வலை 3.0- வலை வாசல்களின் காலம்

abஎல்லா தகவல்களையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வழி செய்ய வேண்டும் என்பதே இணையத்தில் பின்பற்றப்பட்டு வந்த விதியாக இருந்தது. அப்போது வலைவாசல்கள் ஆதிக்கம் செலுத்தின. இந்த காலகட்டத்தில் உருவாகி வளர்ந்து பின் இணைய விருட்சங்களில் ஒன்றாக வேரூன்றிய தளம் தான் அபவுட்.காம். (About.com).

இந்த தளம் இப்போது அதன் பழைய வடிவில் இல்லை. அதன் பெயரும் இல்லாமல் போய்விட்டது. 2017 ம் ஆண்டு அபவுட்.காம், டாட்டேஷ் எனும் இணைய நிறுவனத்தால் வாங்கப்பட்டு அதற்குள் ஐக்கியமாகி வேறு வடிவம் பெற்று விட்டது.

அபவுட்.காம் உருமாற்றத்தை இழப்பு என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், இணையத்தில் அதிகம் நாடப்பட்ட இணையதளங்களில் ஒன்றாக இது விளங்கியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பலரும் அபவுட்.காம் தளத்திற்கு நேரடியாக விஜயம் செய்தது இல்லை. மாறாக, அந்த தளத்தை அறிந்திராத நிலையிலும் கூட அதை பயன்படுத்தினர்.

எப்படி என்றால், இணையத்தில் தகவல்களை தேடும் போது, கூகுள் உள்ளிட்ட தேடியந்திரங்கள் பொருத்தமான முடிவுகளை கொண்டதாக இந்த தளத்தை முன்னணியில் பட்டியலிட்டன. இணையவாசிகளும் ஆர்வத்துடன் இந்த தளத்தில் நுழைவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

ஆனால், அபவுட்.காம் தளத்திற்கு வருகை தந்த இணையவாசிகள் பெரும்பாலும் ஏமாற்றத்தை சந்திதத்தில்லை. ஏனெனில் அவர்களுக்கு திருப்தி அளிக்கும் ஏதோ ஒரு தகவல் அந்த தளத்தில் நிச்சயம் இருந்தது. அதோடு, ஆர்வம் இருந்தால் மேலும் தெரிந்து கொள்ளத்தூண்டும் வகையில் எண்ணற்ற தகவல்களையும் கொண்டிருந்தது.

இதற்கு முக்கிய காரணம், அபவுட்.காம் சிறந்த இணைய களஞ்சியமாக இருந்தது தான். இந்த தளத்தில் எல்லா வகையான தலைப்புகளிலும் கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. அவை பொருத்தமான பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றில், வழிகாட்டி பாணி கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. கவனத்தை ஈர்க்கும் தகவல் துளிகளும் இருந்தன. எனவே, பயனாளிகள் தங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப எதை வேண்டுமானாலும் கிளிக் செய்து படிக்கலாம்.

இந்த வகையில் இணையத்தில் நிறுவப்பட்ட முதல் இணையதளங்களில் ஒன்று என அபவுட்.காமை கருதலாம். இந்த தளம் உருவான போது, இணையத்தில் யாஹு.காம் முதன்மை தளங்களில் ஒன்றாக இருந்தது. யாஹுவை, இணையதளம் என சுருக்கி விட முடியாது. அது வலைவாசலாக விளங்கியது. அதாவது, குறிப்பிட்ட நோக்கிலான தகவல்களை மட்டும் தரும் இணையதளமாக இல்லாமல், எல்லா வகையான தகவல்களையும் ஒரே இடத்தில் அளிக்க கூடியதாக இருந்தது.

இணையத்தில் தினமும் புதிதாக அறிமுகமாகி கொண்டிருந்த இணையதளங்களை தொகுத்தளிக்கும் இணைய கையேடாக தான் யாஹு துவங்கியது என்றாலும், படிப்படியாக செய்திகள், தகவல்கள் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள உதவும் தளமாக அது உருவானது. இந்த வகை தளங்களே வலைவாசல் என அழைக்கப்பட்டன. ஆங்கிலத்தில் போர்டல்கள் என இவை குறிப்பிடப்பட்டன.

ஒரு வலைவாசலாக யாஹு இணையத்தின் நுழைவு வாயிலாக கருதப்பட்ட நிலையில், இந்த பிரிவில் போட்டியும் அதிகரித்தது. பல நிறுவனங்கள் வலைவாசல் தளங்களை நிறுவின. மைக்ரோசாப்ட் எம்.எஸ்.என்.காம் எனும் பெயரில் வலைவாசலை துவக்கியது. டிஸ்னி நிறுவனம் தன் பங்கிற்கு கோ.காம் எனும் வலைவாசலை துவக்கியது. லைகோஸ் உள்ளிட்ட தேடியந்திரங்கள் கூட வலைவாசலாக மாறின.

இந்த பின்னணியில், 1996 ம் ஆண்டு ஸ்காட் கர்னிட் (Scott Kurnit ) என்பவர் மைனிங் கம்பெனி எனும் இணைய நிறுவனம் மூலம் தகவல் கட்டுரைகளுக்கான இணையதளம் ஒன்றை துவக்கினார். பொதுவாக எல்லோருக்கும் ஆர்வம் இருக்க கூடிய கட்டுரைகளின் இருப்பிடமாக இந்த தளம் அமைந்திருந்தது. இணையத்தை தேடி வருபவர்களை ஈர்க்க கூடிய தகவல்களை கொண்டிருக்கும் விதமாக இது அமைந்திருந்தது. பின்னர் கூகுள் போன்ற தேடியந்திரங்கள் மூலம் இணையவாசிகள், தகவல்களை கண்டறிவது பிரபலமான போது, இந்த தன்மையே அவர்களை ஈர்க்கவும் உதவியது.

1998 ம் ஆண்டு இந்த தளம் அபவுட்.காம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது இது இணைய களஞ்சியம் எனும் தன்மையை பெற்றிருந்தது. நிறுவனர் கர்டிஸ், பல துறை வல்லுனர்களை பணிக்கு அமர்த்தி துறை சார்ந்த கட்டுரைகளையும், வழிகாட்டி குறிப்புகளையும் எழுத வைத்தார். இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இவை எல்லாம் இந்த தளத்திற்குள், தனித்தனி தளம் போல அமைந்திருந்தன. பின்னர் தலைப்புகள் ஆயிரத்துக்கும் குறைவாக குறைக்கப்பட்டன.

இணையம் வெகுமக்கள் மத்தியில் வளர்ச்சி அடைந்த காலத்தில் பயனுள்ள தகவல்களை பெறுவதற்கான இடமாக அபவுட்.காம் அறியப்பட்டது. இந்த கால கட்டத்தில் நிகழ்ந்த தேடியந்திரங்கள் வளர்ச்சியும் இதற்கு உதவியது.

இணைய களஞ்சியமான விக்கிபீடியா உருவாகாத கால கட்டம் அது. அந்த சூழலில் அபவுட்.காமே இணைய களஞ்சியமாக ஈர்த்தது. குறிப்பிட்ட தலைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்டவை போன்ற கட்டுரைகள் அபவுட்.காம் கொண்டிருந்தாலும் அவற்றின் தரம் மோசமாக இல்லை.

பெரும்பால இணையதளங்கள் செய்திகளிலும், துறை சார்ந்த தகவல்களிலும் கவனம் செலுத்திக்கொண்டிருந்த போது, அபவுட்.காம், எல்லா வகையான பயனாளிகளையும் ஈர்க்க கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது. இதற்கு ஏற்ற இணைய வடிவத்தையும் கண்டறிந்து தகவல்களையும், கட்டுரைகளையும் வழங்கியதால் வெற்றியும் பெற்றது.

இடைப்பட்ட காலத்தில் இரு முறை வேறு நிறுவனங்களால் வாங்கப்பட்ட ( நியூயார்க் டைம்ஸ் ) அபவுட்.காம், இறுதியில் டாட்டேஷ் வசமானது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *