மீட் அப் இணையதளமும், கொரோனா கால சோதனையும்!

என்னடா இது, ’மீட் அப்’ க்கு வந்த சோதனை என்று புலம்பும் நிலையை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது. ’மீட் அப்’ என இங்கே குறிப்பிடுவது, இணையம் மூலம் நிஜ சந்திப்புகளை ஏற்பாடு செய்ய வழிகாட்டும் ’மீட் அப்’ இணையதளத்தை தான்.

’மீட் அப்’ இணையத்தின் அடையாளமாக திகழும் முன்னோடி இணையதளங்களில் ஒன்று. ஆன்லைன் உலகையும், ஆப்லைன் உலகையும் இணைப்பது தான் இதன் சிறப்பு. ஆம், நேரடி கூட்டங்களை இணையம் மூலம் ஏற்பாடு செய்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. இத்தகைய சந்திப்புகளே மீட் அப்கள் என குறிப்பிடப்படுகின்றன.

கலை, இலக்கியம், தொழில்நுப்டம் என குறிப்பிட்ட விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்கள், ஒரு குழுவாக இணைந்து தங்களுக்கான சந்திப்புகளை நடத்திக்கொள்ளலாம். மீட் அப், சந்திப்புகளை திட்டமிடுவதற்கான பாலம் மட்டும் தான், மற்றபடி சந்திப்புகள் நிஜ உலகில் நடைபெறும்.

எல்லாம் ஆன்லைன் மயமாகி கொண்டிருந்த நிலையில், ஆன்லைன் மூலம் நிஜ உலக தொடர்பையும், கருத்து பரிமாற்றத்தையும் உண்டாக்கி கொள்ள வழி செய்து அதன் காரணமாகவே மீட் அப் பிரபலமானது.

மீட் அப் பின்னே வலுவான ஒரு இணைய சமூகம் இருக்கிறது. சென்னை உள்ளிட்ட நம்மூர் நகரங்களில் கூட மீட் அப்களை நடத்தும் துடிப்பாக குழுக்கள் இருக்கின்றன.

ஆனா, உலகையே தலைகீழாக மாற்றியிருக்கும் கொரோனா வைரஸ் ’மீட் அப்’ சேவையின் அடிப்படையையே அசைத்துப்பார்க்கும் நிலை. யோசித்துப்பாருங்கள், வைரஸ் பரவலை தடுக்க வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் நிலையில், மீட் அப்களை எப்படி நிகழ்த்துவது? சோதனை தான் அல்லவா?

ஆனால், மீட் அப் சேவை கொரோனா சூழலுக்கு ஏற்ப மாறியுள்ளது. இப்போதைக்கு ஆன்லைனிலேயே சந்திப்புகளை ஏற்பாடு செய்யுங்கள் என்கிறது இந்த இணையதளம். அதாவது, வீடியோ வழி கூட்டங்களை நடத்திக்கொள்ள ஊக்குவிக்கிறது. ஆன்லைனில் கூட்டங்களை எப்படி நடத்துவது என்றும் வழிகாட்டுகிறது.

  • மீட் அப் சேவை உருவான கதையை அறிய:

வலை 3.0- உள்ளூர் சந்திப்புகளுக்கான இணையதளம்http://cybersimman.com/2020/04/26/web-58/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *