வலை 3.0- உள்ளூர் சந்திப்புகளுக்கான இணையதளம்

meஇணையம், ஒரு கற்பனை வெளியை உருவாக்கி அதில் மனிதர்களை சந்திக்க வைக்கிறது. உரையாட வழி செய்கிறது. கருத்துகளை பரிமாறிக்கொள்ள வைக்கிறது. இணையம் உருவாக்கும் இந்த வெளியை மெய்நிகர் சமூகம் என வர்ணிக்கின்றனர். இது இணையத்தின் நிகரில்லாத ஆற்றல் தான்.

இப்படி அறிமுகம் இல்லாதவர்களும், எங்கோ இருப்பவர்களும், இணைய வெளியில் சந்தித்து நட்பு கொள்ள இணையம் வழி செய்தாலும், இதன் பக்கவிளைவாக நிஜ வாழ்க்கையில் சகமனிதர்களை விலகியிருக்கச்செய்வதாக விமர்சனமும் இருக்கிறது. இணையத்தில் மூழ்கிவிடும் மனிதர்கள் நடைமுறை வாழ்க்கையில், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களை கூட கண்டுகொள்ளாமல் ஓடிக்கொண்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இணையத்தின் இந்த இன்னொரு பக்கம் குறித்து சமுகவியல் வல்லுனர்களும், உளவியல் வல்லுனர்களும் ஆழமான கவலையை வெளிப்படுத்தி இது தொடர்பாக ஆய்விலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த பின்னணியில், தான் 2002 ’மீட்அப்’ இணையதளம் உதயமானது. பள்ளி பருவ நண்பர்களை மீண்டும் சந்திக்க வழி செய்த கிளாஸ்மேட் போன்ற சமூக வலைப்பின்னல் வகை இணையதளமாக ’மீட்அப்’ உருவாக்கப்பட்டிருந்தது.

மீட் அப் தளம் உருவாக்கப்பட்ட காலமும், அது உருவாக்கப்பட்டதற்கான நோக்கமும் முக்கியமானது. 2001 செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகர இரட்டை கோபுரம் தீவிரவாதிகளால் விமானத்தின் மூலம் தகர்க்கப்பட்டது.

அமெரிக்க மண்ணில் நடத்தப்பட்ட இந்த முதல் தாக்குதல், அமெரிக்கர்களை திகைப்பில் ஆழ்த்தியதோடு, தங்கள் கூட்டைவிட்டு வெளியே வர வைத்து, அக்கம்பக்கத்து மனிதர்களையும் கவனிக்க வைத்தது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு, அதுவரை ஒருவரை ஒருவர் பார்த்து பேசியிராத நியூயார்க்வாசிகள் பலர், பரிவோடு மற்றவர்களை நலம் விசாரித்ததோடு, உதவி தேவைப்பட்டவர்களுக்கு நேசக்கரமும் நீட்டினர்.

நெருக்கடியான சூழலில் மக்கள் மத்தியில் உண்டாகியிருந்த இந்த சமூக தன்மையை, நியூயார்க்வாசியான ஸ்காட் ஹைபர்மேன் (Scott Heiferman ) நெகிழ்ச்சியுடன் கவனித்தார். தொழில்முனைவோரான ஹைபர்மேன், ஏற்கனவே ஒரு சில இணைய நிறுவனங்களை துவக்கி நடத்தியிருந்தார். இந்த காலகட்டத்தில், தனது நண்பர் மேட் மீக்கர் என்பவருடன் இணைந்து புதிய நிறுவனம் துவக்குவது பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், இரட்டை கோபுர தாக்குதல் அவருக்கு கண் திறப்பாக அமைந்ததது. மக்கள் மத்தியில் சமூக உணர்வின் தேவையை தீவிரமாக உணர்ந்தார். அதிலும் குறிப்பாக உள்ளூர் மக்கள் பரஸ்பரம் சந்தித்து பேசும் வாய்ப்பை உருவாக்கும் வகையில் சமூகமாக குழுமும் வாய்ப்பை உருவாக்கித்தருவதன் அவசியத்தையும் உள்ளுக்குள் உணர்ந்தார்.

அதோடு ஏற்கனவே அவர் வாசித்திருந்த, அமெரிக்க சமூகவிய அறிஞர் ராபர்ட் புட்னம் எழுதியிருந்த பவுளிங் அலோன் எனும் புத்தககமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்க கலாச்சாரத்தில், உள்ளூர் சமூகங்களின் சீரழிவு பற்றி பேசிய இந்த புத்தகம், சமூகமாக அணி திரள்வதன் அவசித்தையும் வலியுறுத்தியது.

இந்த இரண்டு தாக்கத்தின் விளைவாக, ஹைபர்மேன், மக்கள் உள்ளூர் அளவில் சந்தித்து உறவை வளர்த்துக்கொள்ள வழி செய்ய வேண்டும் என உணர்ந்தார். மக்களை விலகியிருக்கச்செய்வதாக கருதப்படும் இணையத்தை பயன்படுத்தியே இதற்கான வழியை உருவாக்கலாம் என நம்பினார்.

இதன் பயனாக மீக்கர் மற்றும் வேறு ஒரு நண்பருடன் இணைந்து ’மீட்அப்’ தளத்தை உருவாக்கினார்.

உள்ளூர் குழு சந்திப்புகளை திட்டமிடும் இணையதளமாக இது அமைந்திருந்தது. அதாவது, இந்த தளம் வழியே திட்டமிட்டு, நிஜ உலகில் நேரடியாக சந்திப்பது சாத்தியமானது. இந்த வகை சந்திப்பு ’மீட்அப்’ என குறிப்பிடப்பட்டன. இவற்றை ஏற்பாடு செய்வதும் எளிதாக இருந்தது.

சந்திப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் நுழைந்து, அதற்கான குழுவை உருவாக்கி மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கலாம். சந்திப்பின் நோக்கமும், கருப்பொருளும் என்னவாக வேண்டுமானால் இருக்கலாம். அது குழுவை உருவாக்குபவரின் விருப்பம். இப்படி உருவாக்கப்படும் குழுவின் நோக்கத்துடன் ஒத்துப்போகிறவர்கள் யார் வேண்டுமானாலும், சந்திப்பில் பங்கேற்கலாம். இதற்கு வசதியாக, சந்திப்பிற்கான இடம் மற்றும் நேரத்தை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும்.

உதாரணமாக, ஆக்‌ஷன் திரைப்பட பிரியர்கள், அதிரடி படங்கள் பற்றி பேசுவதற்காக என்று ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யலாம். ஆக்‌ஷன் பட பிரியர்கள் அதில் ஆர்வத்துடன் பங்கேற்கலாம். இலக்கிய ஆர்வலர்கள், தாங்கள் வாசித்த நாவல்கள் பற்றி விவாதிக்க சந்திக்கலாம். விளையாட்டு ஆர்வலர்கள், தங்களுக்கு பிடித்த விளையாட்டு பற்றி விவாதிக்க சந்திக்கலாம். சமூக ஆர்வலர்கள், உள்ளூர் பிரச்சனைக்கு தீர்வு காண சந்திக்கலாம். இளம் அம்மாக்கள் ஒன்று கூடி குழந்தை வளர்ப்பு பற்றி பேசலாம். பழைய புத்தகங்கள் அப்பது பழைய சிடிக்கள் சேகரிப்பவர்கள், ஒன்றாக சந்தித்து தங்கள் ஆர்வத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

சந்திபிற்கான நோக்கம் எதுவாக வேண்டுமாலும் இருக்கலாம். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரும் இணைய மேடையாக மீட் அப் தளம் செயல்பட்டது. இந்த சந்திப்புகளை திட்டமிட்டு, ஏற்பாடு செய்வதற்கான எளியை வழியையும் வழங்கியது.

உள்ளூர் மக்கள் சந்திக்க வேண்டும், ஒரு குழுவாக தங்களுக்குள் சமூக உணர்வோடு செயல்பட வேண்டும் என்பது மட்டுமே முக்கியம் எனும் அடிப்படையில் ‘மீட்அப்’ தளம் செயல்பட்டது. இணையவாசிகளும் ஒருவிதத்தில் இத்தகைய தளத்தை தான் எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இந்த தளத்தை தழுவிக்கொண்டனர். இதன் பயனாக, அமெரிக்க நகரங்கள் முழுவதும் மீட் அப்கள் உருவாயின.

பலவிதமான ஆர்வம் கொண்ட மக்கள், அந்த ஆர்வத்தின் அடிப்படையில் சந்தித்துக்கொண்டனர். இணையம் வழியே திட்டமிட்டு, நிஜத்தில் இரத்தமும் சதையுமாக சந்தித்து பேசிக்கொள்ளலாம் எனும் எண்ணம் எல்லோரையும் கவர்ந்தது. வெவ்வேறு காரணங்களுக்காக குழுவாக இணைந்து செயல்பட விரும்பியவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொண்டனர்.

உள்ளூர் மக்கள் தனிப்பட்ட விருப்பத்துடன் சந்திக்கொண்டனர். ஒத்த கருத்தை பரிமாறிக்கொள்ள சந்தித்தனர். வர்த்தக நோக்கத்துடன் சந்தித்தனர். அரசியல் நோக்கத்துடன் சந்தித்தனர். குழு உணர்வும், நட்பும் இந்த சந்திப்புகளின் அடிப்படையாக அமைந்தாலும், அவை எண்ணற்ற விதங்களில் பயன்பட்டன. அமெரிக்கா மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் இந்த தளம் பிரபலமானது. உலகம் முழுவதும் உள்ளூர் மக்கள் தங்கள் பகுதிகளில் குழுமி நட்பை வளர்த்துக்கொள்ள மீட் அப்கள் நடத்த வழி செய்தது.

மீட் அப்களில் விருப்பம் உள்ளவர்கள் தங்களுக்கு ஆர்வம் உள்ள குழுக்களை கண்டறிவதற்கான தேடல் வசதியையும் தளம் வழங்கியது. நாடுகள் மற்றும் நகரங்களை குறிப்பிட்டு அங்கு நடைபெறும் நிகழ்வுகளை தேடும் வசதியையும் அளித்தது. மேலும், முன்னணி மீட் அப் நிகழ்வுகளையும் முகப்பு பக்கத்தில் பட்டியலிட்டு வழிகாட்டியது. மீட் அப்களில் முன்னணி நகரங்களின் பட்டியலும் இடம் பெற்றது.

இதனிடையே, 2004 ல், அமெரிக்காவில், ’ஹாவர்டு டீன்’ எனும் அரசியல் தலைவரின் ஆதாரவாளர்கள் தங்கள் தரப்பில் ஆதரவு திரட்டுவதற்காக மீட் அப் சேவையை பயன்படுத்த துவங்கினர். ஹாவர்டு டீன், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் வாய்ப்பை பெறுவதற்கான போட்டியில் இருந்தார். இதற்கான பிரைமரி எனப்படும் முதல் கட்ட தேர்தலுக்கான பிராச்சாரத்தில் தான் அவரது ஆதரவாளர்கள் தங்களுக்குள் சந்திப்புகளை ஏற்பாடு செய்ய மீட் அப் சேவையை பயன்படுத்திக்கொண்டனர்.

டீன் அப்போது ஜனநாயக கட்சியில் சாதாரண வேட்பாளராக மட்டுமே இருந்தார். கட்சியில் அவரைவிட பிரபலமான வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர். ஆனால், வெகு விரைவில் போட்டி வேட்பாளர்களை எல்லாம் பின்னுக்குத்தள்ளி, டீன் முன்னிலை பெற்று தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார். நாடு முழுவதும் உள்ள ஊடகங்கள் அவரது பிரச்சார எழுச்சி பற்றி செய்தி வெளியிட்டன. எங்கும் டீன் பற்றி தான் பேச்சாக இருந்தது.

டீன் ஆதாரவாளர்கள் மீட் அப் தளத்தை திறம்பட பயன்படுத்திக்கொண்ட விதமே இதற்கு காரணமானது. டீனுக்கு ஆதாரவாக நிதி திரட்டவும், ஆதரவு சேர்க்கவும் அவர்கள் உள்ளூர் அளவில் குழு அமைத்து, மீட் அப்களை நடத்தினர். இப்படி ஒவ்வொரு ஊரிலும் டீன் ஆதரவு மீட் அப்கள் நடைபெற்றன. இதை அறிந்து மேலும் பல டீன் ஆதரவாளர்கள் மீட் அப்களை நடத்தினர். ஒரு அலையென அமெரிக்கா முழுவதும் டீன் ஆதரவு மீட் அப்கள் நடைபெற்றதோடு, தேர்தல் நிதியும் குவிந்தது.

இந்த நிகழ்வுகள், ஊடகங்கள் கவனத்தை ஈர்த்தன. தேர்தல் பிரச்சாரத்திற்கும், நிதி திரட்டவும் டீன் தரப்பில் இணையம் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டதை ஊடகங்கள் வியந்து எழுதின. இது அவரது பிரச்சாரத்திற்கு மேலும் உத்வேகத்தை அளித்தது. தொலைக்காட்சியும் பாரம்பரிய விளம்பர உத்திகளும் ஆதிக்கம் செலுத்திய தேர்தல் களத்தில், இணையம் பெரிய அளவில் பிரச்சார சாதனமாக பயன்படுத்தப்பட்ட நிகழ்வாக இது அமைந்தது.

2004 அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக தேர்வாகும் வாய்ப்பை டீன் பெறவில்லை என்றாலும், இணையம் மூலம் துடிப்பான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கான வெற்றிகரமான உதாரணமாக அவர் கருதப்படுகிறார். 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் பொய்ச்செய்திகளும், சமூக ஊடகம் சார்ந்த விளம்பரங்களும் மோசமான தாக்கம் செலுத்தியது இணைய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் இணையத்தின் பங்களிப்பிற்கான நல்லவிதமான உதாரணமாக டீன் பிரச்சாரம் விளங்குகிறது.

அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு, வெகு இயல்பாக அவர்களை அணிய திரளச்செய்வதை இணையம் சாத்தியமாக்கும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்தியது. மீட் அப் தளமும், அதன் இணைப்பு தன்மையுமே இதற்கு அடிப்படையாக அமைந்தன. இதே அம்சங்கள் இன்றளவும், இணையத்தின் வெற்றிகரமான சமூக வலைப்பின்னல் தளமாக மீட் அப்பை நிலை நிறுத்தியிருக்கிறது.

இணையதளம் : meetup.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *