அசையும் படங்களை தேடுவதற்கான தேடியந்திரம்

giஎல்லாம் வல்ல கூகுள் என்று சொல்லப்படுவதை மீறி, ஒவ்வொரு வகையான தேடலுக்கும் அதற்கேற்ற தனி தேடியந்திரம் தேவை என நீங்கள் உணரும் தருணம் ஏற்படலாம். ஜிப்கள் என சொல்லப்படும் முடிவில்லா அசையும் படங்களை தேடும் நிலை ஏற்பட்டால் இதை உணரலாம். அப்போது நீங்கள் நாடக்கூடிய தேடியந்திரம் ‘ஜிஃபி’யாக தான் இருக்கும்.- https://giphy.com/

ஜிஃபி பற்றி பார்ப்பதற்கு முன் ஜிப்கள் பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம்.

அசையும் படங்கள் என அழைக்க கூடிய ஜிப்களை இணையத்தில் எல்லா இடங்களிலும் பார்க்கலாம். பேஸ்புக்கில் நச்சென அமைந்திருக்கும் பதிவிற்கான பின்னூட்டங்களில், லியானார்டோ சிரித்துக்கொண்டே கைதட்டுவது போல ஒரு படம் வரும் அல்லவா? அதில் லியானார்டோ கைத்தட்டிக்கொண்டே இருப்பார். இந்த வகை தொடர் நிகழ்வு படங்களே ஜிப்கள் என அழைக்கப்படுகின்றன.

இணையத்தில் ஜிப்களை எப்படி உச்சரிப்பது என்பது தொடர்பாகவும் ஒரு தொழில்நுட்ப பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போதைக்கு நாம் ஜிப்களை தேடும் வழியை மட்டும் பார்க்கலாம்.

இமேஜ் என சொல்லப்படக்கூடிய உருவ படம் அல்லது புகைப்படத்தை பயன்படுத்துவதை விட, ஜிப் வடிவிலான படத்தை பயன்படுத்துவது, சுவாரஸ்யமானது. அதனால் தான் வாட்ஸ் அப் உரையாடலில் துவங்கி இணையத்தில் எல்லா இடங்களிலும் ஜிப்களின் ஆதிக்கம்.

இவ்வளவு ஏன், இதழியல் நோக்கிலும், தேர்ந்த கதை சொல்லலுக்கு அல்லது செய்தி அளித்தலுக்கு ஜிப்கள் ஏற்றதொரு சாதனமாக கருதப்படுகிறது.

ஜிப்களின் பெருமைகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம் என்பதால், அவற்றை தேடுவதற்கான தேவையையும் எளிதாக உணர்ந்து கொள்ளலாம். சரி, ஜிப்களை எப்படி தேடுவது? கூகுளில் தேடலாம் தான். ஆனால், கூகுள் ஜிப்களை தனியே பட்டியலிடாமல், படங்கள் எனும் தலைப்பின் கீழ் தான் முன்வைக்கிறது.

இதற்கு பதிலாக ஜிஃபியில் தேடிப்பார்த்தால் அசத்திவிடும். ஏனெனில் ஜிப்களுக்கான பிரத்யேக தேடியந்திரம் இது.

ஜிஃபியில், ஜிப்கள் மற்றும் ஸ்டிக்கர்களை தேடலாம். நாம் தேட விரும்பும் ஜிப் தொடர்பான வார்த்தையை டைப் செய்ததுமே, பொருத்தமான ஜிப்கள் பட்டியலிடப்படுகின்றன. இந்த பதம் தொடர்பாக இணையத்தில் பகிரப்பட்ட ஜிப்கள் பெரும்பாலும் பட்டியலிடப்படுவதை பார்க்கலாம்.

இந்த பட்டியலில் தேவையானதை கிளிக் செய்ததும், அந்த குறிப்பிட்ட ஜிப்பை உருவாக்கியவர் உள்ளிட்ட விவரங்களை தனி பக்கமாக பார்க்கலாம். அந்த ஜிப்பை லைக் செய்வது, இணைப்பை பெறுவது, நம் பங்கிற்கு சமூக ஊடகத்தில் பகிர்வது உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. தவிர தொடர்புடைய ஜிப்கள் மற்றும் பரிந்துரைகளையும் பார்க்கலாம்.

இந்த தேடியந்திரத்தின் அருமையை உணர வேண்டும் என்றால், வடிவேலு என்று தேடிப்பார்க்கவும்: https://giphy.com/search/vadivelulu

giphyஇந்த தளம், ஜிப் தேடியந்திரம் மட்டும் அல்ல. ஜிப்களுக்கான வலைவாசல் போன்றதும் தான். ஏனெனில் இதன் முகப்பு பக்கம் அத்தனை செறிவாக இருப்பதை உணரலாம்.

முகப்பு பக்கத்தில், இன்றைய ஜிப்கள், நேற்றைய ஜிப்கள் என வரிசையாக ஜிப்களின் பட்டியலையும் பரிதுரைகளையும் பார்க்கலாம். ஜிப் வீடியோக்களையும் பார்க்கலாம். எந்த ஜிப்பை கிளிக் செய்தாலும், அதை உருவாக்கியவர் விவரத்துடன், அது எத்தனை முறை பார்க்கப்பட்டது என்ற விவரத்தையும் பார்க்கலாம்.

ஜிப்கள், பொழுதுபோக்கு, எதிர்வினைகள், கலைஞர்கள், விளையாட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் ஜிப் பிரியர்கள் தங்கள் ஆக்கங்களையும் பதிவேற்றலாம். புதிய ஜிப்களையும் உருவாக்கலாம். பார்க்க அப்லோடு மற்றும் கிரியேட் வசதி. ஜிப் உருவாக்குனர்களை பொருத்தவரை, இந்த தளம் சமூக ஊடக சேவை போலவும் அமைந்திருப்பதை உணரலாம்.

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் நவீன தேடியந்திரங்களில் ஒன்று என சொல்லக்கூடிய ஜிஃபியை, 2013 ல், அலெக்ஸ் சுங் மற்றும் ஜேஸ் கூக் ஆகியோர் உருவாக்கினர். துவக்கத்தில் தூய ஜிப் தேடியந்திரமாக அறிமுகமான ஜிஃபி பின்னர், ஜிப்களுக்கான எல்லாமுமாக உருவாகியிருக்கிறது. அதனால் தான் சமீபத்தில் பேஸ்புக் இந்த தேடியந்திரத்தை விலைக்கு வாங்கியது.

இணைய மலர் மின்மடலில் எழுதியது: https://cybersimman.substack.com/p/–bf7

இணைய மலர் பதிவுகளை உங்கள் மெயிலி பெற , மின்மடலில் இணையுங்கள்: https://cybersimman.substack.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *