப்படுவது, முறையாக கை கழுவுவது தான். அதிலும் குறிப்பாக வெளியே சென்று விட்டு வரும் போது, கிருமி நாசினிகள் பயன்படுத்தி இரண்டு கைகளையும் ஒழுங்காக கழுவ வேண்டும்.

சரியாக எப்படி கை கழுவுவது என்பதற்கு தனி வழிமுறையே இருக்கிறது. குறைந்தது 20 நொடிகள் கைகளை கழுவ வேண்டும் என்கின்றனர். இந்த வழி முறைகளை வரைபடங்கள் மூலம் விளக்கும் படக்குறிப்புகளும் இருக்கின்றன.

கையில் கிருமி நாசினியை எப்படி உற்றிக்கொள்ள வேண்டும், அடுத்து ஒவ்வொரு கட்டமாக கைகளை எப்படி கழுவ வேண்டும் என இந்த படத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பார்த்து கை கழுவுவது நல்லது என்றாலும், ஒவ்வொரு முறை கை கழுவுவதற்கும் கொஞ்சம் உற்சாகம் தேவை அல்லவா? இந்த இடத்தில் தான், மேல் சொன்ன இணையதளம் வருகிறது. பயனாளிகள் தங்களுக்கு பிடித்தமான பாடலை பாடிய படி கைகளை கழுவிக்கொள்ள வழி செய்கிறது.

இந்த தளத்தில், பயனாளிகள் தங்களுக்கு பிடித்தமான பாடலை சமர்பித்து, அதற்கேற்ப கைகழுவுவம் விளக்க படத்தை அமைத்துக்கொள்ளலாம். விளக்க வரைபடத்தில், பாடல் வரிகள் தோன்றும். அதைப்பார்த்து பாடிக்கொண்டே கை கழுவலாம்.

வில்லியம் (William (@neoncloth)) என்பவர் இந்த தளத்தை உருவாக்கியிருக்கிறார். மிக மிக எளிமையாக இருக்கிறது இந்த தளம். ஆனால், கொரோனா வைரஸ் பீதி பிடித்தாட்டும் சூழலில், வைரஸை தடுக்க அவசியம் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கையை சுவாரஸ்யமாக செய்ய வழி செய்கிறது.

இந்த தளத்தில் ஆங்கில பாடல்களை தான் கேட்க முடியும் என நினைக்கிறேன். நம்மூர் பாடலை எல்லாம் தேர்வு செய்யும் வசதி இல்லை என்பது ஒரு குறை தான். ஆனால், அறிமுகமான வேகத்தில் இந்த தளம் இணையத்தில் வைரலாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.5e66c08a14f36.image

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *